பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் 269

செய்ய கமலத் தடம்பனையும் * * ,

செழுநீர்த் தடமும் புடைஉடைத்தாய்ப்

பொய்தீர் வாய்மை அருமறைநூல் புரிந்த சீலப் புகழதனால்

எய்தும் பெருமை எண்டிசையும்

ஏறுர் ஏமப் பேறுாரால்."

வையம் - இந்த மண்ணுலகத்தை. புரக்கும் - ஆட்சி புரிந்து பாதுகாக்கும். தனி - ஒப்பற்ற, ச் : சந்தி. செங்கோல் - செங்கோலைச் செ லு த் து ம். வளவர் . சோழ அரசர்கள் ஆண்டு வந்த ஒருமை பன்மை மயக்கம். பொன்னி - பொன்னைக் சொழிக்கும் காவிரியாறு: பொன்னி பொன் கொழிக்கும்' என்று வருதலைக் காண்க. த் : ச ந் தி. திரு - பாயும் செ ல் வம் மலிந்த, நாட்டு . சோழநாட்டில், ச் : சந்தி, செய்ய கமல - செந் தாமரை மல்ர்கள் மலர்ந்திருக்கும். ஒருமை பன்மை மயக்கம். த் : சந்தி, தடம் - விசாலமாக விளங்கும். பணையும் - வயல்களும்; ஒருமை பன்மை மயக்கம். செழுசெழிப்பைப் பெற்ற. நீர் - நீர் நிரம்பிய. த் சந்தி, தடமும் - தடாகமும். புடை - தன்னுடைய பக்கங்களில்: ஒருமை பன்மை மயக்கம். உடைத்தாய் - பெற்றதாகி, ப் : சந்தி. பொய் - பொய் வார்த்தைகளைப் பேசுவதி லிருந்தும்; ஒருமை பன்மை மயக்கம்; ஆகுபெயர். தீர் - அகன்ற வாய்மை - உண்மைவார்த்தைகளையே பேசும்: ஒருமை பன்மை மயக்கம். அரு ஒதுவதற்கு அருமையாக இருக்கும். மறை - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங் களாகிய, ஒருமை பன்மை மயக்கம். நூல். சாத்திரங் களை ஒருமை பன்மை மயக்கம். புரிந்த - விரும்பி அத்தியயனம் செய்து நிறைவேற்றிய, சீல - நல்ல குனங் களைப் பெற்றதனால், ஒருமை பன்மை மயக்கம். ப் : சந்தி. புகழதனால் - உண்டாகிய புகழினால். அது : பகுதிப் பொருள் விகுதி. எய்தும் அடைந்திருக்கும்,