பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 5 - ஆவதாக உள்ள திருகின்ற சருக்கத்தில் வரும் 7 - ஆவது புராணம் நமிநந்தியடிகள் நாயனார் புராணம். அதில் வரும் முதற் செய்யுளின் உள்ளுறை வருமாறு : - - -

"இந்த மண்ணுலகத்தை ஆட்சி புரிந்து பாதுகாக்கும் ஒப்பற்ற செங்கோவைச் செலுத்தும் சோழ அரசர்கள் ஆண்ட பொன்னைக் கொழிக்கும் காவிரியாறு பாயும் செல்வம் மலிந்த சோழநாட்டில் செந்தாமரை மலர்கள் மலர்ந்திருக்கும் விசாலமான வயல்களும், செழிப்பைப் பெற்ற நீர் நிரம்பிய தடாகமும், தன்னுடைய பக்கங்களில் பெற்றதாகிப் பெர்ய் வார்த்தைகளைப் பேசுவதிலிருந்தும் அகன்ற உண்மை வார்த்தைகளையே பேசும் ஒதுவதற்கு அருமையாக இருக்கும் இருக்கு வேதம், யஜுர் வேதம். சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதகி களாகிய சாத்திரங்களை விரும்பி அத்தியயனம் செய்து நிறைவேற்றிய ந ல் ல பண் புக ைள ப் பெற்றதனால் உண்டாகிய புகழினால் தான் அடைந்திருக்கும் பெருமை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வட மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு. என்னும் எட்டுத் திசைகளிலும் ஏறிய சிவத்தலம் ஏமப்பேறுார் என்னும் ஊர் ஆகும். பாடல் வருமாறு : -

வையம் புரக்கும் தனிச்செங்கோல்

வனவர் பொன்னித் திருகாட்டுச்