பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம் 2岱”

இருபி றப்புடை அக்தனர்

ஏறுயர்த் தவர்.பால் ஒருமை உய்த்துணர் கமிகக்தி

யார்தொழில் உரைப்பாம்.'

இது சேக்கிழார் அடுத்து வரும் நமிநந்தி யடிகள் நாயனார். புராணத்திற்குத் தோற்றுவாயாகப் பாடி பருளியது. தரு - இரப்பவர்களுக்கு சயும். தொழில் - தொழிலாகிய திருத்தொண்டினைப் புரியும். திரு . அழகிய: செல்வத்தைப் பெற்ற' எனலும் ஆம். மறையவர் - வேதியராகிய திருநீலநக்க நாயனாரும், சாத்த மங்கையினில் - சாத்தமங்கை என்னும் சிலத் தலத்தில். வரும் - திருவவதாரம் செய்தருளிய. முதல் - முதன்மையாகிய, பெரும் - பெருமையைப் பெற்று விளங்கும். திருநீல நக்கர் - திருநீல நக்க நாயனாருடைய. தாள்.திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். வணங்கிபணிந்துவிட்டு, இருபிறப்பு உடை - உபநயனம் செய்து கொள்வதற்கு மு ன் பு ஒரு பிற ப் ைபயும் அதன் பிறகு மற்றொரு பிறப்பையும் பெற்ற. பிறப்பு : ஒருமை பன்மை மயக்கம். இருப்பிறப்புடையவர் - துவிஜர். அந்தணர் - வேதியர். ஏறு' - இடபமாகிய. உயர்த்தவர்.பால் - துவசத்தை உயர்த்திப் பிடித்தவராகிய சிவபெருமானாரிடத்தில். ஒருமை - ஒருமைப் பாட்டோடு. உயத்து - தம்முடைய வாழ் நாள் க ைளச் செலுத்தி. உணர் - உணரும், ஒருநெறிய மனம் வைத்துணர் ஞான சம்பந்தன்' என்று திருஞான சம்பந்த மூர்ந்தி நாயனார் தம்மைக் குறிப்பிடுவதைக் காண்க. நமிநந்தி யார் - நமிநந்தியடிகள் நாயனார் செய்தருளிய. தொழில் . வேலைகளாகிய திருத்தொண்டுகளை ஒருமை பன்மை மயக்கம். உரைப்பாம் -இனிமேல் யாம் பாடுவோம்.