பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமிநந்தியடிகள் நாயனார் புராணம் . 28 I

தமக்கு அடுத்த நிலைமையினுடைய எண்ணித்தினால் தாம். புரியும் திருத்தொண்டுகளினுடைய பகுதிகள் பலவற்றைப் புரிந்து பழகி துதித்து இருப்பவராகிக் கணக்கு இல்லர்த திரு விளக்குக்களை ஏற்றுவதற்காகத் தொடங்கிய எண்ணத் தோடு இணங்கித் தம்முடைய திருமாளிகையிலிருந்து எழுந்து செல்வாரானார். பாடல் வருமாறு :

கண்ணி இறைஞ்சி அன்பினால்

ாயப்புற் றெழுந்த காதலுடன் அண்ண லாரைப் பணிக்தெழுவார்

அடுத்த நிலைமைக் குறிப்பினால் பண்ணும் தொண்டின் பாங்குபல - பயின்று பரவி விரவுவார் எண்ணில் தீபம் ஏற்றுவதற்

கெடுத்த கருத்தின் இசைக்தெழுவார்.' தண்ணி - அந்த நமிநந்தியடிகள் நாயனார் அவ்வாறு திருவாரூர் அரநெறி என்னும் திருக்கோயிலை அடைந்து. இறைஞ்சி - அகிலேசுவரரை வணங்கி விட்டு. அன்பினால். பக்தியோடு: உருபு மயக்கம். நயப்பு உற்று - விருப்பத்தை அடைந்து. எழுந்த - தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழுந்த. காதலுடன் - விருப்பத்தோடு. அண்ணலாரை - தலைவராகிய அந்த அகிலேசுவரரை. அண்ணலார் . பெருமையைப் பெற்றவர் எனலும் ஆம். ப் : சந்தி. பணிந்து - தரையில் விழுந்து வண்ங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து. எழுவார். எழுபவராகி; முற்றெச்சம்.

அடுத்த - தமக்கு வந்த நிலைமை. நிலைமையினுடைய,

க் சந்தி. குறிப்பினால் - எண்ணத்தினால். பண்ணும் - தாம் புரிந்து வரும். தொண்டின் - திருத்தொண்டு களினுடைய, ஒருமை பன்மை மயக்கம். பாங்கு-பகுதிகள்: ஒருமை பன்மை மயக்கம். பல . பலவற்றை. பயின்று - புரிந்து பழகி. பரவி - அந்த அகிலேசுவரரைத் துதித்துக் கொண்டு. விரவுவார் . இருப்பவராகி; முற்றெச்சம், எண் - கணக்கு. இல் - இல்லாத கடைக்குறை. தீபம் -