பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலச்சிறை நாயனார் புராணம்

பெரிய புராணத்தில் 5-ஆவதாக விளங்கும் திருகின்ற சருக்கத்தில் இரண்டாவதாக வரும் குலச்சிறை நாயனார் புராணத்தின் முதற் பாடலின் கருத்து வருமாறு :

பாராட்டிப் பல முறையும் கூறும் பழங்காலத்தி லிருந்து வரும் புகழைப் பெற்ற நல்ல பாண்டி நாட்டில் சம்பா நெற் பயிர்கள் நிரம்பி வளரும் வயல்களும், இனிய சாற்றைப் பெற்ற கரும்புச் செடிகளுக்குப் பக்கத்தில் வளர்ந்து நிற்கும் கமுக மரங்களைப் பெற்ற வெளியில் உள்ள வயல்கள் சுற்றி விளங்குவது, நிலை பெற்று அமைந்த வண்மையைப் பெற்ற வள்ளல்கள் வாழ்வது திருமணமேற்குடி என்னும் சிவத்தலம்." பாடல் வருமாறு : .

பன்னு தொல்புகழ்ப்

பாண்டின் னாட்டிடைச் செங்கெ லார்வயல்

தீங்கரும் பின்னயல் துன்னு யூகப் X

புறம்பனை சூழ்ந்தது மன்னு வண்மையி

- னார்மண மேற்குடி.' பன்னு - பாராட்டிப் பல முறையும் கூறும். தொல் . பழங்காலத்திலிருந்து வரும். புகழ் - புகழைப் பெற்ற.