பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் க

தொகை. இழை : ஒருமை பன்மை மயக்கம். அந்த ஆபரணங்களாவன: உச்சிப்பூ. சுட்டி, அராக்கொடி, காதுக் கம்மல்கள், தோடுகள், ஜிமிக்கிகள், வைரஅட்டிகை தங்க அட்டிகை, முத்துப் புல்லாக்கு, வங்கி, கைக்கங் கணங்கள், தங்க வளையல்கள், நவரத்தின வளையல்கள், ஒட்டியாணம், மேகலை, தங்க அரைஞாண் கயிறு, கால் காப்புக்கள், மோதிரங்கள், மெட்டிகள், பாதகரம்,

வெண்டயம், கொலுசு, தண்டைகள் முதலியவை. மகள் - . மணமகளாக, பேச கொள்வதைப்பற்றிப் பேசுவதற்காக, மாடம் - மாடங்கள்: ஒருமை பன்மை மயக்கம், மலி - மிகுதியாக உயர்ந்து நிற்கும். காரைக்கால் - காரைக் காலாகிய, வள நீர் வளம், நில வளம், செல்வ வளம், ஆலய வளம், நன்மக்கள் வளம் முதலிய வளங்களைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். நகரில் - நகரத்திற்கு உருபு மயக்கம். வர செ ல் லு மாறு. விட்டார் - அனுப்பினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். .

பிறகு வரும் 8 - થાક பாடலின் கருத்து வகுமாறு :

. அவ்வாறு புனிதவதியாரை மணமகளாகப் பேசுவதற்கு அந்தத் தனதத்தனுடைய திருமாளிகைக்கு வந்த முதுமையைப் பெற்ற அறிஞர்கள் திருமணத்தைக் குறிப் பிட்ட திருமாளிகைக்குள் நுழைந்து அந்தப் புனிதவதி யாருடைய தகப்பனாகும் தனதத்தனைச் சந்தித்து. நீ பெற்றெடுத்த பசுமையாகிய தங்க வளைகளை அணிந்து கொண்டிருக்கும் புனித வ தி ைய நீதிபதியினுடைய வலிமையைப் பெற்ற பு த ல் வ னா கிய பரமதத்தன் என்பவனுக்குப் பழங்காலம் முதல். வரும் பரம்பரைக்குத் தக்கதாக இருக்கும் முறை ப் படி திருமணத்தைப் புரிவாயாக' என்று அந்த முதியவர்கள் கூறினார்கள்." பாடல் வருமாறு : .

வந்தமூ தறிவோர்கள்

மணம் குறித்த மனைபுகுந்து