உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ7

உருபு. களிறு அவர காப்புடைய கயம் படியினை (புறநா. 15, 9-10). மாக்கடுங் கோக்காயினும் சொல்லவே வேண்டும் நம் குறை (முத்தொள். 128). பாம்பறியும் பாம்பின கால் (பழமொ.நா.5). நம்ம வினைகள் அல்கி அழிந்திட (தேவா. 7, 81, 3). சாத் தன ஆடை (தொல். சொல். 80 நச்.). பன்மை உணர்த் தும் அகர உருபுங் கொள்க...சாத்தன குழைகள் (தொல். சொல். 77 தெய்வச்.). நாவிமானமணம்: அ என் பது ஆறாம் வேற்றுமைப் பன்மையுருபு (தக்க. 34 ப. உரை). 2. பலவின்பாற் பெயர் விகுதி. அவ்வும் சுட்டிறு வவ்வும்... பலவின் பெயராகும்மே (நன். 280). பல, சில... வருவ-இவை பெயர் (தொல். சொல்.9 தெய் வச்.). 3. பலவின் பால் (தெரிநிலை, குறிப்பு) வினை முற்று விகுதி. அ ஆவ... பலவற்றுப் படர்க்கை (தொல். சொல். 212 இளம்.). துஞ்சாக் கண்ண வட புலத்தரசே (புறநா. 31, 17). புனல் தூவத் தூமலர்க் கண்கள் அமைந்தன (பரிபா. 7, 52-53). பந்துகள் வெண்மையும் செம்மையும் கருமையும் உடையன (பெருங். 4, 12, 49-51). 4. ஒரு (தெரிநிலை, குறிப்புப் பெயரெச்சவிகுதி. நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந் தேர் (அகநா. 104,6). சிறு பசுங் கால... குருகும் (குறுந். 25). அமிழ்தின் வந்த தேவியை (கம்பரா. 4, 7,86). சுருதிமார்க்கம் பிழையாத கொற்கைகிழான் (வேள்விக். சாச. தமிழ். செய். 5-6). புழுதி நிறைந்த பூமி எனக்குப் பழுதிலாத பஞ்சணையாகும் (ஆசிய. 5, 66- 67). 5. (செய என்னும் வாய்பாட்டு) வினையெச்ச விகுதி. கண்ணிற்காண நண்ணுவழி இரீஇ (பொருந. 76). மோப்பக் குழையும் அனிச்சம் (குறள். 90). திசை நடுங்க...வெளிப்பட்டு ( வேள்விக். சாச. தமிழ். செய்.33). அலைந்து திரிய எண்ணுகின் றனையோ (ஆசிய. 5, 23-24). 6.ஒரு வியங்கோள் விகுதி. இரு காது அவனைக் கேட்க, வாய் பண்ணவனைப் பாட (புற. வெண்கடவுள். 2). அறங்கள் ஓங்க, நற்றவம் வேள்வி மல்க (கந்தபு. பாயிரம் 5). வையம் இன்புற... சிவாலயம் பீடுற (செவ்வந்திப்பு. 11,51). 7. ஒரு தொழிற்பெயர் விகுதி. கண் பாயல் கொண்டு இயைபவால் (கலித். 70, 8 இயைப, அகர வீற்றுத் தொழிற்பெயர் நச்). 8. (வினைப்பெயரல் லாத) பெயர்ப் பகுபதங்களுக்கிடையில் வரும் ஓர் இடைச்சொல். வானவன் மீனவன்... பெரியவன் என் றற் அ

...

றொடக்கத்தன அ என்னும் இடைநிலை பெற்றன (நன். 140 மயிலை.). 9. ஒரு சாரியை. அன் அ ... பிறவும் பொதுச் சாரியையே (நன். 244). தமிழ் அவ்வுறவும் (நன். 225 தமிழ் என்னுஞ் சொல் ... வேற்றுமைக்கண் அகரச் சாரியையைப்... பெறும் - சங்கர நமச்.). தமிழ நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் (பெ ரியதி. தனியன்). 10. ஓர் அசை. மன்றல மாலை (சீவக.

2

அஃகு1-தல்

2289 மன்றல-அ அசை - நச்.). 11. ஒரு செய்யுள் விகாரம். (பதிற்றுப். 74.9 கவலைய என்னும் அகரம் செய்யுள் விகாரம் ப. உரை). 12. ஓர் எழுத்துப்பேறு. (தொல்.எழுத். 115 நினவ கூறுவல் எனவ கேண்மதி என்றாற்போல ஆறாவதற்குரிய அகர உருபின் முன்னரும் ஓர் அகர எழுத்துப்பேறு -நச்.).

அ இ. சொ. சொ.இன்மை, மறுதலை, அன்மைப் பொரு ளில் வரும் வடமொழி முன்னொட்டு, உபசர்க்கம். அ ... அப்பிரகாசமென இன்மையினையும் அதன்மம் என மறுதலையினையும், அப்பிரா மணன் என அன்மையினையும் உணர்த்தி

நிற்கும் (சி. போ .பா.2, 1).

200

கும்

அஆ இ. சொ. இரக்கத்தைத் தெரிவிக்கும் குறிப்புச் சொல். வழங்கான் பொருள் காத்திருப்பானேல் அஆ இழந்தான் என்று எண்ணப்படும் (நாலடி. 9). செத்தார் கெட்டேன் அஆ என (திருப்பு.588).

அஇவனம் (அய்வனம், ஐவனம்) பெ. ஐவனம் என் னும் நெல். அஇவனம் - அய்வனம் - ஐவனம் -

(நன். 124 மயிலை.).

அஃகடி

அஃகடி).

.

பெ. துன்பம். (ராட். அக.

அக்கடி

<

அஃகம்' (அக்கம் 1) பெ. 1. தானியம். அஃகமும் காசும் சிக்கெனத் தேடு (கொன்றை. 13). 2. விலைப் பொருள். அஃகஞ் சுருக்கேல் (ஆத்தி. 13).

அஃகம்' பெ. முறைமை, நீதி. ஓர் ஊர் இரண்டு அஃகம் ஆயிற்று (சீவக. 2087).

அஃகம்' பெ. நீரூற்று. அஃகம்உறவியும் அசும்பும் ஊறல் (பிங். 557).

அஃகரம் பெ.வெள்ளெருக்கஞ் செடி. (சங். அக.)

அஃகல் பெ. 1.வறுமை. அஃகல் வறுமை....... செப்புப (திவா. 1671). 2. சிறுமை. அஃகல் சிறுமை செப்புப (முன்.).

அஃகான் பெ. கான்சாரியைபெற்ற அகரக்குறில். அகா ரம், அஃகான், அகரம் எனவும் வரும் (நன். 126 சங்கர நமச்.).

அஃகி பெ. நீரூற்று. அஃகி ஊறும் வெம்புனல் உறவி ஊற்றாம் (சூடா.நி. 5,27).

அஃகு 1 - தல் 5வி. 1. (அளவில்) குறைதல். அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் (குறள். 178). அஃகாத பூங்கிடங்கில் நீள்கோவல் பொன்னகரும் (இயற்.