உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஃகு'

...

முதல் திருவந். 77). துளி அஃகி நல்குரவு ஆற்றப் பெருகினும் (ஆசாரக். 56). அஃகல் இல் அறநெறி (கம்பரா. 2,10,107). வெம்மையால் விளைவு அஃகி னும் (திருவிளை. பு. நாட்டுச்.59). 2. சுருங்குதல். அஃ கியநுட்பம் (மலைபடு. 551 சுருங்கிய அறிவினை நச்.). பிறை புரைதிருநுதல் அஃக (பெருங். 5, 6, 11). சிறியார் கொண்ட தொடர்பிற் செல்லச் செல்ல அஃகும் நெறி (சீவக. 1416). 3. (இலக்.) ஓர் எழுத்து தன் மாத்திரையிற் குறைதல். அஃகும் இ... (நன்.61). 4. மனங்குன்றுதல். சொல்லவும் ஆகாது அஃகியோனே (குறுந். 346). 5. (இருள் முதலியன) விலகுதல், நீங்குதல். இருள் அஃகிய காலை ஏகினான் (சீவக. 1438). 6. கழிந்துபோதல். அல் ஆயிரமாயிரம் அஃகினவால் (கம்பரா. 6,17,69). 7. பிழைத்தல், தப்புதல். தொடைப்பாடல் இவை பத்தும் அஃகாமல் கற்பவர் (திருவாய். 4,1,11). நுண்ணிதாதல்.அஃகி அகன்ற அறிவென்னாம் (குறள். 175). 9. (மலர் முதலியன) கூம்புதல். ஆம்பல் ... மீட்டஃகுதலும் (கச்சி. காஞ்சி. திருக்கண். 104). 10. அணுகுதல். வெஃகாவே சேர்ந்தானைக்...கைதொழு தால் அஃகாவே தீவினைகள் (இயற். மூன்றாம். 76).

...

8.

அஃகு' பெ. ஊற்று நீர். அஃகும் உறவியும் அசும்பும் ஊறல் (திவா.930)

அஃகு பெ. தகுதி. (சம்.அக./செ. ப. அக. அனு.)

அஃகுல்லி (அக்குல்லி) பெ. (ஆவியில் வெந்து இனிப்புக் கலந்த அரிசிமா உண்டி) உக்காரி, பிட்டு வகை. அஃகுல்லி உக்காரி (பிங். 1111).

அஃகுவஃகெனல்

இ.சொ. ஓய்வின்றி வீணே அலைந்து திரிவதை வெளியிடுங் குறிப்பு. அஃகுவஃ கென்று திரியும் இடைமகனே (பெருந். 1423).

அஃகுள் (அக்கிள், அக்குள், அக்குளு2) பெ. கக்கம் (சங். அக.)

அஃகேனம்1

பெ. தமிழ் நெடுங்கணக்கின் உயிர் வரிசையின் இறுதியில் சொல்லப் பெறும் ஆய்த வெழுத் தைக் குறிக்கும் சொல். அஃகேனம் ஆய்தம் (யாப்.

காரிகை 4 உரை).

அஃகேனம்' பெ. (அஃகு+ஏனம்) முள்ளில்லாப்பன்றி. (சங். அக.)

அஃடு பெ. அடிப்பகுதி. முதுவாய்ச் சாடியாங்கு அஃடுண்டென (புறநா. 319, 4).

பெ. சொ. அ.1-1 அ

3

0615

அஃதை'

அஃதன்றி (அஃதான்று) வி.அ. அதுவேயல்லாமல். உள்ளமொன்றுடைமை வேண்டும் அஃதன்றி

ஐம்புலன் ஏவல்

...

(பட்டினத்துப். திருவிடை. 4, 24-25). அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம் (குறள். 884 மணக்)

அஃதான்று (அஃதன்றி) வி. அ.

(கூறப்பட்ட

துவே) அல்லாமல். அலராகாமையோ அரிதே அஃ தான்று (அகநா. 98,25). அனைத்தனைத்து அவ்வ யின் அடைத்தோன் அஃதான்று (திருவாச. 3, 28). வஞ்சனை தங்கிய அவரைச் சாராய் நீயே அஃ தான்று... (பட்டினத்துப். திருவொற்றி. 7, 9-10).

அஃதி (அஃதை', அக்காத்தி, (அஃதை”,அக்காத்தி,

திக்கற்றவன். (சங். அக.)

அகதீ,

அஃது சு.பெ. 1. (உயிர்முதற்

.

அகுதி) பெ.

சொற்களுக்குமுன்

வழங்கப்பெறும்) அஃறிணை ஒருமைச் சேய்மைச் சுட்டு. அஃது எம்மூரே (புறநா. 48,5). நினக்கே யன்று அஃது எமக்கும் ஆரினிதே (ஐங். 46). அஃதே (அஃது + ஏ ) நினைந்த நெஞ்சமொடு (நற். 128,10). மறத்திற்கும் அஃதே துணை (குறள். 76). யாவர்க் கும் தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான் (திருவாச. 5, 47). ஈசனைப்பற்றி விடாவிடில் வீடு அஃதே (திருவாய். 4,1,10). கண் இணையும் அரவிந் தம் அடியும் அஃதே (திருநெடுந்.21). 2. (எழுவா யாகும் பெயர்ச்சொல்லொடு சேர்ந்து வரும்) பகுதிப் பொருளது. புலவியஃது எவனோ அன்பிலங்

கடையே (குறுந். 93).

தெரிவிக்கும்

உள்

அஃதே இ. சொ. 1. வியப்பைத் இடைச்சொல், அப்படியா! அஃதே! அடிகளும் ரோ? (சீவக. 1884). 2. விவாதத்தில் ஒரு கூற்றை ஏற்பதை உணர்த்தும் சொல். அவர் சார்பெழுத் தென மூன்றேகொண்டாராலோவெனின், அஃதே, நன்று சொன்னாய்... (நன். 59 மயிலை.).

அஃதேல் வி.அ.

...

அவ்வாறாயின், அப்படியென்றால். வண்ணச் சினைச் சொல் மயக்கமாயின அஃதேல் சினையடையாகிய செம்மையும் வன்மையும் முத லடை ஆயினவாறு என்னை (தொல். சொல். 26 சேனா.).

...

அஃதை1 (அகுதை) பெ. சங்க காலத்துக் குறுநில மன்னன். அஃதை களிற்றொடு நன்கலன் ஈயும்... (அகநா. 76, 4).

அஃதை' பெ.

ஒரு சோழ அரசனின் மகள். அங்கலுழ் மாமை அஃதை தந்தை ... அடுபோர்ச் சோழர் (அகநா. 96, 12-13).