உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகண்டாகாரவிருத்தி

அகண்டாகாரவிருத்தி பெ. (தத்து.) 1. தன்னைப் பெரிதாக நினைக்கும் ஞானம். பிரிவில் அகண்டா கார விருத்தியிற் சாட்சியை அறியாப் பெந்த நீங் கும் (உபநிட.. 12). அகண்டாகாரவிருத்தி தன்னை அனவரதம் ஆதரவாய் அப்பியாசித்து (ரிபுகீதை 28, 15). 2. முத்திவிருப்பம். (வின்.)

சற்

அகண்டாகாரன் பெ. (பகுக்கப்படாத வடிவுடைய) கடவுள், பரம்பொருள். அகண்டாகார குருநாத போற்றி (வள்ள. சாத். 2, 7).

...

அகண்டாதீதன் பெ. பகுப்பிற்கு அப்பாற்பட்ட கடவுள். அகண்டாதீதா அபேத விலாசா (சர்வ. கீர்த், 91, 5).

அகண்டி பெ. ஓர் இசைக்கருவி. (யாழ். அக.)

அகண்டிதம் பெ. (அ+கண்டிதம்) 1. பிரிவுபடாதது, பின்னப்படாதது. அசலமாகி அகண்டிதமாய ஆனந்த உருவாகி (சிவப்பிர, 13). 2. வரையறைக்குட்படா தது. வேத சிரத்தினில் தெளியும் அகண்டித ஞானம் (திருக்காளத். பு. 29, 34). சுத்த பரிபூரண மாய் நின்மலமாய் அகண்டிதமாய் (தாயுமா..

24, 9).

அகண்டிதன் பெ. வரையறைப்படாத கடவுள். அகண் டிதன் அகம்பன் (மதுரைப்பதிற். 70).

அகண்டிதாகாரம் பெ. பிரிக்கப்படாத வடிவம். போத பரிபூரண அகண்டிதாகாரமாய் (தாயுமா. 4, 4).

அகண்ணியம் பெ. (அ+கண்ணியம்) அவமரியாதை. அங்கே போவது உனக்கு அகண்ணியம் (செ.ப.அக).

அகணி1 பெ. 1. உட்பகுதி. அக்கணத்து அப்பிலத்து அகணி எய்தினார் (கம்பரா. 4, 13, 27). சுரமை நாட்டு அகணி சார்ந்து (சூளா.36). கடுக்காயில் அகணி நஞ்சு, சுக்கில் புறணி நஞ்சு (செ.ப. அக.), 2. உள்ளார்ந்த நட்பினர். அகணியாகிய ஆய் பொருட்கேள்வி சகுனி கௌசிகன் மூவரை இடுமின் (பெருங்.3,26,29-31).

...

அகணி? பெ. 1. மருதநிலம். அப்புலத்து அகணி நாடு ஒரீஇ (கம்பரா. 4, 14, 16). 2. 2. நெல்வயல். அகணியின் கரைபுரளும் எங்கணும் (அரிசமய.5.8).

அகணி' பெ. மூங்கில்,தெங்கு, பனை முதலியவற்றின் புறநார். (நாட்.வ.)

அகணி' பெ. பெ.கடுக்காய்.

(சித்.அக./செ.ப.அக.அனு.)

2

3

அகத்தான்

அகணி

பெ.நஞ்சு. (வைத். விரி. அக. ப. 1)

அகணிதபஞ்சாங்கி பெ. மனக் கணிதமாய்ப் பஞ்சாங்கம் சொல்பவன். (சங். அக.)

ள்

அகணிதம் பெ. கணக்கிடாதது. இருபத்தெட்டு நா தாரக அகணிதம் (தக்க. 706 ப. உரை). அகணித குண அகிலாண்ட விலாசா (சர்வ.கீர்த். 73,4).

அகணிதன் பெ. (கணிக்க முடியாதவனாகிய) கடவுள். வேத முதல்வ ஏதமில் அகணித (பெருந். 193).

அகணிப்பாய் பெ. மெல்லிய மூங்கிலின் புறநாரினால்

பின்னிய பாய்.

(வட்.வ.)

அகணிவடம் பெ. ஏர்க்காலையும் நுகத்தையும் பிணைக் கப் பனைநாரால் செய்த கயிறு. (ரா. வட். அக. ப.

327)

அகத்தடிமை பெ. கடவுளடியாருக்குத் தொண்டு. அகத் தடிமை செய்யும் அந்தணன்

அருவரை வில்லாளி தனக்கு

(பெரியபு. 56,1).

(தேவா. 7, 9,6).

அகத்தடிமையாம்

அகத்தடியாள் பெ. 1. மனைவி. அகத்தடியாள் மெய் நோவ (தனிப்பா. 1,275, 77). 2. வீட்டு வேலைக் காரி, (நாட், வ.)

அகத்தமிழ் பெ. அகத்திணை பற்றிக் கூறும் தமிழ். இவைநான்கும் பெருந்திணைப்பாற்படும்; என்னை, அகத்தமிழ் சிதைவாகலான் (திருக்கோ.70 உரை).

அகத்தர் பெ. உள்ளிருப்போர். ஐவரென்று உல கேத்தும் அரசர்கள் அகத்தரா (கலித். 25, 3).

அகத்தன்1 பெ. (அ + கத்தன் ) கர்த்தா அல்லாதவன். ஆதலால் பரமம் தன்பால் அகத்தனே கத்தனே என்று ஓத பாவனைகளுண்டாம் (ஞானவா. கசன்.3). அகத்தன் 2 பெ. பூனவித்திரு நாய்ப்பாகல்.(வாகட அக.) அகத்தான் பெ. 1. உள்ளிருப்பவன். மனத்தகத்தான் தலைமேலான் வாககினுள்ளான் (தேவா. 6,8, 5). கண்ணின் அகத்தான் (திருவாச. 34,4).2. கோட் டையுள்ளிருப்பவன். அகத்தார் புறத்தாரைக் காண் டல் எளிதாய், புறத்தார் அகத்தாரைக் காண்டல் அரிதாய் (இறை. அக. 59 உரை). 3. இல்லத்துள் வாழ்பவன், வீட்டில் இருப்பவன். அகத்தாரே வாழ் வார் (நாலடி. 31). அசல் அகத்தார் ஏதேனும்