உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகாதம்5

அகாதம்" பெ.

விண்ணவர் வெட்டிய குளம். அகா

தம் விண்ணவரால் தொட்ட குளம் (நாநார்த்த.

21).

அகாதன் பெ. வஞ்சகன். (யாழ். அக.)

...

அகாதி பெ. வரவழைப்போன். (கதிரை. அக.)

அகாதிகள் பெ. (சைனம்) முத்தி அடைவதற்குக் காரணமாகும் ஆயுழியம் வேதனியம் கோத்திரம் நாமம் என்னும் நான்கு நல்வினைகள். செற்றது காதி கள் தீர்ப்பது அகாதிகள் (திருநூற். 88).

அகாந்தம் பெ. தான்றி மரம். (பச்சிலை. அக.)

...

அகாமவினை பெ. (தத்துவ.) அறியாமற் செய்யும் செயல்களால் உண்டாகும் கன்மம். அகாமவினை யினுக்குப் பரிகாரம் பகர்ந்திடுவர் (சிவதரு. 11,2). அகாயம் பெ (உடலற்றது) இராகு. (சங். அக.)

அகாயன் பெ. (உருவமற்றவன்) கடவுள். அகாயன் அசலன் அந்தரியாமி (வள்ள.சாத். 1, 9).

அகாரகாரணம்

பெ. அனைத்துக்கும் முதலாகிய அகார ஒலி. அகார காரணத்துளே அனேகனேக ரூப

மாய் (சிவவாக்கி. 227).

அகாரணம் பெ. 1. காரணமின்மை.

அகாரணத்து

எதிர்த்தீர் (சிவஞா. காஞ்சி. தக்கீச. 12). 2. தற் செயல்.

(வின்.)

அகாரணன் பெ. 1. (தான் தோன்றுதற்கு மூலம் எதுவும் இல்லாதவன்) இறைவன். (சமயவ.) 2. காரணமில்லாதவன். நிராமயன் அகாரணனது எல்லை கயிலாய மலையே (அருணகிரிபு. அருந்தவ. 13).

அகாரணிகாரணி பெ. தனக்கு மூலமின்றி மற்றவற் றிற்கு மூலமாக இருப்பவள். ஆதி அனாதி அக ரணிகாரணி (திருமந். 1114).

அகாரம்1 பெ. (அ+காரம்) காரம் என்னும் சாரியை யுடன் வந்த அ என்னும் எழுத்து. அகார ஆகார ஈற்றுட் சில (தொல். எழுத். 182 இளம்.).

...

அகாரம்' பெ. 1. பிரணவம். தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்து (திருமந். 1075). 2.பிராசாத யோகநெறியில் முதற்கலையாகிய மேதாகலை. உந்தி மேல் நாலங்குலி அகாரம் (பிரசாத. அக. 66).

45

அகாளம்

அகாரம்' பெ. வீடு. (சங். அக.)

அகாரம்' பெ.

செயலின்மை. (முன்.)

அகாரவுப்பு பெ. கல்லுப்பு. ( பச்சிலை. அக.)

அகாராதி பெ. அகரம் தொடங்கி வரும் உயிர் எழுத் துக்கள். அகாராதியாய் இருக்கிற உயிர் எழுத்துத் தனித்தனியாய் உச்சரிக்குமிடத்து (சிவதரு.10,83

உரை).

அகாரி பெ. 1. இடி. (சங். அக.) 2. இந்திரன். (கதிரை. அக.) 3. கடவுள். (முன்.)

அகாரியம் பெ. தகாதசெய்கை. நா அகாரியம் சொல்

இலாதவர்

(பெரியாழ். தி. 4, 4, 1).

ஏகுதல் சிறிது அகாரியம்

...

நின் பிரிந்து

(சங்கர.

கோவை

266). அகாரியத்தில் பகீரதப் பிரயத்தனம் (பழ.

அக. 30).

அகாருண்ணியம்

நிகண்ட. 5 உரை)

பெ. கருணையின்மை. (சி.சி. பர.

அகாலப்பிரசவம் பெ.

உரியகாலத்திற்கு முன் மகவு

பெறுகை. (பைச. ப. 216).

அகாலபோசனம் பெ. உரிய நேரங் கடந்து உணவு உண் ணுகை. (பதார்த்த. 135/ செ. ப. அக.)

அகாலம் பெ. 1.காலமல்லாத காலம். நம் மேல் ஒருங்கே பிறழ வைத்தார் இவ் அகாலம் (நம். திரு விருத். 45). அகாலத்தில் உன்னுடைய உடலை விட நினைப்பது ஏன் (ஞானவா. உபசாந்தி. பிரகலாத.61). 2. ஒன்று நிகழ்வதற்குரிய நியமம் அல்லாத காலம்.

...

அகாலந் தன்னில் தோன்றிய மிருத்து (இரகு. சம்புக. 23). சிறுவன் அகாலத்தில் மரணமடைய (மனுமுறை. ப. 24). 3. (தத்துவ.) காலத்தை அளப் பதான தத்துவம் இல்லாத வெறுமை. அகாலத்தில் பிறப்பவர் மாய்பவர் இல் சிவப்பிரவிகா.196). 4. பொருளின் குறைபாடுடைய காலம், பஞ்ச காலம்.

(வின்.)

அகாலமரணம் பெ. முதிய காலத்தில் அல்லாது முன் னரே நிகழும் சாவு. அவர் தம் நாற்பதாம் வயதில் அகாலமரணம் அடைந்தார் (பே.வ.).

அகாலமிருத்து

பெ. அகாலமரணம். (செ. ப. அக.)

அகாளம் பெ. கறுப்பின்மை. (சித். சா. கிரியா. 44)