உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிர்'

அகிர்' பெ. தலைப் பொடுகு. (ராட். அக.)

அகிர்த்தியம் (அகிருத்தியம்) பெ. செய்யத்தகாதசெயல், தீயசெயல். அகிர்த்தியம் செய்யும் உங்கள் முகத்தில் விழிக்கலாமோ (இராமநா. 6, 62 தரு 1).

அகிர்ப்புத்தினி பெ. (சோதிடம்.) இரவு 15 முகூர்த்தத் துள் மூன்றாவது. (விதான. குணா. 73 உரை செ.ப. அக.) அகிருத்தியம் (அகிர்த்தியம்) பெ. செய்யத்தகாத செயல், தீயசெயல், தாங்கள் செய்த அ(க்)கிருத் தியத்தை விண்ணப்பம் செய்து (குருபரம்.ஆறா. ப. 36). அகிருத்தியம் செய்தவன் முகத்தில் விழிக் காதே (பழ. அக.31).

ஆர

அகில்' பெ. 1. நறுமணக் கட்டை தரும் மரம். நறை யும் நரந்தமும் அகிலும் ஆரமும் (பொருந்.238). அகிலோடு ஆரமும் கமழும் (பரிபா. 18,53) மும் சந்தும் அகிலும் தமாலமும் (பெருங்.1,50,32). அகிலொடு சாதி தேக்கம் மரம் உந்தும் மாமுகலி (தேவா. 3,36, 1). அகில் கறி...மலைபடு திரவியம் (பிங். 401). மணியும்...அகிலும்...கொண்டு ஏகலால் (கம்பரா. 1, 1, 7). தேக்கு உந்தி அகிலும் சாந்தும் சிந்தும் நீர்நதி (பாரதம். 5, 4, 161). 2. நறுமண அகில்மரக்கட்டை. காழ் அகிற் குறையும் (பெருங். 2, 18, 45). நிறை யகில் மாப் புகை (திருவாச. 3,90). அகில் விரைத்தூபம் ஏய்ந்த (பெரியபு, தடுத்தாட். 16). மரக்கலம் தந்த அகிலாகிய விறகாலே (சிலப். 14, 98 அடியார்க்.). குழற்கு ஊட்டு அகிற்புகை (மீனா. பிள். 9,6). 3. நறுமணத்திற்குப் புகைக்கும் பொருள்களுள் ஒன்று. அகில் பிறக்கும் (நான்மணி. 4). ஆரம்... விரை என உரைப்பர் கினும் கார் அகில் பொல்லாங்கு கமழாது (வெற்றிவே.

26).

......

பட்டாடை

கள்ளி வயிற்றின் கோட்டம்... அகில் (பிங். 390). புகைக்

அகில்' பெ. தில்லை மரம். (செ.ப.அக.)

அகில்' பெ. மலைவேம்பு.(முன்.)

அகிலகலாவல்லி பெ. (அனைத்துக் கலைகளுக்கும் தலைவியான) கலைமகள், அகிலகலாவல்லி இறைஞ்சி இருத்தலுமே (தக்க. 220).

அகிலங்கட்டை பெ. செஞ்சந்தனம். (செ. ப.

அனு.)

அக.

அகிலப்பிரகாசன் பெ. எங்கும் விளங்கும் புகழுடையவன். அகிலப்பிரகாசன் திம்மையவப்பையன் (பெருந்.

1251).

7

அகிலாண்டநாயகி

அகிலம்' பெ. எல்லாம், முழுவதும். அகிலகாரணமும் ஆனார் (பெரியபு. 28, 520). அகிலமும் சுடுகை யெடுத்திலர் ஐயரே (தக்க. 325). அகில புவனமும் நொடியினில் வருவன (பாரதம். 8, 1, 22). அகில நிசிரர் நடுங்க (திருப்பு. 27). அகிலப் பிரபஞ்சம் தனைத் தந்தது (தாயுமா. 2,7). அண்டகோளமும் அகில லோகமும் (கருவைப்பதிற். அந். 80). அகில இந்திய எழுத்தாளர் மாநாடு (செய்தி.வ.).

அகிலம் " ( அயிலம்*)பெ. 1.மண்ணுலகு, பூமி (மண்ணுலகே) பூதியம் அகிலம்... (பிங். 449). அகில முழுதுங் காத்தல் (சிலையெழு. 42). இருள் அகல... குணதிக் கினில் அகிலந் தொழு சூரன் (பாரதம். 3, 1, 166). அரன் திருமுன் மலர்ந்ததால் அகிலமு மாதோ (திரு விளை. பு. 16, 2). 2. (உலகம் உள்ளிட்ட) பேருல கம், பிரபஞ்சம். அகிலம் யாவையும் விரசுறு தனிக் குடை விளங்க (கம்பரா. 1,6,1). இவர் புரூஉப் பங் கத்து அகிலமும் படுகொலைப் படுவதே (தக்க. 82). அணுக்கள் தாமே அகிலமாய் வந்து நின்று கழிந் திடும் (சி. சி. சுப. 30). அகிலத்துள்ளதோர் கணங் களும் ... சூழ்தர (கந்தபு. 1,2, 9).

...

அகிலம்' பெ. நீர். ஆலமுஞ் சலமும் அகிலமும் ... நீரெனலாகும் (பிங். 57).

அகிலம் + பெ.

(அ+கிலம் ) அழிவில்லாதது. சூலு டையாலடை மற்று அகில சராசரம் (மீனா. பிள்.19).

அகிலமேதகி பெ. சிறுகாஞ்சொறி (சித். அக./செ.ப.

அக. அனு,)

அகிலரூபன் பெ. (எல்லா வடிவாகவுமுள்ள) கடவுள்.

(வின்.)

அகிலாங்கம் பெ. சதுரவடிவம். அகிலாங்கம் தீப மிகும் அழகார் வட்ட முற்பொலிய (திருத்தொண்டர்பு.

சாரம் 68).

அகிலாண்ட கோடி பெ. எண்ணிறந்த உலகங்கள். தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும் படிக்கு (தாயுமா. 1, 1).

அகிலாண்டநாயகி பெ. 1. திருவானைக்கா இறைவி யின் பெயர். காவைவாழும் அகிலாண்ட நாயகி என் அம்மையே (தாயுமா. 37, 1). அகிலாண்ட நாயகியைக் கருத்துள் வைப்பாம் (ஆனைக்காப்பு. கடவுள். 5). 2. பத்திரகாளி. அளி ஏறி அகிலாண்ட. நாயகி வாளிரவி உலகை வளைப்பவே (தக்க. 613).