உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசைநிலையளபெடை

பொருள் உணர்த்துவனவற்றை உரையசை என்றும் பொருள் உணர்த்தாது சொற்களை அசைத்து நிற்பனவற்றை அசைநிலை என்றும் கூறுதல் (தொல்.சொல். 279 நச்.).

அசைநிலையளபெடை

பெ. செய்யுளில் அசையோ சீரோ குறையுமிடத்து அதனை நிறைவு செய்வதற் காகக் கொள்ளும் அளபெடை. செறாஅஅய் வாழிய நெஞ்சு எனக் காரியம் உள்வழி வரும் அசைநிலை யளபெடையைச் செயற்கையளபெடை என்றும்

கூறுவர் (பிர.வி. 5 உரை).

ல்க

அசைப்பு 1 பெ. சொல். மிழற்றல் வாணி அசைப்பு என்றின்னவை சொல் என அறைவர் (திவா. 2013).

அசைப்பு 2 பெ. இறுமாப்பு. (சங். அக.)

அசைப்பு' பெ. (பார்க்கும்) கோணம், பார்வை. ஓர் அசைப்பில் பார்க்க நன்றாய் இருப்பான் (பே.வ.).

அசைபறி-தல் 4 வி. அசைபோடுதல். (ராட். அக.)

அசைபோடு-தல் 6வி. 1. (மாடுகள் தின்ற வைக்கோல் முதலிய) இரையை இரைப்பையிலிருந்து மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து மெல்லுதல். மாடு படுத்து அசைபோடுகிறது (நாட் வ.). 2. (கடந்த நிகழ்ச்சி களை) மீண்டும் நினைவுகூர்தல். கிழவி தன் பழைய நினைவுகளை அசைபோடுகிறாள் (பே.வ.).

அசையடி பெ. (யாப்.) கலிப்பாவின் ஓர் உறுப்பாகிய அம்போதரங்கம். அசையடி மிசைத்தாய் (இலக்.

வி. 738).

அசையந்தாதி பெ. (யாப்.) செய்யுளில் ஓர் அடியின் ஈற்று அசை, அடுத்துவரும் அடிக்கு முதல் அசையாக வரும் தொடை. ஓரடியுள் இறுதிச்சீருள் ஈற்றசை யும் மற்றையடியின் முதற்சீரின் முதலசையும் ஒன்றத் தொடுப்பது அசையந்தாதி (தொல். பொ. 411 பேரா.).

அசையாத்திணை பெ. நிலம். அசையாத்திணை... நிலப்பெயராம் (ஆசி.நி.156).

அசையாத்திணைப்பொருள் பெ. (வீடு, நிலம் போன்ற) பிறிதோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல

உடைமைகள், தாவரப்பொருள். (நாட்.வ.)

முடியாத

அசையாத்துரையர் பெ. கள்ளர் குலத்தவர் பட்டங்களுள் ஒன்று. (கள்ளர் சரித். ப. 97)

95

அசைவும்

அசையாப்பொருள் பெ. பிறிதோரிடம் செல்ல இயலாத நிலைப்பொருள். (நாட்.வ.)

அசையாமணி பெ. (மக்கள் தம் குறைகளை அரசருக்கு அறிவிக்க நிறுவப்பட்டும் கூட நீதி வழுவாத நாடா கையால் அசைக்கப்படாத) ஆராய்ச்சி மணி. (சங்.

அக.)

அசையிடு-தல் 6 வி. அசைபோடுதல். அசையிட்டு உறங்கும் கன்று (கூர்மபு. பூருவ.29,83).

அசையியல் பெ. (கொடிபோன்று அசையும் இயல் புடைய) பெண். அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் (குறள். 1098 நுடங்கிய இயல்பினையுடையாட்கு -

பரிமே.).

அசையு பெ. அமுக்கிராக் கிழங்கு. (வைத். விரி. அக. ப.

12)

அசையும்பொருள் பெ. ( பணம், ஆடுமாடுகள் போன்ற) பிறிதோர் இடத்திற்குக் கொண்டு செல்லக்கூடிய உடை மைகள். (நாட். வ.)

அசைவம் பெ. (அ + சைவம்) (உணவில் சைவம் அல்லாத) புலால் கூடிய உணவு. இது ஆட்டுக்கறி சேர்த்த அசைவ உணவு (நாட். வ.). அவர் சாப் பாட்டில் அசைவம் (பே.வ.).

அசைவளி பெ

(மெல்லென்று உலவும் காற்று) தென்றல். தைவரல் அசைவளி மெய்பாய்ந்து ஊர் தர...மெய் பிறிதாகுதல் அறியாதோரே (குறுந். 195). அலர் பதத்து அசைவளி வந்தொல்க (கலித். 126,

12).

அசைவா (வரு)-தல் 13 வி. புரளுதல். மராஅம் கமழும் கூந்தல்... அசைவர (நற். 20, 3-4).

அசைவாடு-தல் 5வி. (நீரின் மேற்பரப்பில் காற்றுச் செல்வது போன்று) மேலுலாவிச் செல்லுதல். (வின்.)

அசைவிடு-தல் 6 வி. இளைப்பாறுதல். நீர் துளும்பும் தம் பொறை தவிர்பு அசைவிட (பரிபா. 6, 6,2). 2).on

அசைவிடு '-தல் 6 வி. மெல்லுதல், (இரையை மீண்டும்) அசைபோடுதல். அன்னமும் கறியும் அசைவிட்டு இறக்கும் முன்னிய பல்லை முத்தென (பட்டினத்தார்.

கச்சித். 31).

அசைவு' பெ. 1. மாறுபாடு. அசைவு இல்கொள்கை யர் (பதிற்றுப்.69,11). 2. அலைவு, சலனம். அசை