உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடம்3

அடம்3

பெ. கொட்டைப்பாசி. அடம் போல் ஆடியல் ஆகம் (ஞானா. 66,19)

அடம்+ பெ. கத்தி. (செ.ப. அக. அனு.)

அடம்" பெ. திடம், செழுமை. மாடு அடமாக இருக் கிறது (ரா. வட். அக.).

அடம்பங்கொடி (அடப்பங்கொடி, அடம்பு 1, அடும்பு) பெ. நெய்தல் நிலக்கொடி. (கதிரை. அக.)

அடம்பம் (அடப்பம்2, அடப்பன்1) பெ. கடம்பு. அடம்பம்பூ அன்னம் கிழிக்கும் அலைகடல் (நாலடி. 106).

அடம்பாரம் பெ. 1. பண்டங்களின் நிறைவு. (தஞ்.வ.) 2. முழுதும். (வின்.)

அடம்பு (அடப்பங்கொடி, அடம்பங்கொடி, அடும்பு) பெ. நெய்தல் நிலக்கொடி. அடம்பிவர் பமன்ற கோடுயர் நெடும்பனை (குறுந். 248 பா. பே.). கான லும் கழிகளும் அடம்பும் (கம்பரா. 6, 4, 26 பா.பே.). தும்பை வெள்ளடம்பு திங்கள் (பெரியபு. 29,100). (பெரியபு.29,100). கருங்கொடி அடம்பு (குசே. 214). கான அடம்பின் கவட்டு இலைகள் மானின் குளம்பு ஏய்க்கும்

(நளவெ. 2, 84).

அடம்பு2 பெ. கடம்பு. ஆறும்

பிறையும் அரவ

மும் அடம்பும் சடைமேல் அணிந்து (பெரியதி.

6, 7, 9).

அடம்பு3 பெ. பூமருது. (சாம்ப. அக.)

அடம்பு பெ. கொன்றை. (செ.ப.அக.அனு.) +

அடம்பு பெ. அடர்த்தி. அந்த மூலையில் முள்ளுச் செடி அடம்பாயிருக்கிறது (பே.வ.).

அடம்பை பெ. கூத்தாடலுள் ஒருவகை. (இலங்.வ.)

அடமருது பெ. கடலாத்தி. (செ.ப.அக.அனு.)

அடமானம் (அடைமானம்1) பெ. கடன்பெறுவதற்கு அசையும் அல்லது அசையாப் பொருளை ஈடாக வைக்கை. நகையை அடமானம் வைத்திருக்கிறேன் (நாட். வ.).

அடயோகம் பெ. கடின சாதனையுடைய யோக வகை. அடயோகத்தினால் வினை தொலைத்து (திருக்

காளத். பு. 18,5).

20

அடர் -த்தல்

அடயோட்டி பெ. குத்துச் செடிவகை. குத்துச் செடிவகை. (மரஇன. தொ.)

பொன்

அடர் -தல் 4 வி. 1. செறிதல், மொய்த்தல். அடர்ப் புகர்ச் சிறுகண்யானை (புறநா. 6,12). அடர்ந்தன்ன ஒள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் (அக நா.280,1-2). அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து (மணிமே. 12, 60). அடரும் செல்வம் அளித்தவன் (கம்பரா. 2, 9, 52). அடரப் படர் கேதகை மடலில் தழை சேர் வயல் (திருப்பு. 164). பவள் வனம் அடர் பல்சடைக் காட்டினர் (மீனா. பிள். 1,2). அடர்ந்து உயர்ந்து இருண்ட காடுகள் (குசே.173). குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு (பாரதி. தேசியம். 48,14). 2. நெருக்குதல், மேலும் மேலும் வருதல். அல்லல் கூர்ந்து அழிவுற அணங்காகி அடரும் நோய் (கலித். 58, 15). கண்பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து (பரிபா. 18, 24). துக் கந் தொடர்ந்து வந்து அடரும்போது (தேவா. 5, 51,8). கொல்ல நினைத்து அடர்வார் (கம்பரா. 6, 19, 77). அடர்புலனால் நிற்பிரிந்து அஞ்சி (திருவாச. 6,38). அடர்ந்த தீவிடம் அகற்றுவதற்கு அணைந்துளார் (பெரியபு.28, 1060). ஓர் ஏந் திழை அடர்ந்து இலம் புகுந்து (சீறாப்பு. 1, 5, 84). 3. 3. தகடாகத் தட்டுதல். ஐதடர்ந்த நூற் பெய்து... பொலிந்த பொலன் நறுந்தெரியல் (புறநா. 29, 2-3). 4. செலுத்துதல். ஏர் அடரும் உழுகோலும் (சிலையெழு.39). 5. நெருக்கமாக வைத்தல். விதைத்து ஆழ உழு (பழமொழி).

...

அடர் - தல் 4 வி.

அடர

1. புடைத்தல். வச்சிரங் கொண் டிந்திரன் வெற்பு அடர்வதென்ன (ஞானவா. உப சாந்தி. சனகரா. 13). விலங்கலை வேரொடு பறித்து ஒன்றினை ஒன்று அடர வளி வீசினாலும் (குசே. 318). 2. போர்செய்தல், மோதுதல். கோளோடு கோள் உற்றென உற்றென ஒத்து அடர்ந்தார் (கம்பரா. 4, 7,47). எண்ணுறு படைகள் இவ்வாறு எதிர்தழீஇ அடரும் வேலை (கந்தபு. 1,20,39), 3. வதைத்தல், அழித்தல். வெறிபடு குருந்தை முறிபட அடர்ந்து (திருவரங்.கலம்.13,28). முதலைதனை அடர்ந்த மூர்த்தி (குறுங்குடி. உலா 50). 50). வாருதியோன் முன் அம்பு அடரும் சிலையாளி (சங்கர. கோவை 257). அடர் கதிரோன் எழுமுன் (குசே.189).

அடர் 3 - த்தல் 11 வி. 1. அழுத்துதல். திருவிரலால் அடர்த்தான் வல்லரக்கனையும் (தேவா., 7, 97,8). 2. நெருக்குதல். புடைத்து அடர்த்து எதிர் அழல் புரையும் கண்ணினார் (கம்பரா. 3, 6, 110 பா.பே.).