உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடர்4

.

5.

அடர்த்துவரு வெம்போர் (பாரதவெண். 109). கள்ளுமிழ் ஆவி உண்டு அடர்த்த தேனகத்து (சூளா. 11). கடைக்குழையிலே விழ அடர்த்து எறிதலால் (கலிங். 32). 3. வருத்துதல். அத்துன்பத்தை மேன் மேலும் அடர்க்கவல்லது (குறள். 621 மணக்.). நாகம் வந்து அடர்ப்பினும் உணர்வு நாறுமோ (கம்பரா. 5, 5, 68). ஆழியால் வெருட்டி நின்றடர்த்தீர் போலும் (சூளா. 688). அடர்புலன் போக்கற்றோர்க் கும் (கோயிற்பு. பாயி. 18). 4. தாக்குதல், போரிடு தல். படிகடந்து அடர்ந்த பல் களிற்றியானை (பெருங்.2,19,198). அடர்த்த முடிவேந்தர் அஞ்சி எங்கும் ஓட (பாரதவெண். 692). அரியினொடு அரி யினம் அடர்ப்பபோல் (கலிங். 409). ஆளை ஆள் கொண்டு அடர்த்தனர் (கந்தபு. 4, 3, 111). கொல்லுதல். பற்றார் பகை முதல் அடர்த்தும் என்றார் (சீவக. 1817). இடங்கரை யாழி வலவன் அடர்த்ததுபோல (கல்லாடம் 59). பொங்கிய வெங் கூற்று அடர்த்த பொன்னடிகள் (பெரியபு. 21,247). அரக்கரை அமரர்கள் அடர்த்து (செ. பாகவத. 9, 9, 2). 6. கெடுத்தல், வலிதொலைத்தல். பொற் பொறி வெள்ளை அடர்த்தாற்கே (சிவப். 17 உரைப் பாட்டு. கொளு 5). மாலே அரக்கர்குலம் எல்லாம் அடர்த்தாய் (பாரதவெண். 276). போர் எதிர்த்தி யேல் அடர்ப்பென் (கம்பரா. 4. 7,12). அமணர் தீத்தொழிலை மாய்த்து அடர்த்து (மதுரைச். உலா 95). பாவம் அடர்த்து அமர்வாரே சிவலோகத்து (சைவ. நெறி பொது. 567). 7. எதிர்த்தல், மறுத்தல். ராச்சியம் பண்ணிக்காட்டுக

என்று எம்மை

அடர்த்துச் சொன்னாய் (நீல. 320 உரை). தல். தேங்காய் அடர்த்தல் (நாஞ்.வ.).

8.பறித்

அடர்' பெ. வருத்துகை. அடர்க் குறுமாக்களொடு

(மணிமே. 13, 40).

அடர்' பெ. 1.

தகடு. பொன் அடர்ப்

பூம்புனை (பரிபா. 12, 12). அடர்பொற் சிரகத்தால் வாக்கி (கலித். 51, 7). அடர் பைம்பூண் பைம்பூண் (கள். நாற்.34). ஒள்ளடர்ப் பாண்டில் (பெருங்.1,33,93). அடர் பொற் பைம்பூண் அரசு (சீவக.313).2. பூவிதழ். பூ அடர் மிதிப்பினும் (பெருங்.2, 19, 184). இல வம்பூ அடர் அனுக்கி (சீவக. 179).

அடர் பெ. நெருக்கம். பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் (சீவக. 341 பஞ்சி அடரை யும் அனிச்சத்தையும்-நச்.). அடர் கானகங் கண்டேன் (பாரதி. தோத்திரம். 68).

அடர் பெ. ஐயம். (செ. ப. அக. அனு.)

12

1

அடரொலி

அடர் பெ.

போர்வலிமை. கண்டகர் அடர் கடந்த

திரள்புயத்து ஐய (கம்பரா. 5, 12, 33).

அடர்ச்சி (அடர்த்தி) பெ. நெருக்கம். (செ. ப. அக. அனு.)

அடர்சோளம் பெ. கால்நடைத் தீனிக்காக நெருக்க மாய்ப் பயிரிடும் சோளவகை. (நாட். வ.)

அடர்த்தி (அடர்ச்சி) பெ. 1. நெருக்கம். தலைமயிர் அடர்த்தியாய் இருக்கிறது (நாட்.வ.). 2. பொரு ளின் நிறைக்கும் அதன் கொள் அளவுக்கும் உள்ள விகிதமாகக் கூறப்பெறும் செறிவு. அடர்த்தி குறைந்த வெண்ணெய் ஊடச்சைச் சுற்றிச் சேர்கிறது

(அறிவி. 10 ப. 7).

அடர்த்திப்பலகை பெ. கனமான பலகை. (நாட். வ.) அடர்ந்தேற்றம் 1 (அடர்ந்தேற்றி) பெ. கொடுமை. (வின்.) அடர்ந்தேற்றம் 2 பெ. மொத்தமாக நிர்ணயிக்கப்பட்ட

வரி. (செ.ப. அக.அனு.)

அடர்ந்தேற்றம் 3 பெ. நெருக்கம். (யாழ். அக.)

அடர்ந்தேற்றி (அடர்ந்தேற்றம்') பெ. கொடுமை. (சங்.

அக.)

அடர்ப்பம் (அடர்பு) பெ. நெருக்கம். (இலங்.வ.)

அடர்ப்பு பெ. 1. நெருக்குகை. முன்னை ஞான்று மாலையால் அடர்ப்புண்ட தலைமகள் (குறள். 1223 மணக்). அசைவற்றிருப்ப அடர்ப்பு அரிதாய் (ஞானவா.ஞானவிண். 16). 2. போர். வீழ் அசனியின் அயிற்படை அடர்ப்புமோர் அயலாக (இரகு. திக்கு.

174).

அடர்பு (அடர்ப்பம்) பெ. நெருக்கம். (சங். அக.)

அடர்மை பெ. நொய்மை. வித்தகர் ஊட்டிய அரத்த அடர்மையும் (பெருங். 1,53, 129-130).

அடர்வைசூரி பெ. முத்துப் போன்ற கொப்பளங்கள் நெருக்கமாய் வார்க்கும் அம்மை. (சாம்ப. அக.)

அடரடிபடரடி பெ. பெருங்குழப்பம். (வின்.)

அடரார் பெ. பகைவர். (செ.ப.அக. அனு.)

...

அடரொலி பெ. அதட்டுஞ்சொல். அதட்டல்... அடரொலிப் பெயராகும் (பிங். 2119)