உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிக்கோடிடு-தல்

கண்ணி மார்பில் வந்தடிக்கொண்ட ஞான்றே (கூர்ம 25). 2. தொடங்குதல். இளைக்க

4. பூருவ. 29,

அடிக்கொண்ட இடையாள்

(மதுரைச் உலா

179).

அடிக்கோடிடு- தல் 6 வி. நூலில் சிறப்பாகக் கவனிக் கத் தக்க இடத்தைக்குறிக்கச் சொல் அல்லது சொற் றொடரின் அடியில் கோடு இழுத்தல். (புதியவ.)

அடிக்கோல் பெ. 1. முன்னாளில் நிலம் அளக்கப்பயன் பட்ட அளவுகோல். இக்குழி நானூறும் முப்பத்தி ரண்டு அடிக்கோலால் கைக்கொண்டு (தெ. இ. க. 17, 732, 6). 2. (இக்.) பன்னிரண்டு அங்குல அளவு கொண்ட அடிக்குச்சி. (நாட். வ.)

அடிக்கோலு-தல் 5 வி. 1. வீடுகட்டுவதற்கு அடிப்படை யிடுதல். அடிக்கோலும் விழா நடைபெற்றது (செய்தி. வ.). 2. தொடங்குதல். அடிக்கோலி ஞாலத்தாள் பின்னும் நலம்புரிந்த தென்கொலோ (இயற். இரண்டாந் திருவந். 82).

அடிகண்மார் பெ. (அடிகள் + மார்) சமண

சமயக்

குருமார். அடிகண்மார்க்கு மேவிய தீங்குதன்னை விளைப்பது (பெரியபு. 28,641).

பெ.

அடிகல் பெ. செதுக்கித் திருத்திய கல். (நாட். வ.) அடிகள் 1. கடவுள். அந்திப்போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் (தேவா. 4,37,8). மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் (திருவாய். 1, 3, 1). அண்ணலார் திருவரத்துறை அடிகளை வணங்கி (பெரியபு. 28,231).2. துறவறம் பூண்ட பெரியோர், முனிவர். அடிகள் நீரே அருளுக என்றாற்கு (சிலப். பதி. 62). வந்தீர் அடிகள் நும்மலரடி தொழுதேன் (மணிமே. 3,92). குலம் யாது அடிகட்கு என்ன (சீவக. 1787). அடியேற்கு ஓர் வரம் அருளும் அடிகள் (கம்பரா. 1,5,63). 3. மூத்தோர், அண்ணன், மதிப்பிற்கு உரியவர். அடி கள் முன்னர் யானடி வீழ்ந்தேன் (சிலப். 2, 13,87), கோமானே அடிகள் அத்தன்... மூத்தோன் பேராம் (சூடா. நி. 2, 9). அடிகள் போதும் போதன புரத் துக்கு என்று உரைத்தனன் (சூளா. 726). 4. அன்னை தன்னைத் தாதையை அடிகள் வணங்கத்தக்க

5. 12, 21).

குரு.

தன்னை

பெரியோ

என்று

று

(கந்தபு. 3, ரைக் குறிப்பிட வழங்கும் சொல். அருட்பா இனிதுரைத்த இராமலிங்க அடிகள் போற்றி (கருணீகர் பு.பாயி. 19). அடிகள் தொடர்ந்து அங்கு ஆற்றிய பணியாலே (காந்திகாதை. 3,13,10). 6. அரசன். மற்றடிகள் கண்டருளிச் செய்க மலரடிக்கீழ்ச் சிற்றடிச்சிதத்தை அடிவீழ்ச்சி (சீவக. 1873). அணிமுடி துறமின் எம்அடிகள் (சூளா.2080).

...

12

8

அடிச்சிரட்டை

7. பெருமாட்டி, அரசி. வீரசிம்மாசனத்து முக்கோக் கிழா னடிகளோடும் வீற்றிருந் தருளிய (மெய்க். சோழ. 24,77-78). யாதெனக்கடிகள் முன்னே அருளியது என்னச் சொன்னாள் (சீவக. 2615). அடிகள் யாம் உணரின் என்றாள் (சூளா. 1013 அடிகள் - திவிட்டன்தாய். குறிப்புரை).

அடிகாசு பெ. பழைய வரிவகை. (செ. ப. அக.)

அடிகாயம் பெ. அடியால் உண்டான புண். (நாட். வ.)

அடிகாரன் பெ. 1. இறைச்சிக்காகக் கால்நடைகளைக் கொல்பவன். (செ.ப.அக.அனு.) 2. சிலம்பம் வீசு வோன். (முன்.)

அடிகாற்று பெ. பெருங்காற்று. (இலங்.வ.)

அடிகுளிர்-தல் 4 வி. 1. கால் சில்லிடுதல். (பே.வ.) 2. (பலவீனத்தால் வெளியே துருத்திக்கொண் டிருக்கும்) ஆசனவாய்ப் பகுதி (அண்டி) சில்லிடுதல். (சாம்ப. அக.)

அடிகொட்டு - தல் 5வி. கால் பிடித்துவிடுதல். அடி கொட்டிடக் கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே (நாச்சி. தி. 4,1).

அடிச்சட்டம் பெ. கதவு, பலகணி முதலியவற்றின் அடி யில் இடும் மரச்சட்டம். (செ.ப.அக.அனு.)

அடிச்சட்டி பெ. சிறிய சட்டி.

கரணம் போடலாமா (பழமொழி).

அடிச்சரக்கு பெ.1.

அடிச்சட்டிக்குள்ளே

மட்டமான சரக்கு. (செ. ப. அக.

அனு.) 2. குப்பை. (முன்.)

.

(செ.ப.

அடிச்சால் பெ. உழவின் முதற்சால். (பே.வ.)

அடிச்சான்பிடிச்சான்வியாபாரம் பெ. சண்டை சச்சர

வான செய்கை. (நாட். வ.)

அடிச்சி (அடித்தி) பெ. 1. அடியவள். பூந்துழாய் தாராது ஒழியுமே தன் அடிச்சி அல்லளே (இயற். சிறியதி. 107). புனைகோதை சூட்டு உன் அடிச்சி யை (சீவக. 481 பா.பே.). அமுதவாரியை அடி பணிந்து அடிச்சியர் அரைய...எழுந்தருள்க (திரு விளை.பு.36,13). 2. பணிப்பெண். அடிச்சிக்கு ஆசை அரசன்மீது (பழமொழி).

அடிச்சிரட்டை பெ. தேங்காயின் அடிக்கொட்டாங்கச்சி. (இலங்.வ.)