உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடிச்சீப்பு

அடிச்சீப்பு பெ. வாழைத்தாறின் முதற்சீப்பு, (செ.ப.அக.)

அடிச்சுவடு பெ. கால்தடம், அடிப்பதிவு. பூவார் அடிச் சுவடு என்மேற் பொறித்துவை (தேவா. 4,96,1). பூவார் அடிச்சுவடு என் தலைமேல் பொறித்தலு மே (திருவாச. 11,7), அலத்தக அடிச்சுவடு அசோ கின் மிசை வைத்தாள் (சூளா.1606).

அடிச்சூடு பெ. பாதத்தில் உறைக்கும் வெப்பம். (பே.வ.)

அடிச்சூத்திரன் பெ. தாழ்த்தப்பட்ட வகுப்பினன். (செ.

ப. அக.அனு.)

அடிச்சேரி பெ. 1. பணியாளர் குடியிருப்பு. தம் எல்லையிலே இவன் வந்து புகுந்ததுக்கு இட்டராய் அடிச்சேரியிலே வந்து புகுவதே (திருவாய். 6,7, 1 ஈடு). 2. நகரையடுத்த ஊர். (செ. ப. அக. அனு.) 3. ஊரிற் காணியாளர் குடியிருக்கும் பகுதி. (முன்.)

அடிச்சேரியாள் பெ. இழிந்த

(செ.ப. அக.)

நடத்தையுடையவள்.

அடிசக்கை இ.சொ. மகிழ்ச்சி,வியப்பு, பாராட்டு போன்ற வற்றைப் புலப்படுத்தும் குறிப்புச்சொல். அடிசக்கை பந்தயத்தில் பத்தாயிரம் கிடைத்தது (நாட். வ.).

அடிசாய் - தல் 4 வி. அடிக்கீழ் நிழல் சாய்தல்,பொழுது சாய்தல். (முன்.)

அடிசால்பிடிசால் பெ. உழுத சாலில் போட்ட விதை மூடுமாறு உழும் உழவு. (தொ.வ.)

அடிசில் (அடுசில்) பெ. 1. சோறு. 'கமழ்குய் அடிசில் (புறநா. 10.7).பனுவலின் வழாப் பல் வேறு அடி சில் (சிறுபாண்.241). வெறுப்பில் இன்னடிசில் ஆக்கி (பெரியபு. 4,20). நெய் அடிசில் ஒத்ததோ (திருவரங்.அந். 95) அருங்கலத்திட்ட பால் அடிசில் (குசே. 152). 2. உணவு. அடிசிலும் பூவுந் தொடுத்தற்கண்ணும் (தொல். பொ. 144, 14 இளம்.). சோறு வேறு என்னா ஊன்துவை அடிசில் (பதிற்றுப். 45, 13). அடிசில் ஆக்குதற்கு அமைந்த நற்கலங்கள் (சிலப். 16,20). குன்றா அடிசில் குழிசி காணினும் (பெருங். 1,37, 253). ஆரமுது அடிசில் ஊட்டி (சீவக. 1453). இன் னடிசில் அன்போடு ஊட்டி (கம்பரா. 4, 13, 56). அருகிருந்து அடிசில் ஊட்டி (திருவிளை. பு. நகரச்சி. 55). 3. பால். பொற்கிண்ணத்து அடிசில் பொல் லாது எனத் தாதையார்முனிவுற (தேவா. 3, 24, 2). தேவர்க்கு... அடிசில் ஊட்டக்கற்றதுகாமதேனு (பேரூர்ப்பு. நைமிசப். 4).

பெ. சொ. அ. 1-9

1

[29

அடித்தலம்

அடிசில்நூல் பெ. உணவு சமைத்தலைப் பற்றிக் கூறும் நூல். அடிசில்நூல் மடையன் (சீவக. 2735).

அடிசிற்சாலை பெ. அன்னச்சத்திரம். அடிசிற்சாலை யும் அறப்புறமும் (சீவக. 76 உ.வே.சா. அடிக்குறிப்பு). அஞ்சுவை அடிசிற்சாலை (செ.பாகவத. 10, 41, 76). அடிசிற்பள்ளி பெ. மடைப்பள்ளி. ஐவேறமைந்த அடி சிற்பள்ளியும் (பெருங். 2,7,133).

அடிசிற்புறம் பெ. உணவிற்காக விடப்படும்

இறையிலி

நிலம். நங்கைமார்க்கு ... அடிசிற்புறம் ஆக்கினான்

(சீவக. 2577).

அடிசிற்றளி பெ. மடைப்பள்ளி. அடிசிற்றளியான் நெய் வார்ந்து ஏரி ஆயின (முன். 2579).

அடிசேர்-தல் 4 வி . 1. 69. காலில் வீழ்தல். விடேஎம்என நெருங்கின் தப்பினேன் என்று அடிசேர்தலும் உண்டு (கலித். 89, 14-15). 2. (இறைவன் பாதம் நினைந்து) வணங்குதல். மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் (குறள். 3 சிரீ பாதத்தை மன சிலே பற்றவைத்தார் - பரிதி.).

அடிஞானம் பெ. இறை அறிவு. அடிஞானம் ஆன் மாவில் தோன்றும் (சி. சி. சுப. 8, 28). அடிஞா னத்தாற் பொருளும் ஆன்மாவும் காட்டி (கந்தர்

கலி. 27).

அடித்தண்டா

பெ. கதவு திறக்காமலிருக்கப் போடும் நீண்ட இரும்புத் தடுப்பு. (ரா. வட். அக.)

அடித்தண்டு பெ. (செடிகளில்) வேரை அடுத்து மேற் செல்லும் பகுதி. (நாட். வ.)

அடித்தமை-த்தல் 11 வி. காய்ச்சி அடித்து உருவமைத் தல். (எந்திர. க. சொ. ப. 73)

அடித்தலம் பெ.

1.

கொண்டே

கீழிடம். பாசறை யொப்ப அடித்தலம் படுத்து ( கந்தபு. 2, 15,3).2. பாதம். அந்திப் பிறையணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே (தேவா. 4,92, 1). வென்றி வெந்திற லினானும் அவன் அடித் தலத்து வீழ்ந்தான் (கம்பரா. 6,15,167). முத்தமிழ் விரகர் பொன்னடித் தலம் (பெரியபு. 28, 1072). அடித்தலங்கள் பணிதல் செய்வாம் (கலிங். 11). 3. கட்டடத்தின் அடித்தளம். (all cir.) 4. திருவடிநிலை, பாதுகை. அடித்தலம் இரண்டையும் அழுத கண்ணினான் ... முறையிற் சூடினான் (கம்பரா. 2,13,136).