உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடைமத்தல்

யடைக்கும் நீர் நாடன் (முத்தொள். 68). வஞ்சப் புலனைத்தின் வழி அடைத்து (திருவாச. 22, 1). மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் (வேசு, 381), சேற்று நண்டு சேற்றைக் குழைத் தேற்றடைக் மூச்சை அடைத்ததடா குதே (முக்கூடற், 33), (பாரதி. பாஞ்சாலி. 52). 2. (வாயில் முதலியன) மூடுதல், பாடுநர்க்கடைத்த கதவின் (புறநா. 152, 19). பலர் புகுவாயில் அடைப்ப (குறுத். 118). கதவு அடைக்கும் கள்வனேன் (தேவா. 4, 5, 8), தாயர் அடைப்ப மகளிர் திறந்திட... திரிந்த குடு மிய கதவு (முத்தொள். 111), மலர்க்கோயில்கள் இதழ்க்கதவு அடைப்ப (கம்பரா. 1, 9, 3). வருவார் கொழுநர் எனத் திறந்தும் வாரார் கொழுநர் என அடைத்தும் (கலிங், 69), வாசற் சுதவடைத்தாள் (கூளப்ப விதலி, தூது 533). திருப்புகழ் முழக்கம்... இமை யோர் செவி அடைக்கும் (காவடிச் சிந்து 8, 7).

அடைமத்தல் 11 வி. 1. (பொருத்தமுற) நிய மித்தல், விதித்தல். அனைத்தனைத்து அவ்வயின் அடைத்தோன் (திருவாச. 3,28). நமக்கடைத்த பகவதநுபவத்தைப் பண்ணா நின்றால் (திருப்பா. 5 மூவா.அவ.). 2, இரட்டை நாகபந்தம் போன்ற சித்திரகளிகளின் கட்டங்களில் பொருத்தமுற எழுத்துக் களை அமைத்தல், (தண்டி. 98 உரை) 3. பாடல் களுக்குப் பண் அமைத்தல். செப்பரிய தமிழ் அனைத் தும் தெய்வ கானத்து அடைத்து (குரூபரம். 69). 4. (ஒன்றினுக்குள்/ஓரிடத்திற்குள் ஒன்றைச்) சேர்த் தல், சிறைப்படுத்தல், புகுத்துதல். செழியன் அடைத்த சென்னி பாட...சிறைவிடுத்த முன்னவன் (கல்லா டம் 34). அடைக்கலம் உடல் உறை ஐவரை யும் (திருவரங். அந். 18). கடுகிற் பெரிய கடலடைக் கும்

...

(தாயுமா. 20,1), மாட்டைப் பட்டியில் அடைத்தான் (நாட். வ.). 5. தழுவச்சேர்த்தல். இரதக்குடத்தையெணும் மரபோடே இருகைக்கு அடைத்து (திருப்பு. 225).

அடைத்தல் 11 வி. 1. ஒரு பொருளை ஒரு காரணத்துக்காக ஒப்படைத்தல், குத்தகைக்கு அல்லது அனுபோகத்துக்கு விடுதல். கணங்கள் தமக் கடைத்துப் புறப்பட்டான் (திருவால.பு.28,13), திருமேனி காவலுக்கு அடைச்ச (அடைத்த) நிலங் களுக்கு (தெ.இ.க. 32, 242), கோயில் நிலத்தைக் குத்தகைக்கு அடைத்திருக்கிறார்கள் (பே.வ.). 2. (மனத்தில்)வைத்தல், அடக்குதல். போன பொருள் மனத்து அடைப்பாய் அல்லை (கம்பரா. 4, 10, 15). அடைத்தல் 11 வி (உறுப்பின் செயலைக்) கெடுத்தல். இடிமுழக்கம் காதை அடைத்து விட்டது (நாட். வ.).

14

8

அடைன

அடைத்தல் 11 லி, பிரித்தல், நாலு பிரித்தல். நாலு கூறாக

அடைப்பதாகவும் (தெ. இ. க. 1, 64).

அடை14-த்தல் 11 வி. அறுதிபிடுதல். தனக்கு அடைத்த நாள் அறுதலின் (சீவக. 2831 நச்.). அளவை காட்டி அடைக்கலாம் அறிஞர் யாரே (கம்பரா.

6, 30, 221).

அடை 15-த்தல் 11 வி. 1. அமைத்தல், வீட்டைச்

சுற்றி வேலி அடைத்தனர்

தல். (செ, ப. அக, அனு.)

(நாட், வ.). 2. வகுத்

அடை 16-த்தல் 11 வி. ஒளித்து வைத்தல். மாடுகளை யாருக்கும் தெரியாமல் எங்கேயோ அடைத்து

வைத்துள்ளார்கள் (நாட். வ.),

அடை - த்தல் 11 வி. 1. கொடுத்தல்.

உயிர்ச்சின் பம் என்றும் அடைப்பானாம் (மு. சி. 1, 54), 2. (கடனைத்) தீர்த்தல். இந்த வருவாயால் வாங் கிய கடனை அடைத்துவிடுவோம் (நாட், வ.).

அடை15-த்தல்

11 வி. தகுந்ததாதல். அக்காலத் துக்கு அடைத்த காற்றுக்கள் (திருவாய், 10, 3, பிர.

ஈடு).

அடை13 பெ. 1. பொருந்துகை. சேர்ந்து அடைகருங் கலே சிவிகை ஆயிட (பெரியபு. 21, 131). 2. சேர்ப் பிக்கை. அவன்கண் அடைசூழ்ந்தார் நின்னை

அகன்கண் (கலித். 115, 18).

அடை28 பெ. 1. அடைக்கலம். புலவ மற்றுன் கை அடையாகும் (கம்பரா. 4, 7, 158). 2. அடைக்கலம் பொருள். அடைகொண்டு பாழ்போக்குவான் ஒரு வன் அன்றே (திருவாய். 5, 10, 5 ஈடு). துகிற்கும்... கச்சுக்கும் ... புடவிகையடை கொலோ

(தக்க. 83).

அடை1 பெ. 1. பணிகாரவகை, அப்பவகை. நல்வரி இறாஅல் புரையும் மெல் அடை (மதுரைக் 624}, நமக்கு மாவடை பழவனம் பிரியம் (அழகர்கலம்- 55). 2. பல பருப்பு வகைகளையும் அரிசியுடன் கூட்டி ஊறவைத்து அரைத்துக் கல்லில் சுடுகிற தோசை போன்ற உணவுப்பண்டம். (நாட், வ.)

அடை பெ. 1. இலை. புழற்கால் ஆம்பல் அக லடை (புறநா. 166,3). மராம்பொழிற் பாசடைத் துஞ்சும் (ஐந்.எழு. 12), பாசடைப் பிலிற்றும் பழனப் படப்பை (பெரும். 1, 48, 1453. அடைக் கிடந்த பாலனோ (கம்பரா. 3, 12, 41). தங்கிய பாசடைசூழ் கொடி (பெரியபு. 14,4). அண்டம்