உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிகலம்

அணிகலம் (அணிகம்!, அணிகலன்) பெ.

1. நகை. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் (குறள். 575). வேற்றுமைப்பட்ட அணிகலம் பெய்த சரக்கறையும் (சிலப். 5, 7 அடியார்க்.). நங்கை விழை யும் நாள் அணிகலங்கள் (பெருங். 3,12,86). தனக்கு அணிகலமாக உடைத்தாகலான் (இறை. அக. 18 உரை). பால்நிலாச் சொரிந்து நல்லார் அணிகலம் பகலைச் செய்ய (சீவக. 111). குன்றின் எம்மருங்கின் இட்ட அணிகலம் (கம்பரா. 5, 4, 34). 2. நகைப்பெட்டி. (புதுவை வ.) 3. கம்மாளர் கருவி. (யாழ். அக.)

அணிகலன்

(அணிகம்!, அணிகலம்) பெ. நகை. புண்ணியமுடைய இப்பொன் அணிகலன் (பெருங்.

2, 5,158).

அணிகொள்ளு-தல் 2 வி. 1. அழகுபெறுதல். ஒடுங்கு ஈர்ஓதி ஒண்ணுதல் அணிகொள ( பதிற்றுப். 81,28). 2. அலங்கரித்துக்கொள்ளுதல். சேர் அணிகொண்டு

(பரிபா.திர.2,8).

அணிச்சுரம் பெ. நாகமல்லிகை. (சாம்ப. அக.)

அணிச்சை பெ. நாகமல்லிகை. (பச்சிலை. அக.)

அணிசநாசம் பெ. நாகமல்லிகை. (சாம்ப. அக.)

அணிசேராநாடு பெ. (இக்.) வல்லரசு அல்லது வல் லரசு ஒப்பந்தக் கூட்டுடன் சேராது, நடு நிலை வகிக் கும் நாடு. அணிசேரா நாடுகளின் தலைமைப்பதவி இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது (செய்தி.வ.).

அணிஞ்சகம் பெ. கொடுவேலி. (சாம்ப. அக.)

அணிஞ்சில்' பெ. கொடுவேலி. (மலை அக.)

அணிஞ்சில்' பெ. சிற்றாமுட்டி. (முன்.)

அணிஞ்சில் ' பெ. நொச்சி. (முன்.)

அணிஞ்சில்' பெ.முள்ளி. (முன்.)

அணிஞ்சில்க பெ. அழிஞ்சில். (வின்.)

அணிஞ்சில்' பெ. புகையிலைச் செடியின் நோய்வகை. (இலங். வ.)

அணிஞ்சேபம் பெ. சிவப்புக் கொம்மட்டி. (சாம்ப. அக.)

அணிந்தம்

பெ.

மேடை. (வின்.)

கோபுரவாயிலின் முகப்பிலுள்ள

16

7

அணிமை1

அணிந்தவைதிருத்தல் பெ. (இருபத்து நான்கு மெய்ப் பாடுகளுள் ஒன்றாகிய) காதல் மயக்குற்ற பெண் நெகிழ்ந்துபோன தன் வளை முதலிய அணிகளைச் செறிக்கை. அணிந்தவை திருத்தல் (தொல். பொ. 259 இளம்.).

அணிந்தற்றுப்போ-தல் 4 வி .5 வி. வறுமைப்படுதல்.

(ராட். அக.)

அணிந்துரை பெ. ஒரு நூலைப் பாராட்டி எழுதி அதன் தொடக்கத்தில் சேர்க்கும் பகுதி. முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் பாயிரம் (நன். 1).

...

அணிநிலைமாடம் பெ. அடுக்கான மேல்நிலைகளுள்ள வீடு. அத்தம் பேரிய அணிநிலை மாடத்து (பெருங்.

1, 33, 105).

அணிநுணா பெ. சீத்தாப் பழந்தரும் மரம். (கதிரை.

அக.)

அணிநூல்

பெ. அணிகலன்களைக் கூறும் நூல்.

(திருவால.பு. 45, 6 அடிக்குறிப்பு)

அணிநோக்கி பெ.

செங்கொன்றை. (சாம்ப. அக.)

அணிப்பாடு பெ. வாணிக இரகசியம். (வட். வ.)

672).

அணிமா பெ. எட்டுவகைச் சித்தியுள் முதலாவதாகிய அணுப்போல் சிறுவடிவம் கொள்ளும் ஆற்றல். அந்த உலகம் அணிமாதி ஆமே (திருமந். அணுவினும் நுண் உருவு கொளல் அணிமா (சிவ தரு.10,90). அறிஞர் எல்லாம் நடுஅறிய அணிமா ஆதி (தாயுமா. 14, 11).

அணிமாக்கசங்கு பெ. இந்துப்பு. (சாம்ப. அக.)

அணிமுகம் பெ. ஒப்பனை செய்யப்பட்ட வாயில்முகப்பு. வாயின் மாடத்து ஆய்நல அணிமுகத்து (பெருங்.

3, 3, 31).

அணிமுலை1 பெ. பூசணி. (மலை அக.)

அணிமுலை' பெ. அழிஞ்சில். (சாம்ப. அக.)

அணிமுலைப்பால் பெ. பூசணிக் காம்பினின்று வடியும் நீர். (முன்.)

அணிமுலைமாது பெ. பூசணிக்காய். (முன்.)

அணிமை' (அண்ணிசு, அண்ணிமை) பெ. 1. அதிக நாள் ஆகாமை, அண்மைத்து. புனிறென் கிளவி