உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகம் 2

3. மேன்மை. கண்ணபுரமாலே கடவுளிலும் நீ. அதி கம் (தனிச். சிந். காளமே. 179). 4. இலாபம். (வின்.) 5. பொலிவு. அதிகம் பொலிவின் பெயரெனப் புகன்றனர்

600

(திவா.1672).

அதிகம் 2 பெ. (அளவை) தோல்வித்தானத்துள் ஒன்று. (செ. ப . அக. அனு.)

அதிகம்' பெ.

குருக்கத்தி. அதிகம்... குருக்கத்தியா

கும் (பிங். 2703).

அதிகமரிச்சம் பெ. வாலுளுவை அரிசி, (ச. வை. ர.

558)

அதிகமாதம் பெ. சந்திரமான கணிதத்தில் மூன்று ஆண்டுகட்கு ஒருமுறை மிகுதியாக வரும் மாதம். (விதான.குணா. 81 உரை/செ. ப. அக.)

அதிகமாலி பெ. குருக்கத்திக்கொடி. (சாம்ப. அக.)

அதிகமான் ( அதிகன், அதியமான் ) பெ. சங்க கால வள்ளல்களுள் ஒருவன். அது சேரமான் செல்வழித் தகடூரிடை அதிகமான் இருந்ததாம் (தொல். பொ. 62 நச்.).

அதிகமான்' பெ. கள்ளர் குலப்பட்டப்பெயர்களுள் ஒன்று. (கள்ளர்சரித். ப. 96)

...

அதிகர் பெ. 1. பெரியோர். நீத்த அதிகருக் கமுதம் ஏந்தல் புண்ணியம்தான் (சூடா.நி.12, 99). 2. பெருஞ்செல்வர். அதிகராய்ப் பொருள் ஈவார் (திருப்பு. 28). 3. அதிகமான் குலத்தினர். அதிகர் கோன் அடற்படையும் உளநிறை வெஞ்சினந்திருகி (பெரியபு. 41,19).

அதிகர்ணி பெ. காக்கணங் கொடி. (சாம்ப. அக.)

அதிகரணத்தண்டம் பெ. பழைய வரிவகை. (செ.ப. அக. அனு.)

அதிகரணம் 1 பெ. 1. கூறப்படும் பொருள், ஐயப்பாடு, பிறர் கருத்து, மறுப்பு, இயைபு இவற்றை நிலைக்கள மாகக் கொண்டிருப்பது. (சி.போ. 1 உரை) 2. தத்துவ நூல் போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்த பகுதி. (சி.போ.சிற். 1 அதி.)

அதிகரணம் - பெ.ஏழாம்

வேற்றுமைப் பொருள்.

எழுவாய் கருத்தா எனவும் இடம் அதிகரணம் எனவும் வடமொழி நூல்களுள் கூறப் பெறும் (பிர.

வி. 9 ப.54).

194

அதிகன் 1

அதிகரம் பெ. காட்டு மல்லிகை. (சாம்ப. அக.)

அதிகரி-த்தல் 11 வி.

மிகுதியாதல். எப்போதும்

இனியபிரான் இன்னருளால் அதிகரித்து மெய்ப் போதநெறி (பெரியபு. 62, 1).

அதிகரி 2 - த்தல்

11வி. 1. அதிகாரஞ் செலுத்துதல். அதிகாரம்-அதிகரித்தல். அஃது இருவகைப்படும். அவற்றுள் ஒன்று வேந்தன் இருந்துழி யிருந்து தன் நிலம் முழுவதும் தன்னாணையின் நடப்பச் செய் (நன். எழுத்து. முன்னுரை சிவஞா. விருத்.). அதி

2.

வது காரம் என்பது அதிகரித்தல்...அரையன் இருந் துழியிருந்து தன் நிலமுழுதும் தன் ஆணையின் நடப்பச் செய்வது (முத்துவீ, தற்.சி. பாயி.) கற்றல். தன் குலத்துக்கு உரிய வேதம் அதிகரிக்க வேண்டுதலின் (சீவக. 370 நச்.). அவை நீ அதிக ரித்து அறிதற்குரியை (அரிசமய. 4, 78). ஆகமத்தை அதிகரித்தவர்க்கு... ஆர்ச்சித்த கன்மாதிகள் அழி யும் (சிவதரு. 12, 9). மிக விரைவில் அதிகரித்து விட்டார் நம் தேசிகர் (தேசிகப். முன்னுரை ப. 4). முனைதல். தூத கிருத்தியத்திலே அதிகரித்துப் போவது வருவதாய் (பெரியதி. 2, 10, 8 தமிழாக். வியாக்.).

3.

அதிகல் (அதிரல்) பெ. காட்டு மல்லிகை. (பச்சிலை.

அக.)

அதிகவலங்காரம் (அதிகாலங்காரம்) பெ. (அணி.) ஆதாரத்தை விட ஆதாரத்தால் தாங்கப்படும் பொருள் பெரிது எனக்கூறும் அணி. ஆதாரத்திலும் ஆதே யம் பெருத்து அகலம் பெறாது அடங்கியது எனல் அதிகம் (மாறனலங். 178).

அதிகவாரம் பெ. பார்ப்பனர் முதலியோருக்கு விளை வில் பிரித்துக் கொடுக்கும் மிகுதியான பங்கு. (செ.ப.

அக. அனு.)

அதிகவுச்சம் பெ. கோள்களின் மிகுந்த உச்சநிலை. (சாதக.சிந். 129(சங். அக.)

அதிகழிச்சல் பெ. மிகுதியாகக் கழிச்சலாதல், மிகுந்த ரத்தப் போக்கு, வயிற்றோட்டம், வயிற்றளைச்சல்.

(சாம்ப. அக.)

அதிகற்றாதி பெ. கொடுவேலி என்னும் குத்துச்செடி வகை. (மலை அக.)

அதிகன்' (அதிகமான், அதியமான்) பெ. சங்ககால வள்ளல்களுள் ஒருவன். வெள்ளத்தானை அதிகன்