உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்தமாகதி

அர்த்தமாகதி பெ. பண்டைப் பிராகிருத மொழி வகை களுள் ஒன்று. (சி. சி. பாயி. 2 மறைஞா.)

அர்த்தமானியம் பெ. பாதிப்பகுதி இறையிலியாக விடப் பட்ட நிலம். (வட். வ.)

அர்த்தமூலம் பெ. (சோதிடம்) மூல நட்சத்திரத்தின் முதல் இரண்டு பகுதி. (சோதிட சிந். 56 / செ. ப. அக.

அனு.)

அர்த்தயாமம்

(அத்தயாமம், அர்த்தசாமம்) பெ. இறைவனுக்குக் கோயிலில் புரியும் நள்ளிரவுப் பூசை. மகாதேவர்க்கு அர்த்தயாமத்துக்கு வேண்டும் நிவந் தத்து (தெ.இ.க.8,52,7).

அர்த்தயோகாசனம் பெ. மடக்கிய காலையும் உடலை யும் யோகபட்டத்தால் கட்டி ஒரு கையில் சின்முத்திரை காட்டி மற்றொரு கையை மடக்கிய முழங்கால் மீது நீட்டி அமைக்கும் ஆசனநிலை. (சிற். செந். ப. 61)

அர்த்தரதம் பெ. அர்த்தரதர், சமரதர், மகாரதர், அதி ரதர் என நால்வகைத் தேர்வீரருள் முதல் வகையின ராகிய அர்த்தரதர்க்குரிய தேர். (பத்ம. தென்றல். தூது

67 உரை)

அர்த்தரதன் பெ. தன்னை மட்டும் காத்துக் கொண்டு போர்புரிகின்ற தேர்வீரன். நண்ணும் அர்த்தரதர்க்கு நாயகர் நகுலனும் சகதேவனும் (பாரதம். 5, 8,3).

அர்த்தராத்திரி பெ. நள்ளிரவு. அர்த்தராத்திரிய தாகும் அமரர்கோன் வாழும் ஊரில் (மச்சபு. சூரியசந். 12). அரிய மாணிக்கம் அர்த்தராத்திரியில் விழுந்தது கண்டாற் போலவும் (சீவசம். 59 உரை). அற்ப னுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் (பழ. அக. 834).

அர்த்தவாதம் பெ. 1. விதிவிலக்குகளை வற்புறுத் தும் வாக்கியம். (சிவசம. 35) 2. புகழ்ச்சி. இவ்விட யத்தில் அர்த்தவாதமில்லை (திருவாய். 3,9,2 ஈடு).

அர்த்தவேடணை பெ. பொருள் விருப்பம். ஏடணை மூன்றாவன: அர்த்த வேடணை, லோக வேடணை, புத்திர வேடணை (நாம.நி.576).

அர்த்தவேதம் பெ. பொருள் நூல். (வேதா. சூ. 3

உரை)

31

4

அர்த்தாலங்காரம்

அர்த்தவைத்திகதானகம் பெ. தலையையும் உடலையும் நேராக நிமிர்த்திச் சமநிலையில் கைகளையும் கால்களை யும் நெருங்க வைத்துப் பாதங்களின் பெருவிரல் களின் இடைவெளி ஒருசாண் அளவு இருக்கும்நிலை. (சிற். செந். ப.58)

அர்த்தன் (அரத்தன்', அருத்தன்') பெ.

உமையை

ஒரு பாதியில் கொண்ட சிவபெருமான். (சமயவ.)

அர்த்தாங்கவாதம்

பெ. (மருத்.) உடலில் நோய்

கண்ட பக்கம் காலும் கையும் அசைவு அற்றுப் போவ தாகிய பாரிசவாதம். (பைச.ப.301)

அர்த்தாங்கவிசிவு

பெ. ஒரு பக்கவாதம். (தைலவ.

128/செ. ப. அக.)

அர்த்தாங்கி

கம்பணவுடையார்

பெ, மனைவி.

அர்த்தாங்கி இராமாதேவியார் (தெ.இ. க. 4,99).

.

அர்த்தாங்கீகாரம்1 பெ. 1. இருதிறத்தாருள் ஒரு திறத் தார் மட்டும் உடன்படுகை, பாதியுடன்பாடு. (திருவாய். 4, 1, 1 ஈடு) 2. பிறர் கருத்துள் ஒரு பகுதியை ஏற் றுக்கொள்ளல். தெறுபொருளும் வேந்தன் பொருள் எனவரும் இதனுள் அர்த்தாங்கீகாரம் காண்க (திருக். நுண்பொ. 82).

அர்த்தாங்கீகாரம்' பெ. சொற்பொருள் மட்டும் ஏற்றுக் கொள்ளுகை. உபதேசமொழிகளை அர்த்தாங்கீகார மாக ஏற்றுக்கொண்டு (வைராக். சத. 10 குறிப்பு).

அர்த்தாசனம் பெ. சரியாசனம். அர்த்தாசனம் அவ னோடேறியும் (பாண்டி. செப். சின்ன. சிறிய. 5).

அர்த்தாந்தரநியாசம் பெ. (அணி.) வேற்றுப் பொருள் வைப்பணி (அணி. 61)

.

அர்த்தாந்தரம்' பெ. வேறு பொருள். (சங். அக.)

அர்த்தாந்தரம்? பெ. தோல்வித்தானத்து ஒன்று. (செந்.

4, 13)

அர்த்தாப்பு பெ. உருளைக்கிழங்கு. (செ.ப.அக.)

அர்த்தாபத்தி (அருத்தாபத்தி) பெ. தெரிந்த பொரு ளைக் கொண்டு தெரியாதவற்றை ஊகித்தறிதல் என் னும் உத்தி. (சி. சி. அளவை. 1)

அர்த்தாலங்காரம் பெ. (அணி.) பொருளணி. (சங். அக.)