உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்த்தநாரிபாகம்

அர்த்தநாரிபாகம் பெ. சிவனின் உடலில் பாதிப்பெண் வடிவு. (சிவஞானதேசி. திருவருட். 2, 6)

அர்த்தநாரீசன் (அத்தநாரீசுரன்,

அர்த்தநாரீசுரன், அர்த்தநாரீசுவரன்) பெ. உமையை இடப்பாகத்தில் கொண்ட சிவபிரான். நம்பர் திருநாகமலை மேவி வளரும் அர்த்தநாரீசருக்கு உகந்த நல்லடியவன் (செங்கோட். பள்.35). அர்த்தநாரீசர் மேவும் நாக மலை (பாம்பண. குற. ப. 78). அத்தரு முதலாவுள்ள அர்த்தநாரீசன் சென்னி வைத்தநற் பிறையின் வார்ந்து (செங்கோட்டுப்பு. 3,2,16).

அர்த்தநாரீசுரம் பெ. இருபத்தைந்து மகேசமூர்த்தங் களில் ஒன்று. இருபத்தைந்து மகேசுர பேதங்களா வன அர்த்தநாரீசுரம் நபுஞ்சகரூபம் பனவாம் (தத்து. பிர. 21 உரை).

...

அர்த்தநாரீசுரன்

என்

(அத்தநாரீசுரன், அர்த்தநாரீசன், அர்த்தநாரீசுவரன்) பெ. பாதியுடம்பு பெண்ணாக இருக்கும் சிவன். திருச்செங்கோட்டர்த்தநாரீசுரன் வாழி (சந்திரவி.100).

அர்த்தநாரீசுவரன் (அத்தநாரீசுரன், அர்த்தநாரீசன், அர்த்தநாரீசுரன்) பெ. உமையை

இடப்பாகத்தில் உடைய சிவபெருமான். அர்த்தநாரீசுவரன் என்னும் பார்வதி பரமேசுவரன் போலச் சொல்லும் பொரு ளும் (பிர.வி. 18 உரை).

அர்த்தபிசகு பெ. பொருட்பிழை. (செ. ப. அக. அனு.)

அர்த்தப்பிரபஞ்சம் (அத்தப்பிரபஞ்சம்) பெ. பொருள்

உலகு புவனம், தத்துவம், கலை

என்பவைகளைத்

தன்னகத்தடக்கியதும் சுத்தப் பிரபஞ்சத்தின் இருவகை களுள் ஒன்றாயதுமான உலகு. (செ. ப. அக.)

அர்த்தப்புரட்டு பெ. பொருட்குழப்பம். (பே.வ.)

அர்த்தபஞ்சகம் பெ.

(வைணவம்) இறைவன்நிலை, உயிரின் நிலை, இறைவனை அடையும் நெறி, நெறியில் உண்டாகும் தடை, தடை நீங்கி அடையும் நிலை என் னும் ஐம் பொருள்கள். அர்த்தபஞ்சகம் ஆவது... ரூபங்களை உள்ளபடி அறிதல் (அட்டாதச. அர்த்த.

தொடக்கம்).

அர்த்தபதுமாசனம் பெ. இரு பாதங்களில் ஒன்றினைச் சாதாரணமாக ஆசனத்தில் மடக்கிப் படுக்கக் கிடத்தி மற்றொன்றை முன்போல் தொடைமீது வைத்து அமர்ந்திருக்கும் நிலை. (சிற்.செந்.ப.59)

3

13

அர்த்தமண்டலீகன்

அர்த்தபாதம் பெ.கீழாநெல்லி. (மரஇன. தொ.)

அர்த்தபிருட்டகம் பெ. கூத்தின் அங்கக் கிரியைகளுள் ஒன்று. (சிலப். 3, 12 உ. வே. சா. அடிக்குறிப்பு)

அர்த்தபுட்டி பெ. பொருட் பொலிவு. (பே.வ.)

மரபுக்கு

அர்த்தபேதம் பெ. பொருள் வேறுபாடு. மாறாக அர்த்தபேதம் செய்யக்கூடாது (செய்தி.வ.).

அர்த்தபேதரோகம் பெ. ஒற்றைத்தலைவலி. (பைச. ப.

259)

அர்த்தபோதனம் பெ. ஒன்றின் சொற்பொருளைத் தெரி வித்தல். (வைணவ.ப.109)

அர்த்தம் 1 (அத்தம், அருத்தம்', அருத்து') பெ. 1. சொற்பொருள். அர்த்த சாமார்த்தியத்தால் கொள் வது (சி. சி. சுப. 18 மறைஞா.). விபத்தி என்னும் வேற்றுமையும் விபத்தி அர்த்தம் என்னும் வேற்று மைப் பொருளும் கூறுகின்றது (பிர. வி. 6 உரை). சில கவிகளின் அர்த்தம் எனக்கு மட்டும் தெரிகின்றது (பிரதாப. ப. 17). மருந்தன வேத அர்த்தம் முழுவ தும் உரைக்கும் (சூத. எக்கிய. 11). 2. உறுதிப் பொருள் கள் நான்கினுள் ஒன்று. தர்மார்த்த காமமோட்சம் சிவாகமம் (பிங். 103).

அர்த்தம்' (அத்தம்10) பெ. அரை. குடகோளார்த்தம் குணகோளார்த்தம் (நிலவியல் வ.). அர்த்தசந்திரன்

(பே.வ.).

அர்த்தம்' இ. சொ. (இலக்.)

பொருட்டு

என்னும்

பொருளில் வரும் பின்னொட்டு. அது சீவனார்த்தச்

சொத்து (முன்.).

அர்த்தம்பண்ணு-தல் 5 வி. ஒரு பாடலுக்கோ பகுதிக்கோ பொருள் செய்தல். (கதிரை. அக.)

அர்த்தமண்டபம் (அத்தமண்டபம்) பெ. திருக்கோயி லில் கருவறைக்கு முன்னுள்ள மண்டபம். கெற்பக் கிரகமும் முடித்துப் புதிய அர்த்த மண்டபமும் கிள ரச்செய்தான் (வைத்த. திருப்பணி. 23).

அர்த்தமண்டலீகன் பெ. முடிமன்னர்கள் இரண்டாயிர வரின் தலைவன். மகுடவர்த்தனர் இரண்டாயிர வணக்கியாள்வான் அர்த்தமண்டலீகன்

வரை

ஆகும் (சீவசம். 73 உரை).