உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்கம்7

அரக்கம் பெ. சாயங்களில் உலோக உப்புக்கள் சேர்க் கப்பட்ட வண்ண ப்பசை. (அச்சுக்கலை ப. 32)

அரக்கம்' பெ. பாதுகாப்பு. பாரரக்கம் பயில்புகாரில் (தேவா. 1,65, 8).

அரக்கர் பெ. 1. பதினெண் கணத்துள்

ஒருவர்,

இராக்கதர். அரக்கர் கோமான் (கலித். 38, 3). அரக்கர் புரம் எரி செய்தவர் (தேவா. 5,80,5). வாள் அரக்கர் புரம் எரித்தானே (திருவாச. 28, 4). இரக்கம் என்று ஒருபொருள் இலாத நெஞ்சினர் அரக்கர் (கம்பரா. 3, 3, 12). அரக்கர் வேலும் கூர் வாளும் சேர்த்தடித்த கொழு (முக்கூடற். 111). 2. கொடியவர். வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே (பாரதி. தேசியம்.28,2).

அரக்கரிசி பெ. அரக்கு வகை. (சங். அக.)

அரக்கல் பெ. அரசுக்கு வரி கட்டும் தவணை. (திருவாங்.

கல். 3, 62)

அரக்கன்1 பெ. 1. இராக்கதன். அரக்கன் ஐந் நான்கு தோளும் (காரை. இரட்டை மணி. 14). வரை யெடுத்த திறலரக்கன் (தேவா. 1,12,8). மதிக்கும் திறலுடைய வல்லரக்கன் தோள் நெரிய (திருவாச. 40,7). ஆம்பல் முக அரக்கன் கிளையொடுமடிய (கல்லாடம் 1, 19). எண்ணமிலா வல்லரக்கன் எடுத்து முறிந்து இசைபாட (பெரியபு. 28, 77). 2. பேய். பிரம அரக்கன் அகலம் பிளந்து (குலோத். உலா 22). 3. இரக்கமற்றவன், கொடுமையானவன். குடியைக் கெடுத்த கொடிய சண்டாளன் அரக்கன் (நாஞ்:

LD LOIT GOT. 9, 4).

அரக்கன்' பெ. சூடு போடுதற்குரிய மாடு.

(இலங்.வ.)

அரக்காணி பெ. காசல்கீரை. (மரஇன. தொ.)

அரக்காணி' பெ. காட்டுச் சந்தனம். (முன்.)

அரக்காம்பல் பெ. செவ்வாம்பல், செவ்வல்லி.

அரக்

காம்பல் வாய் அவிழ வெள்ளம் தீப்பட்டதென வெரீஇ (முத்தொள். 110).

அரக்கி ! பெ. 1. இராக்கதப் பெண். தீ அரக்கி மூக்கும் பருச்செவியும் ஈர்ந்த பரன் (இயற். பெரியதிருவந். 63). மை வண்ணத் தரக்கி (கம்பரா. 1, 9, 24). பயம் தீர்த்து அரக்கியர்கள் வெரீஇ (சிலையெழு. 22). வளமை ஒழித்திட அழுத அரக்கியர் (திருமலைமுரு.

3.

16

அரக்கு 2- தல்

பிள். 38). கடுந் தொழிலரக்கி (குசே. 668). 2. கொடிய வள். இவள் எப்படிப்பட்ட அரக்கியாயிருக்க வேண்டும் (பிரதாப. ப. 128). கணவனைக் கைவசம் ஆக்க நினைத்த அரக்கிகள் அல்லவோ (நாஞ். மரு.

LDIT GOT. 10, 83).

அரக்கி 2 பெ. பாடாணம். (வைத். விரி. அக. ப.

அரக்கி' பெ. கடுக்காய். (மரஇன. தொ.)

16)

அரக்கிதழ்முளரி பெ. (சிவந்த இதழ்களை உடைய) தாமரைப்பூ. அலர் பொலம் பொகுட்டு அரக்கிதழ் முளரியம் போதில் குலவு சேயிழை (செ. பாகவத.

1, 1, 8).

அரக்கிநட-த்தல் 12 வி. தொடை உராய நெளிந்து நடத்தல். அவன் அரக்கிநடக்கிறான்

(பே.வ.).

அரக்கிலச்சினை பெ. அரக்கால் இடும் முத்திரை. புன்புல வழியடைத்து அரக்கிலச்சனை செய்து (திரு மழிசை, திருச்சந். 76). அரக்கிலச்சினையின் வைத்த எஞ்சலில் ஓலை (சூளா.512).

அரக்கிலைச்செடி பெ. காவி நிறத்துக்குப் பயன்படுத் தும் இலைதரும் செடி. இப்படிக்கு அமைப்பு சமைப் பும் அரக்கிலைச்செடி இருத்தினோம் (தெ. இ.க. 5,

753).

136).

அரக்கு1-தல் 5வி. 1. துடைத்தல். கண்கலிழ்உகுபனி அரக்குவோரே (குறுந்.398). பெருமதர் மழைக் கண் வருபனி அரக்கி (பெருங். 1,33, 2. தேய்த்தல். கரந்து யான் அரக்கவும் கைநில்லா வீங்கிச் சுரந்த என்மென் முலைப்பால் (கலித். 84, 3). முடியரக்கும் பூங்கண்ணி மூரித்தேர் வேந்தர் (சூளா. 1802).3. அழுத்துதல், அமுக்குதல். விரலால் தலை அரக்கினான் (தேவா. 5, 20, 10). நுனித்துக் கண் அரக்கி நோக்காது (சீவக. 2541). 4. அடக்கு தல். அரக்கநில்லா கண்ண நீர்கள் (நாச்சி. தி.3, 4). 5.(வாயில் அடக்கித்) தின்னுதல். ஆடு குழை அரக்குகிறது (பே.வ.).

2.

அரக்கு'-தல் 5வி. 1.நெருக்குதல். அன்றவன் ஆகம் அரக்கினனே (சிவதரு. 7, 46). வருத்துதல். எல்லரக்கும் அயில்நுதிவேல் இராவணன் (கம்பரா. 5, 2, 230). 3.சிதைத்தல். சிதைத்தல் தேய்த்தல் அரக்குதல் (சூடா. நி. 9, 12). 4. வெட்டுதல், தாளும் தோளும் அரக்கி (விநாய. பு. 42, 4). 5. கிளை தறித் தல். (வட்.வ.) 6. முள்ளைச் சீவுதல். (ரா. வட்., அக.)