உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கு

நடக்கின் (திருவரங். கலம். 80). தரங்கமீன் பொன் 4. போர்க் அரங்கிடை தாவும் (முக்கூடற். 20). களம். குறைத்தலை நடப்போர் அரங்கு (கம்பரா. 6, 2, 61). 5. சூதாடுவதற்கு வகுத்த தானம். அரங் கின்றி வட்டாடியற்றே (குறள். 401). 6.சூதாடு மிடம். அறிவிலாளர் சூதாடும் அரங்கினும் (பிர மோத். 22,13). 7. (இக்.) திரைப்படக் கொட்டகை. அரங்கு நிறைந்த காட்சி (செய்தி. வ.).

2.

அரங்கு பெ. 1. உள்வீடு. அரங்கு பூட்டாம் அறைப் புரை பூட்டாம் (நாஞ். மரு. மான். 2, 3), மாளிகை. ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம் (கம்பரா. 1,19,33)

அரங்கு' பெ. கருப்பம். அரங்கில் அவன் என்னை எய்தாமல் காப்பான் (இயற். நான்முகன் திருவந். 30).

அரங்கேசன் பெ.

திருவரங்கத்திலுள்ள அரங்கநாதப் பெருமான். அக்கமலத்தில் இருந்தான் தந்தை அரங்கேசன் (நூற்று. அந்.6). அரங்கேசற் கன்பாம் வானவரம்பன் (மாறனகப். 2). வாடற் பழஞ்சருகு வேட்டு அரங்கேசனும் இரப்ப அருள்...வல்லி (அழ. பிள். பழிச். 9).

அரங்கேற்றம்

...

பெ. கவிஞர்களும் பிற கலைஞர்களும் தம் கலைத்திறனை ஆன்றோர் அவையில் அவர்கள் ஏற்குமாறு காட்டுகை. (நாட்.வ.)

அரங்கேற்று-தல் 5 வி. 1.கவிஞர்களும் பிற கலைஞர்

...

களும் தம் கலைத்திறனை முதலில் ஆன்றோர் அவை யில் அவர் ஏற்கச்செய்தல். மங்கை மாதவி அரங் கேற்றுகாதையும் (சிலப். பதி. 65). இராமகாதை... அரங்கர் முன்னே அரங்கேற்றினானே (கம்பரா. 1 மிகை. தனியன் 9). கூடல் மான்மியத்தை கேற்றினானே (திருவிளை. பு. சிறப்புப்பா. 1). அரங் கேற்றினன் உள்மகிழ்ந்தே (குசே. 20). 2. பரிமாறு தல். மால் அமுதை அரங்கேற்றுமாபோல் (திரு விளை. பு. சிறப்புப்பா. 1).

...

அரங்

அரங்கேற்றுப்படி பெ. அரங்கேற்றம். (செ. ப. அக.)

அரங்கேறு-தல் 5 வி. கவிஞர்களும் பிற கலைஞர்களும் தம் கலைத்திறனை ஆன்றோர் அவையில் அவர் ஏற் பினைப் பெறுவதற்காகக் காட்டுதல். எண் திசை யோர் மெச்ச அரங்கேறினாள் (கூளப்ப. விறலி. தூது

197).

அரசக்கூத்து பெ. ஒருபக்கம் தாண்டவ வேகமும், மறு

32

20

அரசநாகம்

பக்கம் லாசியத் தழைவும் என இருவகையாக ஒரே சமயத்தில் விளங்குமாறு ஆடும்கூத்துவகை.

...

இவ்

வண்ணம் இருபக்கமும் இருவகையாக இயங்கி இரண்டு இயக்கமும் ஒரேசமயத்தில் ஒன்றாக இணையக் கூத்திடல் அரசக்கூத்து (கூத்த.ப.

352).

அரசகம் பெ. கோரச்செயல், அராசகம். (இலங்.வ.)

அரசகேசரி பெ. தமிழ் இரகுவமிசத்தின் ஆசிரியர். (பாவலர்சரித்.ப.88)

அரசங்கம் பெ. அரசனுக்கு உறுப்புப் போன்ற அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்னும் ஆறு பகுப்புக்கள். (குறள.381 பரிமே.)

அரசங்கள் பெ. அரச மரத்திலிருந்து எடுக்கும் கள். (செ. ப. அக.)

அரசச்செல்வம் பெ. அரசாட்சித்திரு, ஆள்கின்ற உரிமை. மற்றவற்கு அரசச்செல்வம் இன்னணம் அமர்ந்தது அன்றே (சூளா: 69).

அரசசட்டம் பெ. மறைந்துபோன ஒரு

(யாப்.வி.96 உரை)

கணிதநூல்.

அரசசிங்கம் பெ. அரசர்களுள் சிங்கம் போன்றவன். ஆய்ந்து அகம் கமழும் கோதை அவள் பெற்ற அரசசிங்கம் (சூளா.537).

அரசண்மை

பெ. நாட்டுக்கு வரும் அறுவகைக் கேடு களுள் ஒன்றான எதிரி அண்மையில் இருக்கை. மிக்கபெயல் அரசண்மை என்றி

கேடாவது

வற்றான் வருவது (குறள். 732 பரிமே.).

அரசத்துரோகம் பெ. உடனிருந்து வேந்தனை வஞ்சித் தல், அரசனுக்குத் தீங்கு விளைக்கும் செய்கை. அர சத்துரோகம் மிகக் கடுமையான குற்றம் எனக் கருதப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது (இந். பண்பாடு 12 ப. 45).

அரசநண்டு பெ. பெரிய நண்டு வகை. (கலை. அக.

2 ப. 148)

அரசநாகம் பெ. 1. இறக்கையுள்ள பாம்பு. பறவைப் பாம்பு அரசநாகப் பகுப்பு (நாம.நி.261).2. நல்ல பாம்பினத்தில் நச்சுத்தன்மையில் விஞ்சியிருக்கும் பாம்பு. (பே.வ.)