உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரண்மனைக்கிராமம்

அரண்மனைக்கிராமம் பெ. அரச குடும்பத்தினர்க்குச் சொந்தமான ஊர். (பே.வ.)

அரண்மனைச்சீட்டு (புதுவை வ.)

பெ. அரண்மனைக் காகிதம்.

அரண்மனைசுவத்தியம் பெ. படைக்கு வேண்டிய உண வுத்தானியங்களை விளைவிப்பதற்காக அரசாங்கத்தார் பண்ணையாக வைத்துக்கொள்ளும் நிலப்பகுதிகள். (செ.ப.அக. அனு.)

அரண்மனையார் பெ. 1. அரச குடும்பத்தில் முக்கிய மானவர்கள். (முன்) 2. அரண்மனை அலுவலர்கள். ((LOGIT.)

அரண்மனை யூழியம் பெ. 1. அரண்மனையில் வேலை புரிகை. (முன்.) 2. கூலியற்ற வேலை (புதுவை வ.)

அரணபாதம் பெ. அருகன் ஆலயம் இருந்த ஒரு மலை. இரண்டு காதம் இறந்தபின் இருண்டு தோன்றும் அம்மலை அரண பாதம் (சீவக. 1177).

அரணபுரத்தாழ்வான்

பெ. இராமாநுசரால் நியமிக்கப் பெற்ற சிம்மாசனாதிபர்கள் எழுபத்துநால்வர்களுள் ஒரு வர். எம்பெருமானார் திருவடிகளிலே ஆசிரயித்த முதலிகளான எழுபத்து நாலாசார்யர்களாரென் னில் ... பிள்ளையப்பன் அரணபுரத்தாழ்வான் .ஆர்க்காட்டுப் பிள்ளான் (குருபரம். ஆறா.ப.270).

...

...

அரணம்1 பெ. 1. காவல், பாதுகாப்பு. சேர்ந்தோர்க்கு அரணம் (பதிற்றுப். 59,10). அவர் அவர் செய்பொரு ட்கு அரணமும் நீயே (பரிபா. 4, 73). அரணம் கை கூட்டுவது அஞ்செழுத்தாமே (திருமந். 2702). என்னு யிர்க்கு அரணம் நாடி (யசோதர. 139). அந்தகற்கும் ஓர் அரணம் இல்லை (கம்பரா. 4, 3, 66). அரணம்

பலகுலாம் படைசெய் நெடுநிலை மாடம் (கருவூர். திருவிசை.9,1). உறை அரணம் உள ஆகில் தெரிந் துரைப்பீர் (பெரியபு. 41, 14). அரணம் பொரு ளென்று அருளொன்றிலாத அசுரர் (அபி. அந். 50). 2. கோட்டை மதில். முழு முதலரணம் முற்றலும் கோடலும் (தொல். பொ. 66 இளம்.). கடி அரணம் பாயா நின் கைபுனை வேழம் (கலித். 86, 7). கடி அரணம்பொடி செய்த (தேவா. 4,12,7). அரி அரணம் செற்று (சேரமான். உலா 191). அருங்கடி அரணமூதூர் ஆகுல மயங்கிற்றன்றே (சீவக. 1112). உற்றவருற்ற துணர்ந்திலர் போல் ஒரு மூன்று அர ணம் (அம்பி. கோ. 519). அரணமும் துருக்கமும்

3

29

...

அரணவுணர்வு

.

ஆறும் தாண்டிடும் (திருவிளை. 4.59,95).3. கோட் டையின் பகுதி, கொத்தளம். அரணமே கொத்தள மும் (அக.நி. அம்முதல். 212). 4. வேலி. அரணமே கவசம் வேலி நாற்பேர் (சூடா.நி.ரகர. 2).5. காவலாக அமையும் காடு. அரணமும் அரணமும் துருக்கமும் ஆகும் (பிங். 538).6. கவசம். மெய் புதை அரணம் (பதிற்றுப். 52,6). சிலம்படி முண்டகம் அரணம் ஆக எம் இதயத் தணிகுவாம் (அருணகிரி பு. காப்பு 3). அரைசரும் அமர்மலைந்து அரணம் வீசினார் (சீவக. 777). மெய்த்திகழ் தரும் அரணமும் உளர் (சிவதரு. 7, 44). 7. (காலிற்குக் கவசமாகிய) செருப்பு. அடிபுதை அரணம் (பெரும்பாண். 69). அரணமே செருப்பும் (அக. நி. அம்முதல். 212). விலக்கு, பரிகாரம். அரணம் இல் கூற்றின் முரண் தொலை ஒருவனும் (ஞானா. 63,4).9. கையிலணி யும் காப்புறை. அதள்புனை அரணமும் (சிலப். 14, 170 தோற்கைத் தளம் - அடியார்க்.)

...

8.

அரணம் ' பெ. புகலிடம். சூரன் மாமதலை சரணமே அரணம் (பாரதம். 1, 8,61)

அரணம்' பெ. வேல். விட்டேறு அரணம் ... வேலே

(பிங். 1573).

அரணம் + பெ.

அரணம்5

பூசல். (கயா.நி.562)

...

பெ. மஞ்சம். அரணமே மஞ்சமும் (அக. நி. அம்முதல்.212).

அரணம்' பெ. அபகரிக்கை. (நாநார்த்த. 659)

அரணம் 7

7

பெ. சீதனப்பொருள் (முன்.)

அரணம்:

பெ.

புயம். (முன்.)

அரணம

பெ. கருஞ்சீரகம். (தைலவ.112/செ. ப.

அக.)

அரணம்வீசு - தல் 5 வி. கவசமணிதல். அடுபடை இளையரும் அரணம் வீசினார் (சீவக. 1847).

அரணமை-த்தல் 11 வி. பாதுகாப்பமைத்தல். (மானிட

வியல் க. அக. ப. 33)

அரணவுணர்வு பெ. (உயிர்க்குப்

பாதுகாப்பாகிய)

இறைவனைப் பற்றிய அறிவு, பதிஞானம். அரண

வுணர்வுதனில்... கரணமும்

காலும் கைகூடும்

(களிற்று. 41).