உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலர் ே

அலர் பெ. மஞ்சள். (பச்சிலை. அக.)

அலர்" பெ. மிளகு. (முன்.)

அலர்க்கம்' பெ. வெள்ளெருக்கு. (மலை அக.) அலர்க்கம் 2 பெ. வெறிநாய். (செ. சொ. பேரக.)

அலர்க்குறி பெ. முன்னர்க்குறித்த இடத்திற்கு வந்த தலைவன், தலைவியைக் காணாத நிலையில் தான் வந்ததை அவள் அறியவேண்டிப் பூ ஒன்றை அடை யாளமாக வைத்துச் சென்றது குறிக்கும் அகத்துறை. (தனிப்பா. 2, 413 உரை)

அலர்கதிரோன் பெ. விரிந்த கிரணங்களையுடைய சூரியன். அலர் கதிரோன் பல் தகர்த்து (திருவாச. 8, 15).

அலர்கேள்வி பெ. பரந்த நூலறிவு. மன்னனுக்கு அங்கு அலர் கேள்வியாளன் ஆசி கூறினான் (சூளா.

378).

அலர்ச்சி (அலர்த்தி) பெ. மலர்ச்சி. (வின்.) அலர்த்தி (அலர்ச்சி) பெ. மலர்ச்சி. (சங். அக.)

அலர்த்து -தல் 5 வி. மலரச்செய்தல். முண்டகம் அலர்த்து முதிராச் சேவடி (கல்லாடம் 10, 24). செங் கழுநீர் வாய் நெகிழ்ந்து வாய் மொட்டித்தன என்ன அது பின்னை நீங்கள் வலிய அலர்த்தினி கோள் என்ன (திருப்பா. 14 மூவா.).

அலர்த்துடவை பெ. நந்தவனம். தீயவஞ்சம் தோப்பு அலர்த்துடவை கூவல் குழியைத் தடிதல் தூர்த்தல் (கருவூர்ப்பு. 13, 73).

அலர்தா (தரு)-தல்

13 வி. வளர்தல். ஆம் நாள்

நிறை மதி அலர்தரு பக்கம்போல் (பரிபா. 11, 31). மதி போல அலர்தரு சோதி (தேவா. 4, 14,8).

அலர்ந்தபூ 1 பெ. இதழ் விரிந்த பூ. (பே.வ.)

அலர்ந்தபூ 2 பெ. கொற்றான் கொடி. (பச்சிலை. அக.)

அலர்ப்பகம் பெ. இலாமிச்சை. (முன்)

அலர்மகள் பெ. (பூவில் உறையும்) திருமகள். அலர் மகள் மலி தர (தேவா. 1,124, 1). அரைசெய் மேகலை அலர்மகள் அவளொடும் (பெரியதி. 1, 2, 5). அலர் மகள் குடிகொண்டுறை மறுமார்ப (குசே. 664).

41

2

அலரிய

அலர்மாரி பெ. பூமழை அலர்மாரி மேற் சொரி வார் அமிழ்த நீராட்டுவார் (சூளா.2050). அலர் மாரி பொழிவ போல் (முத்துக். பிள். 10,9).

அலர்மிசைப்பண்ணவன் பெ. நான்முகன். அலர் மிசைப் பண்ணவன் தீர்த்தம் (கருவூர்ப்பு. 15,3).

அலர்மிசையான் பெ. (பூ மேல் வீற்றிருக்கும்) பிரமன். கமலத்து அலர்மிசையானும் (திருமந். 104).

அலர்மின் பெ. (பூமகளாகிய) திருமகள். புத்தலர் மின் புணர் மாற்குப் புராண புருடப் பெயர் நூல் புகன்றவாறே (சோலை. குற. 70).

அலர்முகராகம்

(சாம்ப. அக.)

பெ. பரதஉறுப்புக்களுள் ஒன்று.

அலர்மேல்மங்கை பெ. திருப்பதியில் எழுந்தருளியிருக் கும் திருவேங்கடப் பெருமானின் தேவி. அலர்மேல் மங்கை உறை மார்பா (திருவாய். 6,10,10).

அலர்மேலான் பெ. (பூவில் வீற்றிருக்கும்) பிரமன். அலர்மேலான் நீர் மேலான் ஆய்ந்து காணாப் பொருள் ஆவாய் (தேவா. 6, 99, 4).

அலர்மேலு பெ.அலர்மேல் மங்கை. (பே.வ.)

அலர்மொழி பெ. பழிச்சொல்.

அலர்மொழிச்சென்ற

கொடியகநாட்ட (ஐந்.எழு.33).

அலர்வி-த்தல் 11 வி. மலரச்செய்தல், விரியச் செய்தல். மடவாள் இறைஞ்ச மதிபோல் அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கணவனாம் (தேவா. 4,14, 8). மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண்டிங்களே (நம். திருவிருத், 76).

அலரவன் பெ. (மலரின்மேல் வீற்றிருக்கும்) பிரமன். அலரவனும் மாலவனும் அறியாமே (திருவாச. 12,

6). அலரவன் தீட்டி வைத்த ஆயுள் (குசே. 101).

அலரி பெ. 1. மலர். நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி (அகநா. 86,15). வால் இதழ் அலரி வண்டு பட ஏந்தி (நற். 118, 9). விரிநுண்ணூல் சுற்றிய ஈர் இதழ் அலரி (கலித். 64,3). அறிக என்று அலரிவாய் கமழக் கூறினான் (சீவக. 1618). போத விழ் அலரி நாறும் புரிகுழல் உருவப்பாவை (சூளா. 2. அலரிப்பூ. போதவிழ் அலரி நாரில் தொடுத்து (புறநா. 371, 3).பரிகாரம் உளது ஆதி வாரம் தனக்கு அலரி (அறப்பளீ . சத. 50). 3. அல ரிச்செடியின் நச்சுத்தன்மையுடைய விதை, வேர்.

1013).

.