உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலரி 2

ஆண்டார் ஈசான தேவர் அலரி தின்று சாகையில் (தெ.இ. க. 23, 620). 4. ஐந்து மலர்அம்பு. அலரி எனும் பெயர் அலர்க்கணை ஐந்தும் ... செப்பப் பெறுமே (வட.நி.6). 5. கதிரவன். அலரி

...

...

கீழ்த்திசை பொலிவுறாதமுன் (கம்பரா. 4, 11,1). அலரி குடதிசை அடைவன (திருப்பு. 221). அலரி மண்டிலம் அதிர் திரைக் கடல் முகட்டரும்பும் (செ.பாகவத. 10, 12, 83). அலரி மண்டல நடுவிலோ (தாயுமா. 9, 10). வெவ்வலரிக்கு எத்துறையும் செவ் வலரிப் பூ மணக்கும் (சிங். சிலே. 71). 6.நெருப்பு, அக்கினி. சூடுறும் மேனிய அலரி தோகையை மாடுறக் கொணர்ந்தனன் (கம்பரா. 6, 37, 96).

அலரி' பெ. கண்வரி. அலரி மலரும் தபனனும் அழகும் கண்வரி (பிங். 3093).

அலரி பெ. நீராவி. அலரியெனும் பெயர் யும் செப்பப்பெறுமே (வட. நி. 6).

அலரி பெ. தேனீ. அலரியெனும் பெயர் செப்பப்பெறுமே (முன்.).

...

நீராவி

தேனீயும்

அலரி பெ. கோதுமை. (மலை அக.)

அலரி" பெ. மாடுகளுக்கு வரும் கோமாரி என்னும்

தொற்று நோய். (செ. ப. அக.)

அலரி பெ. அழகு. அலரியெனும் பெயர்

செப்பப்பெறுமே (வட.நி.6).

...

அழகும்

அலரி பெ. நறுமணம். அலரிவாய் கமழக் கூறி

னான் (சீவக. 1618)

அலரி பெ. ஆற்றுப்பாலை. (செ. சொ. பேரக.)

அலரி பெ. நீர்நிலை. (சதுரக.)

அலரிக்கண்ணாடி பெ. உடும்பின் நகம். (சாம்ப. அக.) அலரிக்கூடை பெ. பிணப்பெட்டி. (புதுவை வ.) அலரிச்செவி பெ. செடிவகை. (வைத். விரி. அக. ப. 24)

அலரிசபோதம் பெ. உடும்பு. (சாம்ப. அக.)

அலரிடு-தல் 6 வி. பழிசுமத்துதல். அணிகெடுக மேனி அலரிடுக ஆரும் (நந்திக்கலம். 51).

அலரித்தட்டி பெ. மீன் பிடிக்க உதவும் கூடை. (புதுவை வ.)

அலரிப்பந்தம் பெ. கட்டுநார். (முன்.)

அலரியோன் பெ. கதிரவன். பண்புடை அலரியோனைப் பற்றியே தவம் செய் காலை (வரத. பாகவத. சாம்பு வதி. 4).

41

3

அலவலை+

அலரிரும்பு பெ. பாறைகளின் மேல் காணப்படும் வெண் மையான பல தாதுப் பொருள்களின் கலவை. (எந்திர. க. சொ. ப. 17)

அலரின்மேலோன் பெ. (மலரின்மேல் வீற்றிருக்கும்) பிரமன். ஆயிரம் ஆயிரம் பருவம் சென்று ஒழிய அதிர்ந்தொழுகி அலரின்மேலோன் (செ. பாகவத.

5, 5, 34).

அலருறு-த்தல் 11 வி. பலர் அறியச் செய்தல். ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த (மணிமே.20,100). அன்னநடை

அலரேசு-தல் 5வி. பழித்துரைத்தல்.

யார் அலரேச (இயற். பெரியதிருமடல் 38).

அலரோன் பெ. (மலரின் மேல்வீற்றிருக்கும்) பிரமன். அலரோன் நெடுமால் அமரர் கோன் மற்றும் (நக்கீர.அந். 67). அலரோன் தீட்டும் நாள் சிதைந் தாரும் சில்லோர் (திருவிளை. பு. 45,31).

அலவமை பெ இந்துப்பு. (வாகட அக.)

அலவல்' பெ. 1. கணவனுக்கு மறைத்து மனைவி ஒழுகும் கூடா ஒழுக்கம். அவமறைந்தொழுகும் அல வற்பெண்டிர் (சிலப். 5, 129). 2. நாணமின்மை. அலவலையுடையை என்றீ தோழி (கலித். 122,6). அலவல்' பெ. இழை நெருக்கம் இல்லாமல் விலகலாய் உள்ள நெசவு. (இலங்.வ.)

அலவலான் பெ. நீங்கினவன். சுழலுந் தடுமாற்றமும் அலவலான் (தேவா. 5,19,2).

அலவலை-த்தல் 11 வி. துன்புறுத்தல். அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர் (பழமொ. நா.

326).

அலவலை1 பெ. 1. மனச்சுழற்சி. அழுதனை அல வலையுடையை யென்றி தோழீ (கலித். 122, 6). அலவலை நீர்த்தால் அத்தை நின் அலரென (பெருங். 1, 36, 286). 2. ஆராயாத செயல். அலவலைச் செய்திக்கு அஞ்சினன் (மணிமே. 17,51).

அலவலை" பெ. அற்பச்செய்கை. அலவலை அல் லாமை பெண்மகளிர்க்கு மருந்து (சிறுபஞ்.51)

...

அலவலை3 பெ. கவலை கொள்ளுகை. அலவலை அல்லாக் குடியும் (திரிகடு. 34).

அலவலை + பெ. விடாது வீண்பேச்சுப் பேசுபவன். அலவலைச் செய்திக்கு அஞ்சினன் (மணிமே. 17, 51) அல்லவை செய்யும் அலவலையும் (திரிகடு.99).