உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிகாலம்

அழிகாலம் பெ. யாவும் இறுதி எய்தும் காலம். அழி காலம் இது ஆம் அன்று என அயிர்த்தார் (கம்பரா.

6, 29 117).

அழிகாலி பெ. வீண் செலவு செய்வோன். (பே.வ.)

அழிகிரந்தி பெ. கிரந்திநோய்வகை. (சங். அக.)

அழிகுட்டி பெ. விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு. (வின்)

அழிகுநன் பெ. தோற்றழிந்தவன். அழிகுநர் புறக் கொடை (புற.வெண்.55).

அழிகொடிக்கால் பெ. முதிர்ச்சியால் அழிக்க வேண்டிய வெற்றிலைத்தோட்டம். (பே.வ.)

அழிச்சாட்டம் பெ. முறையற்ற செயல். அகவாயில் அந்தர்யாமி பிரகாசித்துக் கொண்டிருக்க அழிச் சாட்டங்கூடுமோ (குருபரம். பன். ப. 343).

அழிச்சாட்டியக்காரன் பெ. 1. தீய இயல்புள்ளவன். (செ.ப.அக.) 2. பொய்வழக்கை எழுப்புவோன். (முன்.)

அழிச்சாட்டியம் பெ. அழிம்பு, வம்பு. வாங்கின கட னைக் கொடாமல் அழிச்சாட்டியம் பண்ணி வரு கிறான் (பே.வ.).

அழிசி பெ. சோழர் மரபிற் பிறந்த ஒருவள்ளல், வெல் போர்ச் சோழர் அழிசி அம்பெருங்காட்டு

(நற். 87, 3).

அழிசெலவு பெ. தோட்ட வளர்ச்சி முதலியவற்றிற்குச் செய்யும் செலவு. (பே.வ.)

அழிஞ்சி (அலிஞ்சி, அழிஞ்சில், அழிஞ்சு) பெ. 1. அங்கோலம் என்னும் மரம். காசின் மட்டு ஒழுகப் பூத்த அழிஞ்சில் (சீவக. 1649). 2.கிராணித் திர வியம். (வைத். விரி. அக. ப. 24) 3. நஞ்சுமுறிப்பு. (சென். இரா. சொற்பட்டி. ப. 16)

அழிஞ்சில் (அலிஞ்சி,

(அலிஞ்சி, அழிஞ்சி, அழிஞ்சு) பெ.

அங்கோலம் என்னும் மரம். (மரஇன. தொ.)

அழிஞ்சு (அலிஞ்சி, அழிஞ்சி, அழிஞ்சில்) பெ. அங் கோலம் என்னும் மரம். (தைலவ. 72/செ. ப. அக.)

45

4

அழிஞ்சுக்காடு பெ. பாலைநிலம்.

அழிதூ உ

பெருவிடாயன்

ஆனவன் அழிஞ்சுக் காடேறப் போகமாட்டானே (திருவாய். 6, 2 ஈடு -பிர.).

அழிஞ்சேபமாம் பெ. கருநாங்கில்மரம். (மரஇன. தொ.)

...

அழித்தழித்து வி. அ. மீண்டும் மீண்டும். பன்முறை அழித்தழித்து ஆக்குவாற்கு அரிது உண்டாகுமோ அர்ச்சுனன் (கம்பரா. 6,2,3). அழித்தழித்து தன் ஆண்மை இழித்தவரை (பாரத வெண். 48). அழித்தழித்து விவாகம் பண்ணுமாப்போலேயும் (திருமங்கை. திருநெடுந். 16 வியாக்.).

அழித்து' வி. அ. மீண்டும்.

அழித்துப் பிறந்தனெ

னாகி (புறநா. 383, 16). அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் (கந்தரலங். 2).

அழித்து' வி. அ. மாறுபாடாய். தும்மினேனாக அழித் தழுதாள் (குறள். 1317).

அழித்துச்சொல்(லு)-தல் 5 வி. இழித்துக் கூறுதல். பற்றியென்றது கிடாயினது பெருமையால் அழித்துச் சொன்னவாறு (தக்க. 494 ப. உரை).

அழித்துப்போடு-தல் 6 வி. பயனற்ற முறையில் செலவிடு தல். இளையமகன்...தன் ஆத்தியை அழித்துப் போட்டான் (விவிலி. லூக்கா. 15, 13).

அழித்துரை பெ. இழித்துரை. அடா என்பது அழித்

துரை (தக்க. 508 ப. உரை).

அழிதகவு பெ. வருத்தம், துக்கம். அழிதகவு உடை மதி வாழிய நெஞ்சே (அகநா. 123, 7). அழிதகவு உள்ளமோடு அரற்றினனாகி (மணிமே. 12, 43).

அழிதகன் பெ. தீயவழியில் செல்பவன். அழிதகன் போகேல் ஈண்டவ்வருங்குலக் கொடியை விட்டுப் பழி விட நீ போ (பெரியபு.3,15). அறத்தைக் காயும் அழிதகன் (கந்தபு. 4.10, 78). அழிதகன் குறுகுவான் முன் (திருவிளை. பு. 26,21).

அழிதகையாள் பெ. கற்பு இல்லாதவள். அழிதகை யாள் தானும் ஒத்தாளரோ (முன்.)

000

அழிதலை பெ. 1. தலை ஓடு. அழிதலை அங்கையில் ஏந்தி (தேவா. 1, 40, 7). 2. தலையோட்டுமாலை. அழிதலை கரோடி சிரமாலை ஆகும் (பிங். 1088). அழிதூஉ பெ. அலி. அழிதூஉ வகையும் அவற்றின் பாலே (நன். 263 மயிலை.).