உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுமுகன்விசிறி

அறுமுகன்விசிறி பெ. மயில் தோகை. (சித். பரி. அக.

ப. 156)

அறுமுகேசன் பெ.

ஆறுமுகங்களைப் பெற்ற முருகன். அறுமுகேசன் வைகினான் (கந்தபு. 4,1,35).

...

அறுமுறி பெ. உடன்படிக்கை ஆவணம். (செ. ப. அக.

அனு.)

அறுமுறைவாழ்த்து பெ. முனிவர் பார்ப்பார்

முடியுடை

வேந்தர் ஆனிரை மழை உலகு என்ற ஆறனையும் பற்றிக் கூறும் வாழ்த்து. (தொல். பொ. 81 நச்.)

அறுமை1 பெ. நிலையின்மை. அறுமை இவ்வுலகு தன்னை யாமெனக் கருதி நின்று (தேவா. 4,33,

3).

அருமை2 பெ. ஆறு என்னும் எண். அறுமைதந் துதவும் இருமையானும் (கல்லாடம் 12,18).

அறுவகைச்சக்கரவர்த்திகள் பெ. அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், பூரூரவன், சகரன், கார்த்தவீரியன் என்ற சக்கரவர்த்திகள் அறுவர். (திவா. 2646)

அறுவகைச்சமயம் பெ. சைவம், வைணவம், சாக்தம், சௌரம், காணபத்தியம், கௌமாரம் என்னும் ஆறு வகைச் சமயங்கள். அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் (தேவா. 7,55,9). அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ (மெய்க். பாண்டியர் 15, 11), அறு வகைச்சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் (சி. சி. பாயி. 1).

அறுவகைச்சரக்கு பெ. நந்தியுப்பு, அரப்பொடி, அப்புப் பொடி, தாளகம், காசுக்கட்டி, நாகரசம் என்னும் அறுவகை மருந்துப் பொருள்கள். (சாம்ப. அக.)

அறுவகைச்செயனீர் 1

பெ. வெடியுப்பு உருகும்போது, துருசு, சீனம், வெண்காரம், பூநீர், சாரம், கழுதை மண்டையோடு முதலியவற்றைப் பொடித்துப் போட்டுக் கிண்டிப் பனியில்வைத்து இறக்கும் ஒருவகைச் செயனீர். (செ. சொ. பேரக.)

அறுவகைச்செயனீர்? பெ. அமுரி அல்லது மூத்திரம்.

(upeir.)

அறுவகைத்தானை பெ. வேற்படை, வாட்படை, விற் தேர்ப்படை, குதிரைப்படை,

படை,

(திவா.2632)

யானைப்படை.

5

10

அறுவர்'

அறுவகைப்படை பெ. 1. ஆறுவகையான சேனைகள். மூலப்படை கூலிப்படை நாட்டுப்படை காட்டுப் படை துணைப்படை என்னும் அறுவகைப்படை யுள்ளும் குறள். 762 பரிமே.). 2. வேல்வாள் வில் தேர் குதிரை யானை என்னும் ஆறுவகைத் தானை. (செ. ப. அக.,

அறுவகைப்பருவம் பெ. (ஓராண்டை இரண்டு இரண்டு திங்கள்களாகப் பகுத்த பிரிவுகளாம்) கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என்பவை. (த. த. அக.)

அறுவகைமானம்

பெ. படிமக்கலையிற் கையாளப்படும் நீளம், அகலம், உயரம், சுற்று, இடை, அடக்கம் என் னும் அறுவகையளவு. நீளத்தை மானம் என்றும் .. சுற்றளவைப்பரிமாணம் என்றும்... அடக்க அளவை லம்பமாணம் என்றும் கூறவேண்டும் (சிற். செந்.

ப. 184).

அறுவகையமைதி பெ. செல்வம், விளைநிலம், செங் கோல், நோயின்மை, வளம், குறும்பின்மை என்னும் ஆறு வகையான செழிப்பு. செல்வமே யாதியாம் அறுவகை யமைதி (திருக்கோ.பு. 13,81).

அறுவகையரிசி பெ. அருணாவரிசி, உலூவாவரிசி, ஏல வரிசி, கார்போகரிசி, விளவரிசி, வெட்பாலையரிசி என்ற ஆறுவகையான அரிசிகள். (செ. ப. அக. அனு.)

அறுவகையுயிர் பெ. மக்கள், தேவர், பிரமர், நரகர், விலங்கு, பேய் என்னும் ஆறுவகை உயிர்கள். மணிமே 30,56-58 உ.வே.சா. குறிப்புரை)

அறுவடை பெ. கதிரறுப்பு. சாற்றும்கதிர்கள் முத்திச் சாய்ந்து அறுவடைக்கும் தக்கதாய் இருக்குதே மிகக் கிளைந்தும் (நந்த, கீர்த். ப.87),

அறுவடைமேரை பெ. 1. சிற்றூர் ஊழியர்கட்குக் கொடுக் கும்தொகை. (வட்.வ.) 2. சிற்றூர் ஊழிய சுதந் தரம்.

(த.த. அக.)

அறுவதா பெ. சதாப்புச்செடி. (குண.1 ப.38)

அறுவர்' பெ. கார்த்திகைப் பெண்டிர் ஆறுபேர். அறு வர் பயந்த ஆறமர் செல்வ (முருகு.255). அறுவர் அயின்றனர் (பரிபா. 5, 45).

அறுவர்' பெ. சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கணபத்தியம், கௌமாரம் என்னும் அறுவகைச்