உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபதம்1

அறுபதம்1 பெ. (ஆறுகால்கள் உள்ள) வண்டு. அறு பதம் பண்பாட (தேவா. 7,16,1). அறுபதம் முரலும் கூந்தல் (இயற். திருவெழு.31. அறுபதம் ஐந்தினைப் பாடுகின்றது (கம்பரா. 4,12,13). தேனை அறுபதங்கள் ஊடிப் போய் (நக்கீர.ஈங்.10).

அறுபதம்' (அறுபத்தை) பெ.

கையாந்தகரைச்செடி.

அறுபதங் கையாந்தகரை (பிங். 2918).

அறுபதாங் கலியாணம் பெ. கணவனின்

அறுபதாம்

ஆண்டு நிறைவுக் காலத்தில் செய்யும் திருமணச் சடங்கு, மணிவிழா.(பே.வ.)

அறுபதாங்குறுவை பெ. சுமார் அறுபது நாளில் விளை யும் நெல்வகை. (செ.ப.அக.)

அறுபதாங்கேழ்வரகு பெ. அறுபது நாளில் விளையும் கேழ்வரகு வகை.

(செ.ப.அக . அனு.)

அறுபதாங்கொட்டை பெ. பேராமணக்கு. (முன்.)

அறுபதாங்கோடை பெ. அறுபதாங்குறுவை. (செ.ப.

அக.)

அறுபதாங்கோழி பெ.

அறுபது நாட்கொருமுறை

முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கும் கோழி (வட்.வ.)

அறுபதாண்டுப்பயன் பெ. அறுபது ஆண்டுகளின் பலனைப்பற்றிக்கூறும் இடைக்காடர் நூல். (பெரியவரு.

ப.279)

அறுபது பெ. ஆறுபத்துக்கள். அறுபதும் பத்து மெட்டும் (தேவா. 7, 8, 3).

அறுபதுவருடப்பலன் பெ. அறுபது ஆண்டுகளின் பல னைப் பற்றிக் கூறும் இடைக்காடர் நூல். (செ.ப.அக.)

அறுபான் பெ. அறுபது. (த.த. அக.)

அறுபிறப்பு பெ. மக்கள், விலங்கு, ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, தாவரம். மானுடர் முதலுள அறுபிறப் பூடும் (வைராக். சத. 10).

அறுபுள்ளிவண்டு பெ. ஆறுபுள்ளிகளையுடைய ஒருவகை வண்டு. (சாம்ப. அக.)

அறுபொருள் 1 பெ. (ஐயம் அற்ற பொருளாகிய) பரம்பொருள். அறுபொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த (சிலப். 17 முன்னிலைப்பரவல் 2).

5

09

அறுமுகன்

அறுபொருள்' பெ. (சைனம்) சீவம், புற்கலம், தர்மம், அதர்மம், ஆகாசம், காலம் எனும் ஆறு தத்துவங்கள். அறுபொருள் அறைந்தனை (யாப். வி. 96 மேற். எழுகூற்றிருக்கை. அடி 24).

அறுபொழுது பெ. நாளுக்குரிய மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு என்ற அறு வகைக் காலம். (செ. ப. அக. அனு.) (செ.ப.அக.

அறும்பன் பெ. தீயவன். (all GIT.)

அறும்பு1 பெ. 1. பஞ்சம். தண்ணீர் அறும்புக்காலம் (செ. ப. அக.). 2. தீமை. (வின்.)

அறும்பு 2 பெ. குறும்புத்தனம் (த. த. அக.)

1

அறுமணை பெ.

அரிவாள்மணை. (வின்.)

2

அருமணை

பெ.

அரிவாள்மணைப்பூண்டு.

(மரஇன.

தொ.)

அறுமணை பெ. ஊத்தை நாறிமரம், குதிரைப்பிடுக்கன் மரம். (சூ. அக.)

4

அறுமணை பெ. 1. அழகற்றவள். (வின்.) 2. சீர்கெட்ட

வள். (முன்.)

அறுமான் பெ. புழுவகை. அத்திக்காயில் அறுமான் போலே (திருவாய். ஈடு, அவதா.).

அறுமீன் பெ. 1. கார்த்திகை நட்சத்திரம். அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள் (நற்.202,8).அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் (அகநா. 141,8).2. கார்த்திகைப் பெண்கள். அறுமீன் முலையுண்டு அழுது விளையாடி (கந்தர்கலி. 82).

அறுமீன்காதலன் பெ. முருகக் கடவுள். அறுமீன் காதலன்... வேள்எனச் செப்புவர் (திவா.6).

அறுமுகவாகனம் பெ. 1. மயில். (சாம்ப. அக.) 2. மயிலிறகு. (முன்)

அறுமுகவேள் பெ. முருகன். அறுமுகவேள் பொருந்து கடம்பு (ஞான. உபதேசகா. 2187).

முருகன்.

அறுமுகன் பெ. (ஆறுமுகக் கடவுளான) மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ (தொண்ட ரடி. திருப்பள்ளி. 6). துதியார் அறுமுகன் தோற்ற முண்டாயினும் (அம்பி. கோ. 113). அறுமுகன் றனை யணங்கினை யவையுளோரெவரும் (கந்தபு. 5, 2. 257). அறுமுகனை உமக்களிப்போம (தீர்த்தகிரிபு.

56).