உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னமுனி

அன்னமுனி பெ. ( அன்னத்தை ஊர்தியாக உடைய) நான்முகன். கல்விச் சேவகம் அன்னமுனிக்கு எங்ஙன் நாணித்திகைப்புற்றதே (கந்தரந். 64).

அன்னமூர்த்தி பெ. (அன்னத்தை ஊர்தியாகவுடைய தலைவன்) நான்முகன். (கதிரை. அக.)

அன்னமூர்தி பெ. (அன்னவாகனத்தையுடைய) நான் முகன். அன்னமூர்தியைச் சுருதியும் அங்கமும்... அகல (திருக்கழுக். பு. சதுமுகச். 4).

அன்னயம்1 பெ. ஆலமரம். (செ. ப. அக. அனு.)

அன்னயம்' பெ உடல். (கதிரை. அக.)

அன்னரசம் பெ. உணவுச்சத்து. (செ. ப. அக.)

அன்னல் (அனல்', அனலம்1) பெ. 1. தீ. (சம். அக. செ.ப.அக.) 2. புகை. அன்னலும் துன்னலு மாய்த் திரண்ட மேகத்தை (திருவாய். 8, 5, 4 ஈடு). 3. வெய்யில். நெருப்பும் காற்றும் அன்னலும் துன்னலுமாக விட்டு (முன்.6,2,9 ஈடு).

அன்னவசம் பெ. (வயிறார உண்டதால் உணவின் வசப்பட்டு வரும்) உறக்கம். ஆல் இலை அன்ன வசம் செய்யும் (முன்.3,7,10). அங்கைத்தலம் ஏறி அன்னவசம் செய்யும் சங்கு அரையா (நாச்சி.

தி. 7, 7).

அன்னவம் பெ. கடல். வாரிதி அளக்கர் வம் உவரியும் பேர் (சூடா.நி.5, 17).

...

அன்னவன்1

...

அன்ன

பெ.1. அத்தகைய தன்மையுடையவன். அன்னவர் பட அல்லா அவுணர்க்கு முதல்வன் நீ (பரிபா. 3, 56). அன்னவனாம் ஆரூரன் ஆரூரன் (தேவா. 7, 39,11). அன்னவரே என் கணவர் ஆவார் (திருவாச. 7,9). அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் (கம்பரா. பாயி. 1). பின்னிய ஞாணினர் வில்லி னர் அன்னவர் அடிமுதற் காவல் நண்ணினார் (சூளா.87). 2.ஒத்தவன், போன்றவன். அருங்கலக் கொடி அன்னவன் (சீவக. 1372).

...

அன்னவன்' பெ. (முன்னர் ஒன்றன் தன்மையோ ஒப்போ கூறப்படாதபோது) அவன் என்னும் சுட்டுப் வழிச்செல்லின் (முன். 245).

பெயர், அன்னவன்

521

...

அன்னவூர்தி

அன்னவன் பின்னுற ... சாம்பனை இறை வினா யினான் (கம்பரா. 6, 4, 69). அன்னவன் அரசன் என்று உணர்வு இலாத ஆதனேன் (சான்றாண்மை 105).இப்படி முடிப்பன் என அன்னவன் முன்னி யேவ (திருமலைமுரு. பிள். 93).

அன்னவாகனம் பெ.

(பிரமனுடைய ஊர்தியாய)

அன்னம். அன்னவாகனமும் பதும ஆசனமுமே... கருடனோடெதிர்த்தே (ஞான. உபதேசகா. 1995).

அன்னவாகனன் பெ. (அன்னத்தை

உடைய) நான்முகன். (கதிரை . அக.)

ஊர்தியாக

அன்னவாகி பெ. தொண்டையின் அடியிலிருந்து இரைப் பைக்குச் செல்லுங் குழல். (செ. ப. அக. அனு.)

அன்னவாய்க்கை பெ. (அன்னப்பறவையின் வாய் போன்று அமைத்து) மெய்ப்பாடு வெளிப்படுத்தும் கைவகை. அன்னவாய்க்கை என்பது பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல்களைச் சேர்த்து மோதிரவிரல், சுண்டுவிரல்களை விரித்து மேல்நோக்கிப் பிடித்த லாம் (பரத. 1, 34 உரை).

அன்னவாறு வி. அ. அப்படி, அவ்விதம்.

அன்னவாறு

நீர்போய் அவதரித்திடுமின் (கம்பரா. 1, 5, 25).

அன்னவிசாரம் பெ. சோற்றுக்கவலை. அன்னவிசாரம் அதுவே விசாரம் (பட்டினத்துப். திருவேகம். 8).

அன்னவில்லை பெ. அன்னப்புள் உருவம் அமைந்த தலைமுடித் திருகு ஆகிய அணிகலன். (நாட்,வ,)

அன்னவிளக்கு பெ. மேற்பகுதி அன்னப்பறவை வடி வாகச் செய்யப்பெறும் பெரிய குத்துவிளக்கு. சோன கர் கூம்பின்மேலிட்டஅன்ன விளக்கு (பெரும்பாண்.

317 நச்.)

அன்னவூசல் பெ. ( கண்ணிற்குத் தெரியாத ஒருவ ரால் ஆட்டப்படும்) ஊஞ்சல். (வின்.)

...

அன்னவூர்தி பெ. 1. (அன்னத்தை ஊர்தியாகவுடைய ) நான்முகன். அன்னவூர்தியை முதலாம் அந்தணர் (கம்பரா. 3, 1, 55). பிரமன் ஓதிமம் உயர்த்த கொடியினன் அன்னவூர்தி (சூடா. நி. 1, 15). அன்ன வூர்தி உயிர்த்தருள் அங்கிரா (செ. பாகவத. 6, 7, 3). அன்னவூர்தியறிவினில் தேர்ந்து எழீஇ (திருவாரூர்ப்பு.