பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பெருந்தகை மு. வ.

வரையில் எல்லாம் நடைபெறுதல் வேண்டும். அப்படி (కుర్సీు யானுல் அது அந்த நாட்டிற்கே தீமையாக முடியும்.”

‘நமக்குத் தெரியாத மொழியில் இசையை அனுபவிக்க எண்ணுவது மனைவியிடம் வக்கீல் வைத்துப் பேசுவதற்கு ஒப்பா கும் என்றார் கவிஞர் தாகூர். இந்த உண்மையை வானெலி நிலையத்தாரும் அவர்களை இயக்கும் அரசாங்கத்தாரும் உணர் தல் நல்லது; தமிழ்மக்கள் தமிழிலேயே இசையைக் கேட்டு மகிழ விரும்புகிறார்கள். அவர்களின் இயற்கையான காதலைத் தடுத்து, செயற்கையான-வெறுப்பான முறையில் பிறமொழிப் பாடல் களைத் திணிப்பதை உடனடியாகக் குறைத்தல் வேண்டும்; நாளடைவில் நிறுத்தல் வேண்டும்’

“இந்தியாவின் ஒருமைப்பாடு நல்ல அடிப்படையோடு அமைய வேண்டுமானல் அது மக்களின் விருப்பத்தை ஒட்டி அமைந்தால்தான் முடியும். நூற்றாண்டுக் கணக்காக நிலைபெற வேண்டும் என்ற ஆசையோடு உயரமான கல்கட்டிடம் எழுப்ப லாம். ஆனால், அதன் உயரத்தை மட்டும் கருதி நல்ல அடிப் படை அமைத்தலை மறத்தல் கூடாது. அதுபோலவே இந்திய வின் புகழ் வெளிநாடுகளில் வானளாவ உயர்ந்தால் மட்டும் போதாது. இந்திய மக்களின் மனம் விரும்பும் வகையில் உள் நாட்டு ஆட்சியும் நடைபெற வேண்டும்.'”

இத்தகைய அரிய கருத்துகளைக் கொண்டு நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் ஒருங்கே தூண்ட வல்ல நூல்கள் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றுமாம். இவை 1956 ஆம் ஆண்டில் வெளிவந்தன.

மண்ணின் மதிப்பு :

மண்ணின் மதிப்பு என்னும் நூலும் இதழ்களில் வெளி

வந்த கட்டுரைத் தொகுப்பே யாகும். அதில் முப்பத்து நான்கு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை ‘ஆனந்தவிகடன்”,

1. மொழிப்பற்று. பக். 67. 2. மொழிப்பற்று பக். 117, 118. 8. காட்டுப்பற்று பக். 147.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/102&oldid=586170" இலிருந்து மீள்விக்கப்பட்டது