பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 89

குருவி பேசுகின்றது. ஒ ஓ ! நியாயத்துக்கு வந்து விட்டாயா மனிதா! நீங்கள் இப்படித்தான் கட்டியவர்களுக்கே வீடு என்று வாழ்கிறீர்களா?'-விழித்துத் திகைப்பதை அல்லாமல் என்ன செய்வது குருவிப்போர் எவ்வளவு பொருளுடையதாகின்றது? இத்தகைய கற்பனைக் கட்டுரைகள் பதினென்றைத் தாங்கிய அால் ‘குருவிப்போர். இத்தகைய கற்பனைப் படைப்பே கி. பி. 2000 என்னும் நூலும் ஆகும்.

‘வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலையும் எதிர்ப்படும்போது ஒதுங்கிச் செல்வதும் உண்டு. ஒதுக்கிச் செல்வதும் உண்டு. ஒதுங்கிச் செல்லும் வாழ்க்கை அச்சம் நிறைந்த வாழ்க்கை, ஒதுக்கிச் செல்வதோ அக்கறை அற்ற வாழ்க்கை. இந்த இரண்டும் பயனில்லை. சிக்கலைத் தீர்த்து வெல்லும் வீர மே வேண்டும். அதுவே புத்துலகத்தின் திறவுகோல். அந்தத் திறவுகோலைத் தேடவேண்டுவது ஒவ்வொருவருக்கும் கடமை யாகும்’. அதனை நினைவூட்ட எழுந்த நூல் கி.பி. 2000. அவர் எதிர்பார்க்கும் எதிர்காலச் சமுதாய ஓவியம் அது.

உலகப் பேரேடு :

‘உலகப் பேரேடு’ என்பதும் சமுதாய நலக் கட்டுரை நூலே ஆகும். அதன் கண் 20 கட்டுரைகள் உள. உலகப் பேரேட்டில் ஒவ்வொருவரும் தாம் ஓர் ஏடு என்பதை உணர்ந்துவிட்டால் உலகப் பேரேடு பொலிவுருமல் எப்படி இருக்க முடியும்?

மொழிப்பற்று, நாட்டுப்பற்று :

மு.வ. மொழிப்பற்று மிக்கவர்; நாட்டுப்பற்றும் மிக்கவர். அப்பற்றுகளால் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளே மொழிப் பற்று நாட்டுப் பற்று’ என்னும் நூல்களாயின. இவ் விரண்டு நூல்களின் வருவாயும் திரு. வி. க. பள்ளி நிதிக்கு உரிமை யாக்கப் பெற்றதாகும்.

‘ஒரு நாட்டில் பெரும்பாலான மக்கள் என்ன மொழி பேசு கிறார்களோ அந்த மொழியிலேயே ஆட்சிமுதல் ஆடல் பாடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/101&oldid=586169" இலிருந்து மீள்விக்கப்பட்டது