பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெருந்தகை மு. வ.

‘பெண்களின் நடுக்கத்தைக் கண்டு ஆண் அஞ்சுதல், வருந்துதல், அவர்களுக்குத் தன்னை அறியாமல் இழைத்த தீங்கை நினைத்துக் கலங்குதல், அவர்கள் பேச இடம் தருதல், பேசும் வரையில் காத்து நிற்றல் ஆகிய இந்த நல்ல பண்புகள் பெண்மைக்கு மதிப்புத்தரும் நாகரிகமாகும்’ என்று பெண்ணின் மதிப்பைப் போற்றும் வகையைக் குறிக்கிறார் மு. வ. இதிலமைந் துள்ள களவும் கற்றுமற’ என்னும் கட்டுரை புதுமையான பொருள் விளக்கம் படைத்ததாகும்.

கல்வி :

‘ஆனந்த விகடன் முதலாய இதழ்களில் அவ்வப்போது கல்வி தொடர்பாக மு. வ. எழுதிவந்த கட்டுரைத் தொகுப்பே ‘கல்வியாம்’. அதன்கண் 27 கட்டுரைகள் உள. கல்வித் துறைச் சீர்திருத்தத்திற்கு இன்றியமையாத கருத்துகள் பலவற்றைத் தன்னிடம் கொண்ட நூல் கல்வி. ‘கல்வியால் குடும்பம் உயரும்; நாடு தழைக்கும். ஆகவே, கல்விமுறை சீர்ப்பட வேண்டும்; கற்பிக்கும் ஆசிரியர் நிலை உயரவேண்டும்'-இவ் வகை நோக்குடன் எழுதப்பெற்றது கல்வி.

குருவிப்போர் : கி. பி. 2000.

‘குருவிப்போர் எப்படி எழுந்தது? கூடு கட்டிய குருவியும் கூட்டை உரிமை கொண்டாடுகின்றது. கட்டாத குருவியும் உரிமை கொண்டாடுகின்றது. குருவிப்போர் எழுகின்றது. மனிதர் கூறுகிறார் :

‘நீங்கள் ஒரே சாதிப் பறவைகள்; உங்களுக்குள் பகை ஏன்? பொருமை ஏன்? திருடு ஏன்?’ என்கிறார்.

எல்லாம் உங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டவைதான். மனிதர்கள் வாழும் வீட்டில் கூடுகட்டி மனிதர்களோடு பழகிய பிறகுதான் எங்கள் சாதியாருக்கு இந்தப் பகை பொருமை எல்லாம் ஏற்பட்டன” என்றது ஆண் குருவி.

“கூடு, கட்டிய குருவிகளுக்கு உரிமையானது என்று முடிவு செய்து விடவேண்டும்’ என்கிறார் மனிதர். கூடுகட்டாத ஆண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/100&oldid=586168" இலிருந்து மீள்விக்கப்பட்டது