பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 87

வரும் கருத்துகளையே புதிய முறையில் புரட்சியாகச் சிந்தித்து மு. வ. உரைப்பதாகப் பாராட்டினர்.

மதுரையில் பேராசிரியர் சி. இலக்குவனர் அவர்கள் தலைமையில் தமிழ்க் காப்புக் கழகம்’ என ஓர் அமைப்புத் தொடங்கியது. அதனைத் தொடங்கிவைக்கும் பொறுப்பை மு.வ. வினிடம் எதிர்பார்த்தது கழகம். அதற்கு மு. வ. ‘அரசியல் அரசினர் மோதல் உள்ள கூட்டங்களில் கலந்து கொள்ளல் இயலாது. அந் நிலை இல்லையாயின் தொடக்க விழாவுக்கு உடன் படுகின்றேன்’ என்று இசைவு தந்தார். இது மு. வ. போற்றிய அரசியல் நெறி இன்னதெனத் தெளிவிக்கும்.

“தனிமனிதன் வாழ்க்கைக்கு உணவும் உறக்கமும் இருந் தால் போதும். மக்கள் பலர் கூடிவாழும் சமுதாய வாழ்க்கைக்கே அறம் கட்டாயம் வேண்டும். மக்கள் எல்லோரும் கூடி நடத்தும் அரசியலுக்கே அறம் சிறப்பாக வேண்டும். உடம்பின் நன்மைக்கு இரத்த ஓட்டம் எப்படிக் கட்டாயம் வேண்டுமோ அது போல உலக நன்மைக்கு அறத்தின் அடிப்படை கட்டாயம் வேண்டும்’ என்பது அறமும் அரசியலும் வலியுறுத்தும் கோட் பாடு.

‘அரசியல் அலைகள்’ 17 கட்டுரைகளைத் தன்னகத்துக் கொண்ட நூல். சென்னை அரசின் கட்டுரைத் துறைக்கான பரிசு பெற்ற நூல் அரசியல் அலைகள். அது 1948 ஆம் ஆண்டு வெளி வந்தது. கட்சி வெறி ஒழியவேண்டும்’ எனத் தொடங்கும் அரசியல் அலைகள், ‘துரற்றி எழுதத் தெரியுமா? திட்டிப்பேசத் தெரியுமா?’ என்ற தேர்வுகளை ஒழித்து எண்ணத் தெரியுமா?” என்று ஒவ்வொருவரும் தத்தம் மனச் சான்றைக் கேட்டுத் தெளிய ஏவுகின்றது.

பெண்மை வாழ்க :

‘பெண்மை வாழ்க’ என்பது முதலாக அமைந்த பன்னிரண்டு கட்டுரைகளைக் கொண்ட நூல் பெண்மை வாழ்க’ என்பது. இக் கட்டுரைகள் காதல் முதலிய இதழ்களில் வெளிவந்தவை யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/99&oldid=586364" இலிருந்து மீள்விக்கப்பட்டது