பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பெருந்தகை மு. வ.

பொதுமைச் சொல் அது. மு. வ. அவர்கள் கட்டுரையாளர். இருபொருள்படவும் விளங்கிய கட்டுரையாளர். அவர்தம் விழுமிய சொற்பொழிவுகளாகிய கட்டுரைகளைத் தாங்கிய நூல்களை அறிந்தோம். எழுத்து வடிவில் இதழ்களில் அவ்வப் போது வெளிப்பட்டு உலாவந்த கட்டுரைகளைக் கொண்ட நூல் களைக் காண்போம்.

மு. வ. வின் கட்டுரைகள் ஒழுங்கு பெற்றவை; திட்டமிட்டு எழுதப் பெற்றவை. தொடர்ந்து ஓரிதழில் வரப்பெறுவன ஆயினும் சரி, பல்வேறு காலங்களில் பல்வேறு இதழ்களில் வரப் பெறுவன ஆயினும் சரி அவற்றுக்கு ஓர் ஊடகம் அமைந்து ஒளி செய்யும். அவற்றைத் திரட்டின் மலரை மாலையாக்குமாறுபோல அமைந்து ஒருமித்த நறுமணம் பரப்பும். திட்டமிட்டு ஒரே போக்கில் எழுதப் பெற்ற நூல் போலவே காட்சி வழங்கும் இத் தகைய கட்டுரை நூல்களில் மொழியும் நாடும்பற்றி எழுந்தவை, உண்டு; கட்சி கலவா அரசியல் விளக்கநூல் உண்டு; பெண் ணுலகும், கல்வியுலகும் பிறங்குதற்கு வழிகாட்டும் நூல் உண்டு; கற்பனைக் கட்டுரைகளாய் அமைந்து எதிர்கால ஏற்றத்திற்கு வேண்டுவனவற்றை விளங்கக் கூறும் நூலுண்டு. இப்படிப் பொருளாலும் தலைப்பாலும் பல திறத்தன. ஆயினும் எல்லாரும் இன்புற்று வாழவேண்டும்’ என்னும் பொதுமை உணர்வை உரு வாக்குதல் ஒவ்வொரு நூலிலும் உண்டு; ஒவ்வொரு கட்டுரை யிலும் உண்டு. ஒவ்வொரு விளக்கத்திலும் உண்டு.

அரசியல் நூல்கள் :

அரசியல் தொடர்பாக மு. வ. எழுதி அவ்வப்போது இதழ் களில் வெளிவந்த கட்டுரைகள் அறமும் அரசியலும், அரசியல் அலைகள்’ என்னும் இருநூல்கள் ஆயின. மு. வ. வின் அரசியல் கட்சிச் சார்பற்ற அரசியல். அறத்தை அடிப்படையாகக் கொண்ட அருளரசியல். தஞ்சையில் அரசியல் தலைவர் திரு. செயப்பிரகாசர் தலைமையில் ஓர் அரசியல் மாநாடு நடை பெற்றது. அம் மாநாட்டில் கலந்து கொண்டு மு. வ. உரை யாற்றினர். அவர் உரை கேட்ட செயப்பிரகாசர், தாம் நினைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/98&oldid=586363" இலிருந்து மீள்விக்கப்பட்டது