பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பெருந்தகை மு. வ.

கொடையப்பராக விளங்கிய பச்சையப்பரை உன்ன உன்ன உருகுவார் மு.வ. அவர்தம் கல்விக் கொடையை எண்ணிக் குளிர்ந்து போவார். பச்சையப்பர் கல்லூரிப் பக்கமாகப் போகும் போதெல்லாம் தம்மை வளர்த்து வாழவைத்த அந்தக் கலைக் கோயிலை நன்றியுணர்வுடன் கையெடுத்து வணங்குவார். பச்சை யப்பர் மேல் மு.வ. கொண்ட நன்றியுணர்வே பச்சையப்பர் வர லாற்றை நாடகம் ஆக்கி மகிழ்ந்தது. ‘பச்சையப்பர்’ என்னும்

நூல் 1951 ஆம் ஆண்டு வெளிவந்தது.

குழந்தை:

மு.வ. எதனையும் உற்று நோக்குபவர்; உணர்ந்து நோக்கு டவர்; பல கோணங்களிலும் நோக்கி முடிவு காண்பவர். இத் தகைய அவர்தம் தன் மைக்கு நல்ல விளக்கமாக அமைந்த நூல் குழந்தை ஆகும். அதனைக் குழந்தைகளின் உளவியல் நூல் என்பது தகும். மு.வ. படைத்த புதுவகை நூல் எனலாம்; மேலே வரும் சிறுகதை, புனைகதைகளுக் கெல்லாம் இத்தகைய உளவியல் நோக்கே அடிப்படையாய் அமைந்து உருப்படுத் தியது என்பது கருதத்தக்கதாம்.

மக்கட்பேறு என்னும் அதிகாரத்தை மகிழ்வூட்டி மயக்கும்

உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மட்டும் அவர் கருதவில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னர்த் தம்முடைய பிள்ளைகளோ டும். பின்னர்த் தம்முடைய பேரப்பிள்ளை புகழேந்தியோடும் அவர் கொஞ்சி மகிழ்ந்ததை நேரில் கண்டு மகிழ்ந்தவன் நான். இவ்வாறு அவர் தம் மக்களோடு உள்ளம் கலந்து மகிழ்ந்து விளையாடியமை,

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளாதவர்? என்னும் குறட்பாக்களை அவர் ஆழமாக உணர்ந்திருந்ததை இண்மைப் பொருளை நன்கு புரிந்து கொண்டிருந்ததையும் புலப்படுத்தின. வள்ளுவரின் இக் கருத்துகளுக்குச் சிறப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/110&oldid=586179" இலிருந்து மீள்விக்கப்பட்டது