பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 99

மிக்க இலக்கியமாக அவர் திகழ்ந்ததைக் கண்டபொழுது என் உள்ளம் பெரும் பூரிப்பு அடைந்தது’ என்று நேரிற் கண் டுனர்ந்த காட்சியைக் கூறுகிறார் வெளிநாட்டுப் பெரியார் ஒருவர்.

குழந்தைகளிடம் உள்ள குறைகளைக் கண்டு மகிழத் தெரிய வேண்டும். அது பெரிய கலை. அதற்கு உள்ளத்தில் பொறுமை வேண்டும். வாழ்க்கையில் ஒய்வான அமைதி வேண்டும்’ என்பது எத்தகைய நுண்ணிய நோக்கின் வெளிப் பாடு ! குழந்தை என்னும் நூல் 1954 ஆம் ஆண்டு வெளி வந்தது.

நாடகம் :

எழுதுகோல் மன்னராகத் திகழ்ந்த பெர்னட்ஷா எந்தக் காட்சியையும் நாடகமாகவே சிந்திப்பார். அதுபோல் அறிஞர் மு.வ. வும் எக் காட்சியையும் நாடகமாகவே சிந்திக்கும் இயல்பு பெற்றிருந்தார். நாடகங்களைக் காண்பதிலும், நாடகக் கலையை வளர்ப்பதிலும் பேரார்வம் காட்டினர். நாடகத் தமிழ் எனத் தனிப்பிரிவு அமைத்து, தனி இலக்கணமும் கொண்டிருந்த தமிழ் நாடகக்கலை தக்க வகையில் போற்றப்படாது இருப்பது கண்டு வருந்துவார். அவ் வுணர்வுகள் வாளா ஒழியாமல் சில நாடக நூல்களை வழங்கின. எதிர்பாராத திருப்பம் ஒன்று ஏற் பட்டிருக்கவில்லை என்றால் மு.வ. முழுமையாக நாடகத் தமிழுக் குத் தொண்டு புரிந்திருப்பார். அதனை மேலே காணலாம்.

மனச் சான்று’, ‘காதல் எங்கே?’, ‘மூன்று நாடகங்கள்’ என்னும் மூன்றும் மு.வ. எழுதிய நாடக நூல்களாம். பச்சை யப்பர் வரலாறு நாடகமாக அமைக்கப் பெற்றதை அறிந்தோம். மு.வ. எழுதிய அல்லி’, ‘டாக்டர் அல்லி’ என்னும் பெயரால் நாடகம் ஆகி நடிக்கப் பெற்றது.

_

1. ஒளி விளக்கு டாக்டர் ஆர். இ. ஆஷர். தமிழாக்கம் திரு. க. த. திருநாவுக்கரசு, செந்தமிழ்ச் செல்வி 50: 212-8.

3. குழங்தை பக். 51.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/111&oldid=586180" இலிருந்து மீள்விக்கப்பட்டது