பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பெருந்தகை மு. வ.

முதல் மூன்று நூல்களிலும் உள்ள நாடகங்கள் கல்லூரி விழாக்களில் நடிப்பதற்காக எழுதப் பெற்றவை. நடித்துப் பாராட்டுப் பெற்றதுடன், படித்துப் பயன் பெறவும் நூல் வடிவு எடுத்தவை.

கமனச்சான்று என்னும் நூலில், “மனச்சான்று’, ‘கிம்ப ளம்’, ‘ஏமாற்றம்’, பொதுநலம்’ என்னும் நான்கு நாடகங் களும், காதல் எங்கே என்னும் நூலில், காதல் எங்கே?’

‘கடமை எங்கே?’ ‘நன்மை எங்கே?’ என்னும் மூன்று நாடகங் களும், மூன்று நாடகங்கள் என்னும் நூலில், ‘இளங்கோ’, ‘திலகவதியார்’, ‘வீண்கனவு’ (இராசேந்திர சோழனைப் பற்றி யது) என்னும் மூன்று நாடகங்களும் இடம் பெற்றுள்ளன.

நெல்ல திரு. டி. கே. கணபதி அவர்கள் அல்லியை நாடக மாக்கி, நெல்லை அருணகிரி இசைக் கழகத்தில் நடிக்கச் செய் தார். இந் நாடகத்தை மு.வ. வும் கண்டு மகிழ்ந்தார். ஒளவை தி. க. சண்முகம் அவர்களும் உடனிருந்து கண்டு உவகை யுற்றனர். நடிக்கப் பெறும் நாடகங்களிற் பல படிப்பதற் குரியனவாக அமைவதில்லை. நடிக்கவும் படிக்கவும் தகுதியுடைய தாக நாடகம் அமையுமாயின் அதுவே சிறப்புக் குரியது. அப் போதுதான் நாடகம் இலக்கியமாகவும் வளர இடமுண்டு. நடிக்கவும் படிக்கவும் இலக்கியத்திலே இடம் பெறவும் தகுதி வாய்ந்த நாடகம் அல்லி’ என்று திரு. சண்முகம் அணிந்துரை யில் குறிப்பிட்டுள்ளார்.

புதினங்கள் (நாவல்கள்) :

படித்தவர் மையத்திலெல்லாம்-குறிப்பாக மாணவ மான வியர் மையத்திலெல்லாம், எங்கள் மு.வ. என்று உரிமை கொண்டாடும் பரவிய பெருமையை வழங்கிய கதை நூல்களைப் பற்றி இனிக் காணலாம்.

நூலகம் என்னும் இதழின் சார்பாக நிகழ்ந்த பேட்டியில், முதல் நாவலை நீங்கள் எழுத முற்பட்டதற்கான துாண்டுதல் என்ன? என்று மு.வ. வினிடம் வினவப் பெறறது. அதறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/112&oldid=586181" இலிருந்து மீள்விக்கப்பட்டது