பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 101

மு.வ. அளித்த விடை, தாம் கதை எழுதத் தொடங்கிய கார ணத்தை நன்கு விளக்குவதாகும்.

‘எனக்கு நாடகத்தில் எப்போதும் ஆர்வம் உண்டு. நாடகங்கள் படிப்பேன்; பார்ப்பேன். எனக்குத் தோன்றிய கருவை அமைத்து ஒரு நாடகம் எழுதினேன். வெளியீட்டாள ரிடம் அதைக் கொண்டு போனேன். அவர் எனக்கு வேண்டி யவர். இருந்தாலும் தயங்கினர். நம் நாட்டில் நாடகங்கள் விற்பனை ஆவதில்லை; பலர் படிப்பதில்லை. ஆகையால் அதே கதையை நாவல் வடிவத்தில் எழுதினுல் பயன் இருக்கும் என்றார். அதல்ை தான் நாவல் முயற்சியில் ஈடுபட்டேன்.’

கவிதை :

கற்பனைத் திறம் அமைந்த மு. வ. தொடக்கநாளிலே கவிதைகளும் இயற்றினர். சேக்ஸ்பியர்கதை முதலியவற்றில் இடத்துக் கேற்ற வகையில் சில கவிதைகள் பாடிச் சேர்த்தார். குழந்தைப் பாடல்களும் பாடினர். சில விழாக்களில் வாழ்த்துக் கவிகளும் நன்றிக் கவிகளும் இயற்றிக் கூறினர். நண்பர்களும் பாராட்டினர். ஆயினும் அவருக்கு அதில் நிறைவு தோன்ற வில்லை. உரைநடையே அவர்க்கு ஏற்றதாக இருந்தது. அதனை அவரே உணர்ந்து போற்றினர். மு. வ. தம மாணவர் திரு. மின்னூர் சீனிவாசனிடம் இதனை ஒருமுறை வெளிப்படுத்தினர்.

‘என் இளவயதில் - உன்னைப் போன்ற இளைஞகை இருந்த சமயம் - நிறையப் பாடல்களாக எழுதிப் பார்த்தேன்; கலித்தொகை நூலைப் படித்துவிட்டுத் தரவு தாழிசை தனிச் சொல் சுரிதகம் என்றெல்லாம் அமைத்து இயற்றினேன். சிலர் என்மேல் அன்பு காரணமாக ஊக்கப்படுத்தினர்கள். ஆனல் எனக்கென்னவோ, கவிதை எனக்குரிய துறையே அல்ல என்று மிக விரைவில் புலப்பட்டு விட்டது. உரைநடையின் பக்கம் திரும்பி விட்டேன். இது ஒருவகையில் கவிதைக்கும் மற்றாெரு வகையில் உரைநடைக்கும் நல்லதாகப் போய்விட்டது; இல்லையா’ கவிதை எழுதாமல் இருந்து அதற்கு நான் தொண்டு

1. நூலகம், ஏப்ரல்-1969.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/113&oldid=586182" இலிருந்து மீள்விக்கப்பட்டது