பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பெருந்தகை மு. வ.

செய்கிறேன் இல்லையா என்று சிரித்துக் கொண்டே கேட்டது நினைவினின்று அகலாது.’

சிறுகதை :

மு. வ. எழுதிய சிறுகதைத் தொகுதிகள் மூன்றேயாம். அவை; விடுதலையா, குறட்டை ஒலி, பழியும் பாவமும் என்பன.

கள் குடிப்பதால் வருங்கேடுகளைக் கதையாகக் கூறும் நூல் பழியும் பாவமும். ‘ஒருவன் பட்டும் வைரமும் சுமந்துகொண்டு தலைநகரத்தின் பெரிய தெருவில் நிற்கிருன். ஒருவன் பழியும் பாவமும் சுமந்துகொண்டு எங்கோ ஓடி ஒளிகிருன். நல்ல

உலகம் இது’ என நூல் முடிகின்றது. இதன் வருவாய் திரு. வி. க. உயர்நிலைப் பள்ளிக்குரியது.

அந்த மனம் வருமா? என்பது முதலிய பதினெரு சிறு கதைகளைக் கொண்ட நூல் குறட்டை ஒலி, நாய்க்குட்டியையும் தன் குழந்தையாகக் கருதிப் பாலூட்டும் தாய்மனம் ஒருபக்கம்; தாமே தின்று ஏப்பமிட்டுக் குறட்டை ஒலிவிடும் பேய் மனம் ஒரு பக்கம்; இணைந்த இரட்டைக் குடியிருப்புகளைப் பற்றிய ஒரு சிறுகதையால் குறட்டை ஒலி என்னும் பெயரை நூல் தாங்கி யுள்ளது.

விடுதலையா என்பது முதலிய ஆறு சிறுகதைகளைக் கொண்டது விடுதலையா?’ என்னும் நூலாகியது. விடுதலையா என்பது மு. வ. தம் இளமைப் பருவ நிகழ்ச்சியையும், தம் அன்புப் பாட்டியார் நரசம்மாளைப் பற்றியும் எழுதியதாகும்.

இனி மு. வ. எழுதிய நாவல்களைக் காணலாம். செந் தாமரை, கள்ளோ? காவியமோ?, பாவை, அந்தநாள், மலர்விழி, பெற்றமனம், அல்லி, கரித்துண்டு, கயமை, நெஞ்சில் ஒருமுள், அகல்விளக்கு, மண் குடிசை, வாடாமலர் என்னும் பதின்மூன்று நாவல்களை மு. வ. எழுதியுள்ளார்.

நாவலைக் கருத்துக்காகப் படிப்பது என்னும் நிலையினைத் தமிழ் நாட்டு வரலாற்றில் உருவாக்கியவர் மு. வ. வே ஆவர். புது

1. யான்கண்ட மு. வ. பக். 8-9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/114&oldid=586183" இலிருந்து மீள்விக்கப்பட்டது