பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 103

நாவல் எப்பொழுது வருகிறது என்று எதிர்பார்த்திருந்து தேடிப் போய் வாங்கிப்படிக்கும் வாசகர் வட்டத்தைத் தமக்கெனப் பெற்றவரும் மு. வ. வே ஆவர். இலக்கிய இலக்கணங்களிலும் மொழியியலிலும் அழுத்தமான புலமை பெற்று ஆராய்ச்சி நூல்கள் படைத்துக்கொண்டு, அதே வேளையில் நயத்தக்க நாவல்களை எழுதித் தமிழ் உலகை ஆட்சி கொண்ட தனி ஒருவர் மு. வ. வே ஆவர்.

நூலகம் பேட்டி :

நூலகம் இதழ் தொடர்பாக ஒரு பேட்டி நடைபெற்றது. பேட்டி கண்டவர் மு. வ. வினிடம் சில விளுக்களை விடுத்தார். அவ் வினவும் விடையும் மு. வ. வின் நாவல்களைக் காணப் போகும் நமக்கு நல்ல துணை செய்வனவாம்.

வின . நீங்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வயதுள்ள வாசகர் களை மனத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற முறையில் உங்கள் நாவல்களை உருவாக்குவது வழக்கமா?

விடை : ஆம்! உயர்நிலைப் பள்ளிப் படிப்புள்ள இளைஞர்களும், குடும்பப் பெண்களும் விரும்பக் கூடிய முறையில் என் நாவல்களை எழுதுகிறேன்.

விஞ : நாவல் எம் முறையில் அமைதல் வேண்டும்?

விடை : வெறும் பொழுது போக்குக்காக என்று நான் எதையும் எழுதுவது இல்லை. இடையிடையே பொழுது போக்கு அம்சங்களை நான் வாசகர்களைக் கவருவதற்கான ஒரு கருவியாகவே பயன் படுத்துகிறேன். எழுத்தாளன் வாழ்க் கையின் முன்னேற்றக் கருத்துக்களைப் புறக்கணிக்கக் கூடாது. அதற்காக அப்பட்டமான நீதி போதனை அல்லது பிரச்சாரத்திலும் இறங்கிவிடக்கூடாது. எழுத்காளன் தான் ஒரு கலைஞன் என்பதை எப்போதும் மனததில் இருத்திக் கொள்ள வேண்டும். கலையைப் படைப்பதே முதல் கடமை. மற்றவற்றில் எந்த அளவு எதைச் சொல்ல லாம், எந் நிலையில் நிற்கவேண்டும் என்று வரையறுத்துக் கூறுவது கடின ம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/115&oldid=586184" இலிருந்து மீள்விக்கப்பட்டது