பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பெருந்தகை மு. வ.

/

வி:ை கதைகளுக்கான கருத்து, சம்பவம் முதலியவைகளை நீங்கள் உண்மை வாழ்க்கையில் இருந்து தேர்ந்து கொள்வ துண்டா? அல்லது எல்லாம் கற்பனையா?

விடை : பெரும்பாலும் சுற்றுப்புறத்தார், நண்பர்கள், உறவினர்களின் வாழ்க்கையில் காணும் பல உண்மைச் சம்பவங்களையே கதைகளுக்குத் தேர்ந்து கொள்கிறேன். சில சமயம் கற்பனைச் சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. அறிந்தோ அறியாமலோ சில நாவல்களில் என்னையே கூடக் கதாபாத்திரமாகச் சித்திரித்துக் கொண்டிருக் கிறேன்.”

விடுமுறை:

நாள்தோறும் எழுதுவது என்னும் கடமையை மு. வ. கொண்டிருக்கவில்லை. அதற்கு அவர் தம் பேராசிரியப் பணி வாய்ப்புத் தரவில்லை. விடுமுறைக் காலத்தை எல்லாம் மிக நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு எழுதினர். ஒரு விடுமுறை வாய்த்தால் அதில் ஒருநூலை உருவாக்கி முடித்தார். சிறிய விடு முறையாயின் சிறியதொரு நூலும், கோடை விடுமுறை ஆயின் பெரிய நூல் ஒன்றும் தொடர்ந்து எழுதினர். தொடக்க நாளில் வேலம், அம்மூர், திருப்பத்துர் ஆகிய இடங்களுக்குச் சென்று எழுதினர். 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர்க் குன்னூருக்கும், 1957 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 1971 ஆம் ஆண்டுவரை பெங்களூருக்கும் சென்று எழுதினர்.

வாழ்க்கைத் துணை :

தொடக்கநாளில் இரவு நெடுநேரம் வரை இவர் எழுதுவது வழக்கம். எழுதிக் கொண்டு பேணுவைக் கையில் பிடித்த நிலை யிலேயே உறங்கியும் போவார். இவர் தம் துணைவியார் பேணு வையும் தாளையும் எடுத்து வைத்துப் படுக்கையில் படுக்க வைப்பதும் உண்டு. மு. வ. வின் எழுத்துப் பணிக்கு இராதா அம்மையார் செய்த துணை மிகப் பாராட்டத் தக்கதாகும்.

1. நூலகம், ஏப்ரல் 1969.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/116&oldid=586185" இலிருந்து மீள்விக்கப்பட்டது