பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 105

எழுத்துப்பணி தடைப்படக் கூடாது என்பதற்காக வீட்டுக் கதவைச் சாத்திவிட்டுக் குழந்தைகளை வெளியே கொண்டுவந்து வேடிக்கை காட்டுவார். சில வேளைகளில் குழந்தைகளுடன் தம் ஊர்க்குச் சென்றும் மு. வ. எழுத்துக்குத் துணைபுரிவார். அங் கிருந்து திரும்பியதும் தாம் சென்ற இடத்திலும் பக்கத் து ஊரிலும் நடந்த நிகழ்ச்சிகளையும் கேட்ட நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கூறுவார். அவர் கூறும் செய்திகள் நாவலுக்குக்

கருவாக அமைவதுண்டு. ‘பாவை’, ‘மலர்விழி’, ‘கள்ளோ? காவியமோ? அகல்விளக்கு’, ‘வாடாமலர்’ ஆகியவை இவ் வண்ணம் உருவாகியனவாம். கள்ளோ? காவியமோ? வில்

வரும் மங்கை இராதா அம்மையாருக்குத் தெரிந்த ஒரு வேலைக் காரி ஆவர்.

இராதா அம்மையார் உயர்வு பெரிது. தம் கணவர் பெருமையையும் நல்வாழ்வையும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டதே அவர் உள்ளம். மு. வ. செந்தாமரை என்னும் முதல் நாவலை எழுதி முடித்தார். அதனை வெளியிடுதற்கு முயன்றார், வெளி யிடுமாறு அவர் கேட்ட பதிப்பகத்தார் எவரும் வெளியிட முன் வரவில்லை. ஆனல் மு. வ. சோர்வடையாமல் தாமே வெளியிடத் துணிந்தார். அதற்கு அவர் கையில் அப்பொழுது பணவாய்ப்பு இல்லை. இராதா அம்மையார் தம் நகைகள் சிலவற்றைத் தந்தார். அதனை அடைவு வைத்து அப் பணத்தால் முதல் நாவலை - செந்தாமரையை - வெளிக் கொணர்ந்தார். இதல்ை இராதா அம்மையார் வாழ்க்கைத் துணை என்பதற்கு எல்லா வகைகளாலும் எடுத்துக் காட்டாக இலங்கியமை தெளிவாம்.

செந்தாமரை:

செந்தாமரை 1948 இல் வெளிவந்தது. அந்த நாவலுக்கு மு.வ. இட்டிருந்த பெயர் முருங்கை மரம்’ என்பதாகும். ஆல்ை, மு. வ. வின் அன்பு மாணவருள் ஒருவராகிய திரு. ம. ரா. போ, குருசாமி அவர்கள் முருங்கைமரக் கதையைப் படித்து முடித் தார். இதற்குச் செந்தாமரை என்று பெயரிட்டாற் பொருத்த மாக இருக்கும் என்றார். அறிவறிந்த மாணவர் உரையை அன்பு ஆசிரியர் ஏற்றுக்கொண்டு செந்தாமரை எனப் பெயரிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/117&oldid=586186" இலிருந்து மீள்விக்கப்பட்டது