பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 109’

நிலைகளில் பலவாறு இகழ்ந்தும் பழித்தும் ஒதுக்கப்பட்டாள் ஒருத்தி. ஆயினும் அவளுடைய துாய நெஞ்சத்தில் தாய்மை யுணர்ச்சி ஒதுங்கவில்லை. ஒடுங்கவில்லை; நிறைந்து நின்று அவளுடைய வாழ்வை இயக்கியது’ என்பதை விளக்கும் நூல் பெற்ற மனம்.

அல்லி :

வாசகர் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திய நாவல் அல்லி யாகும். ஆணின் தவருன ஒழுக்கத்தால் மேனிலைப். படிப்புடைய ஒரு பெண் துன்புறும் அவல வாழ்வைப் படம்பிடித் துக் காட்டும் நூல் அல்லி. அது நாடகமாக வெளிப்பட்டதை யும் முன்னரே கண்டுள்ளோம்.

“இன் பத்திற்குத் துணையாக யாராலும் முடியும். ஈ எறும் பாலும் முடியும்; தேவையானபோது ஈயும் எறும்பும் நம்மைக் கேளாமலே வந்து மொய்க்கின்றன. அதுபோல் இன்பம் உள்ளவரை யார் வேண்டுமானலும் வந்து மொய்த்துக் கொள் வார்கள். ஆதலால் இன்பத்திற்குத் துணையாக வல்லவரை நம்பாதே. துன்பத்திற்குத் துணையாக இருக்க வல்லவரைத் தேடு; உறவாலுைம், நட்பானலும், காதலானலும் இப்படித் தான் தேடவேண்டும்'-இஃது அல்லியின் வாழ்வை எதிர் நோக்கிக் காணக் கிடைத்த ஒரு நூலின் வரிகள். குறிப்பேடுகள் :

இதன் கண் நான்கு வகைக் குறிப்பேடுகள் இடம்பெற்றுள. 1. சோமுவின் நாட்குறிப்பு. 2. அல்லி எழுதிவைத்த மருத் துவக் குறிப்பு. 3. அல்லியின் எது குற்றம்? என்னும் நூலைக் கற்றாேர் எழுதிய குறிப்பு. 4. சுப்புரத்தினம் தன் சிறிய ஏட்டில் எழுதி வைத்த குறிப்பு. குறிப்புகளால் விளையும் நலங்களை அல்லி நன்கு விளக்குகிறது. கரித் துண்டு:

ஓர் ஓவியக் கலைஞரின் வாழ்வை ஒவியமாக்கிக் காட்டும் நாவல் கரித்துண்டு. கரித்துண்டு கொண்டு ஓவியம் வரையும்

1. அல்லி. பக். 113. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/121&oldid=586191" இலிருந்து மீள்விக்கப்பட்டது