பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

士10 பெருந்தகை மு. வ.

ஒவியர் ஒருவரை மு. வ. வும் அவர்தம் மனைவியாரும் கண்டனர். அந்த ஓவியரைக் குறித்தே சில நாட்கள் தங்களுக்குள் உரை யாடினர். இந்த உரையாடலின் விளைவே கரித்துண்டு’

ஆயிற்று.

பெரிய மேகம் ஒன்று திங்களைத் தன் அகன்ற வயிற்றுக் குள்ளே விழுங்கி இறுமாந்திருந்தது. அந்த ஏழைத் திங்கள் அந்த நிலையிலும் கவலை எள்ளவும் இல்லாமல் தன்னல் இயன்ற அளவு ஒளியை உலகுக்கு அளித்து வந்தது. எப்போ தேனும் அந்த மேகத்தின் செல்வாக்குக்கு ஒரு முடிவு ஏற்படும்; ஆட்டனே திங்கள் தன் முழு நிலவையும் உலகிற்கு அளிக்கும்” என்னும் பகுதி நூலின் உட்பொருளை விளக்குமுகத்தான் ஆசிரியர் காட்டும் ஒரு காட்சியாகும்.

5 |LIo)ls) :

மு. வ வின் அடுத்த படைப்பு, கயமை என்னும் நாவலா கும். இதன் தலைப்பே நாவல் உலகிற்குப் புதுமை என்பார் நாவலாசிரியர் திரு. அகிலன்.

கயமை உள்ளங் கொண்ட ஆணவர் வாழ்வையும், அவர் தம் கொடுமைக்கு ஆட்பட்டு அல்லலுற்றார் வாழ்வையும், செல்வாக்குள்ளவர்களால் சமுதாயத்திற்கு ஏற்படும் கேடுகளை யும் தெள்ளத் தெளிவாக விளக்கிக் காட்டும் நூல் கயமை -யாகும.

வேங்கடேசன் கூறுகிருன் :

நல்லவர்களுக்கு ஒரேவழிதான் உண்டு; ரயில் வண்டி போல ஒரு பாதையில்தான் போகமுடியும்; பொல்லாதவர் களுக்கு எல்லா வழிகளும் உண்டு; ஆடு மாடுகள் போல் காடு மேடு எல்லாம் போய் அழிப்பார்கள். அதனுல்தான் பொல்லாத வர்கள் எப்போதும் யாரையும் ஏமாற்றி வசப்படுத்தி விடுகி ருர்கள்’. இது கயமை நாவலின் பிழிவு ஆகும்.

ക്കു -====

1. கயமை. பக். 311.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/122&oldid=586192" இலிருந்து மீள்விக்கப்பட்டது