பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பெருந்தகை மு. வ

பற்றி ஒரு கவிதை என்றால் அது ஏற்கனவே ரோஜா மலருக்குக் காணிக்கையாக்கப்பட்டு விட்டது. மீண்டும் மனிதர் ஒருவருக்கு ஏன் மறு காணிக்கையாக்க வேண்டும்? அது எப்படிப் பொருந் தும்?’ என்று காணிக்கை படைக்க விரும்பாக் காரணத்தை

விளக்குகிறார் மு. வ.

நடை :

கற்பாரைத் தம்பால் ஈர்த்துக்கொண்டு ஆழமாக எண்ணிப் பார்க்க வைப்பவர் மு. வ. அன்றியும் அவர் எழுதும் நடையா லும் வயப்படுத்தி அந்நடையே ஆட்சி புரியச் செய்தலிலும் திறம் வாய்ந்தவர். ‘எல்லார்க்கும் புரியும் நடை எளிதாக அமையும் மொழி இயல்பு, தெளிவாக விளக்கும் திறம், சிறிய தொடர்களால் அரும் பொருள்களையும் புரியக்காட்டும் புலமைஇவ்வியல்புகளைக்கூட்டி எழுதுவோமானல் வரதராசனர் வழிக்கு ஒருநாள் வந்து சேரலாம்’ என்கிறார் திரு. ஒளவை நடராசன்.

கதை மாந்தர் :

கதை மாந்தர் பெயர் சூட்டுதலில் தாம் கொண்டிருந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறார் மு. வ. ‘கதை மாந்தர்கள் என் உள்ளத்தில் பிறந்து வளர்கிறார்கள். அவர்களுக்குப் பெயர் வைக்கும் பொறுப்பு ஏற்படும்போது அவரவர்களின் பண்புகள் உள்ளத்தில் நின்று துாண்டுதல் புரிகின்றன. அதனுல் அப் படிப் பெயர்கள் அமைந்து விடுதல் உண்டு. சில வேளைகளில் நான் வைத்த பெயர்களுக்கு மாருக அவர்கள் வளர்ந்து விடுவ தும் உண்டு. கதை எழுதி முடிக்கும் வரையிலும் அவர்கள் என் உள்ளத்தில் வளர்ந்துகொண்டே இருப்பதால் நான் எதிர் பார்ப்பதற்கு மாருக அவ்வாறு மாறிவிடுவது உண்டு

1. என் ஆசான், திரு. மின்னூர் சீனிவாசன், மஞ்சரி 1974 டிசம் பர் பக். 59.

2. பேராசிரியர் மு. வ.-அ. மு. ப. கருத்தரங்கக் கட்டுரைகள் பக். 39

% திரு. தி. பாக்கியமுத்து, விடுதலைக்குப்பின் தமிழ் காவல்கள் பகி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/128&oldid=586198" இலிருந்து மீள்விக்கப்பட்டது