பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 117

பெயர் :

கதை மாந்தர்களுக்குப் பெரும்பாலும் தமிழ்ப் பெயரே சூட்டியுள்ளார் மு. வ. சிலர் இயல்புகளுக்கு ஏற்ப வேறு வகை யாலும் சூட்டியுள்ளார். பெற்றாேர்கள் தம் மக்களுக்கு நல்ல பெயர்களைச் சூட்டுவதற்கு மு. வ. வழிகாட்டுகிறார். அருளப்பர்’ ‘அல்லி அழகன், அறவாழி, அறிவன், அன்பரசி, ஆராவமுது, ஆளவந்தார், இளங்கோ, இன் பவல்லி, கண்ணழகன், கயற் கண்ணி, கலைவல்லி, கற்பகம், கோதை, சிவக்கொழுந்து, சீரா ளர், சுடர்விழி, செங்கதிர், செந்தாமரை, செல்வம், செவ்வேள், தாமரை, தாயம்மா, திருவேங்கடம், திருமகள், திருமலை, திருவாய்மொழி, தேமொழி, நல்லய்யன், நறுமலர், நாகு, நிலா, நெடுமாறன், பச்சைமலை, பண்பு, பாவை, பூங்கொடி, பெரு வளத்தான், பேராயிரம், பொய்யாமொழி, பொன்முடி, பொன்னி, மங்கை, மங்கை நல்லாள், மங்கையர்க்கரசி, மணி, மணிமேகலை, மணிவண்ணன், மரகதம், மருதப்பன், மலர்விழி, மல்லியம்மா, மழைக் கண்ணர், மாணிக்கவல்லி, மான்விழி, முத்தப்பன், முத்தய்யன், முத்தன், முருகையா, முனியம்மா, மெய்கண்டார், மெய்யப்பன், மென் மொழி, வடிவு, வடிவேலுவள்ளி, வாணி, வெண்ணிலா, வேலய்யன் முதலான பெயர்களை அவர் சூட்டி யுள்ளமை நாவல் உலகில் புதுமையானதாம்.

மொழிநடிை :

மு. வ. நாவலில் மற்றாெரு தனிச்சிறப்பு உண்டு. கொச்சை நடையையும், கலப்பு நடையையும் கையாள்வது இல்லை. குழந்தை மொழிக்கும், குடிகாரன் மொழிக்கும் விதிவிலக்குத் தந்ததை அல்லாமல் வேறு எவருக்கும் பிழையிலா மொழி தடையையே கையாண்டுள்ளார். நடைக் கொச்சையையும், கலப்பையும் அள்ளித் தெளித்துக் கலைக்கோலம் போடுவதாகக் கூறும் கதை எழுத்தாளர்கள் மு. வ. வின் நடைக் கொள்கை யைக் கருதிப் பார்த்தல் மொழிக்கு நன்மை செய்வதாம்.

மு. வ. வின் நாவல்களில் அமைந்துள்ள உத்தி, பாத்திரப் படைப்பு, நடை, கருத்தாழம்-ஆகியவற்றைப் பற்றியெல்லாம் தனித்தனியே ஆய்ந்து திறய்ைவு செய்துள்ளவர்கள் பலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/129&oldid=586199" இலிருந்து மீள்விக்கப்பட்டது