பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பெருந்தகை மு. வ.

7-11-65 ஆம் நாள் வழிபாடும் நிகழ்த்தப் பெற்றன. நீத்தார் வழிபாட்டினைக் கழகப் புலவர் திரு. ப. இராமநாத பிள்ளை அவர்கள் நிகழ்த்தினர்.

இந்தி எதிர்ப்பு:

மு. வ. மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் மிக்கவர். அதற்கு அப் பெயர்களால் அவர் வெளியிட்ட நூல்களே சீரிய சான்று பகரும். ஆயினும் 1965 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்புப் போரின்போது அவர்தம் தமிழ்ப் பற்று நன்கு புலனுயிற்று. “சட்டம் திருத்தப் படுமா?’ என்று அறை கூவல் விடுத்தார்.

மொழிப் பற்றாளர் சிலர் தமக்குத் தாமே நெருப்பு மூட்டிக் கொண்டு மடிந்தனர். பல இடங்களில் அரசு துப்பாக்கிக் குண்டுகளைப் பரிசாக வழங்கியது. இந் நிகழ்ச்சிகள் மு. வ. வைத் துயரத்தில் ஆழ்த்தின. துடிதுடிக்கச் செய்தன. ஆகலின், ‘மாணவரும் மக்கள் பலரும் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி யாகி மடிவதைத் தடுக்க முன் வந்து மடியும் உயிர்களைக் காக்க வேண்டும்’ என்று நடுவண் அரசுக்குத் தந்தி கொடுத்தார். மாநில அரசுத் தலைவர்களை நேரில் கண்டு நிலைமையை எடுத் துரைத்தார். சட்டம் திருத்தப் படுமா?’ என விளு எழுப்பி, ‘அச்சத்தைப் போக்க நல்லெண்ணத்தை வளர்க்க வழி ஒன்று தான். ஆட்சித்துறை, கல்வித்துறை, நீதிமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் ஆங்கிலத்தின் இடத்தில் தமிழ் வாழ, தமிழ் வளர, தமிழ் விளங்க உறுதி தருவார்களா? அடிமைத் தன்மையின் காரணமாக ஆங்கிலத்திற்காகக் குனிந்த தமிழ் இன்னும் நிமிர வில்லை. தமிழ் நிமிர்ந்து நிற்கும் வரையில் இந்தி விலகி நிற்குமா? அதற்கு ஏற்றபடி இந்திய அரசியல் சட்ட்ம் திருத்தப் படுமா?’ என்று விளக்கி இதழ்களுக்கு அறிக்கை விட்டார்.

அப்பொழுது தில்லியில் அமைச்சராக இருந்த திரு. சி. சுப்பிரமணியம் அவர்களும், திரு. ஒ. வி. அளகேசன் அவர் களும் தம் பதவி விலகல் செய்தனர். தலைமையமைச்சர் திரு. லால்பகதூர் சாத்திரியார், தமிழ் நாட்டு மக்களுக்கு, இந்தி கட்டாயமாகத் திணிக்கப்பட மாட்டாது. ஆங்கில மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/132&oldid=586203" இலிருந்து மீள்விக்கப்பட்டது