பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கை 121

தொடர்ந்து தொடர்பு மொழியாக இருக்கும்’ என உறுதி கூறிஞர். பின்னர்ப் புயல் ஓய்ந்தது.

பட்டம் துறப்பு :

1967 ஆம் ஆண்டில் நடுவண் அரசு மு.வ. வுக்கு பத்மபூரீ’ (தாமரைச் செல்வம்) என்னும் பட்டம் வழங்கியது. ஆனல், இரண்டு ஆண்டுகளுக்கு முன் கட்டாய இந்தி நுழைவை எதிர்த் தோரைக் கொடுமைக்கு ஆளாக்கிய அரசு தரும் பட்டத்தை ஏற்க மு.வ. வின் தமிழ் நெஞ்சம் ஏற்கவில்லை. ஆதலால் அப் பட்டத்தை வேண்டாவெனத் துறந்தார்.

மாநாடுகள் :

பச்சையப்பர் கல்லூரிப் பேராசிரியராக மு.வ. இருந்த காலத்திலே கலந்துகொண்டு சிறப்புச் செய்த மாநாடுகள் எண்ணற்றன. அவற்றைத் தனித்தனி விரிப்பின் அளவிறந்து பல்குமாதலின் குறிப்பிடத்தக்க சிலவற்றை மட்டும் காண் போம்.

1940 ஆம் ஆண்டு சனவரி 19, 20 ஆம் நாள்களில் சென்னை, சிந்தாதிரிப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. தலைமையில் பத்துப்பாட்டு மாநாடு’ நடைபெற்றது. அப்பொழுது அம் மாநாட்டில் கலந்து கொண்டு திருமுருகாற்றுப்படை குறித்து உரையாற்றினர். இருபத் தெட்டே வயதினராக இருந்த மு.வ. வின் சொல்லாற்றலும், ஆய்வுத் திறனும் ஆங்குக் குழுமியிருந்த அனைவர் உள்ளங்களை -யும் கொள்ளை கொண்டது. அதன் பின்னே, பல மாநாடுகள்

மு.வ. வைப் போட்டியிட்டு அழைத்துச் சிறப்புப் பெற்றன.

பத்துப்பாட்டு மாநாட்டுக்குச் சென்ற பெருமக்களுள் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களும் ஒருவர். அவருக்கு ‘இவ் வரிய சொற்பொழிவு காற்றாேடு காற்றாகப் போயொழிகின்றதே; இதனை நிலைபெறச் செய்யின் நாட்டுக்கும் மொழிக்கும் எத்துணைப் பயனும்?’ என்னும் எண்ணம் எழுந் தது. அதல்ை இலக்கிய மாநாடுகளுக்குத் திட்டம் வகுத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/133&oldid=586204" இலிருந்து மீள்விக்கப்பட்டது