பக்கம்:பெருந்தகை மு. வ.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

었 பெருந்தகை மு. வ.

அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே’

என்பது அப் பாட்டு.

உலகில் வாழ்ந்தவர் எனப் பெறுவார், புகழொடு வாழ்ந் தவரே ஆவர். புகழாளர், தாம் வாழ்ந்து காட்டும் வாழ்வால் வையகத்தையே தம்பால் நோக்க வைக்கும் மாண் புடையர். அவர்கள் இறந்தும், இறவாப் புகழினர்; செத்தும் சாவா உடம்பினர். இத்தகையவரையே,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்’

என்றார் பெருநாவலர்.

வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை :

வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாவது யாது? சான்றாேர் சென்ற நெறியிற் செல்லும் கருத்தும், கடைப்பிடியும் கொண்டு இலங்குவதே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாகும். எவ்வாறும் வாழலாம் என்று எண்ணி மனம்போன போக்கில் போகாமல், இவ்வாறுதான் வாழவேண்டும் என வரையறுத்துக் கொண்டு அறநெறியில் அஞ்சாமல் செல்லும் வாழ்க்கையே வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாம். இத்தகு வாழ்வுடையவரே, உலகோ ரால் போற்றி வணங்கப் பெறும் தெய்வ வாழ்வினர் என்னும் நிலைக்கு உயர்ந்தோர் ஆதல் உறுதி.

உரையும் பாட்டும் உடையோர் :

இவ்வுலகில் நாள்தோறும் எண்ணற்ற உயிர்கள் தோன்று கின்றன்; வாழ்கின்றன; மடிகின்றன. பிறந்தான், இருந்தான், இறந்தான் என்பதே மிகப் பலருடைய வாழ்வாகும், அத்திப் பழத்தில் தோன்றி மடியும் புழுப்போல, யாருக்கும் தெரியாமல் மடிவோரே எண்ணற்றாேர். ஆளுல், மிகச் சிலருடைய வாழ்வே உலகம் உள்ள அளவும் அழியாத வாழ்வினதாகவும், எடுத்துக் காட்டான வாழ்வினதாகவும் அமைகின்றது. இதனையே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருந்தகை_மு._வ.pdf/14&oldid=586211" இலிருந்து மீள்விக்கப்பட்டது